மசூதியில் ஈத் பெருநாள் தொழுகை நடத்த பரூக் அப்துல்லாவுக்கு அனுமதி மறுப்பு

14-08-2019 09:08 PM

ஸ்ரீநகர்

தேசிய மாநாட்டுக் கட்சி புரவலரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பாரூக் அப்துல்லா ஈத் பெருநாள் தொழுகையை மசூதி ஒன்றில் நடத்த அனுமதி கோரினார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்தத் தகவலை பாரூக் அப்துல்லா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வெளியிட்டார்.

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் புரவலருமான பாரூக் அப்துல்லா, ஸ்ரீநகரில் உள்ள குட்கார் சாலையில் இருக்கும் வீடு ஒன்றில் சிறை வைக்கப்பட்டுள்ளார். ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாரூக் அப்துல்லா வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட செய்தியை மறுத்தார்.

சிறையில் உள்ள குடும்பத்தார்

பரூக் அப்துல்லா மட்டுமல்ல, அவரது மகள் சபியா. சகோதரர் முஸ்தபா கமால் மற்றொரு மற்ற உறவினர்களான முசாபர் ஷா அப்துல்லா குடும்பத்தில் மிகவும் இளையவரான தண்ணீர் சாதிக் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் ஷேக் அப்துல்லா குடும்பத்தைச் சேர்ந்த மற்ற சிலர் வீட்டுக்கு திரும்ப வேண்டாமென வெளியிலேயே தங்கி இருக்கின்றார் வீட்டுக்கு திரும்பினாள் அவர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மாவட்ட மேஜிஸ்ட்ரேட், உள்ளூர் அதிகாரிகளும் நிலைமையை மதிப்பிட்டு தலைவர்களை வீட்டுச் சிறையில் வைப்பது குறித்து முடிவு எடுத்துள்ளனர் என கூடுதல் போலீஸ் இயக்குனர் ஜெனரல் முனீர் கான் தெரிவித்தார் இன்று ஸ்ரீநகரில் பல கட்டுப்பாடுகள் விளக்கப்பட்டன இந்திய சுதந்திர தினம் எந்த சிக்கலும் இல்லாமல் நடத்தப்பட வேண்டும் என்பது தான் அரசின் இன்றைய நோக்கமாக உள்ளது சில சில்லறை சம்பவங்களைத் தவிர ஸ்ரீநகரில் எந்த பிரச்சனையும் இல்லை என முனீர் கான் கூறினார்Trending Now: