பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவ நடவடிக்கை எடுக்க திட்டம் : இம்ரான்கான் புகார்

14-08-2019 09:01 PM

முசாபராபாத்

ஜம்மு காஷ்மீர் மக்களின் சிறப்பு அந்தஸ்துக்கு உதவும் அரசியல் சட்ட விதி 370ஐ ரத்து செய்த இந்திய அரசு, அடுத்ததாக "பாகிஸ்தான் வசம் உள்ள ஜம்மு காஷ்மீர் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு இருப்பதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவல்களின்படி பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்தால் நீங்கள் ஒரு செங்கல்லை பாகிஸ்தான் மீது வீசினால் நாங்கள் ஒரு பாறையை உங்கள் மீது வீசுவோம்" என்று இம்ரான் கான் எச்சரித்தார்.

பாகிஸ்தான் சுதந்திர தினத்தை ஒட்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகராகிய முசாபராபாத்தில் உள்ள மாநில சட்டமன்ற கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசினார்.

ஜம்மு காஷ்மீர் மக்களின் சிறப்பு அந்தஸ்துக்கு உதவும் அரசியல் சட்ட விதி 370ஐ ரத்து செய்த இந்திய அரசு அடுத்ததாக பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு இருப்பதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவல்களின்படி இந்தியா பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் கடும் எதிர் நடவடிக்கையை இந்தியா எதிர்கொள்ள நேரிடும் என  இம்ரான் கான் எச்சரித்தார்.

ஜம்மு காஷ்மீரில் அரசியல் சட்ட விதி 370 ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் சுதந்திர தினத்தை கொண்டாட போவதாக இம்ரான் கான் அறிவித்தார். பாகிஸ்தான் வசம் உள்ள ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் தேசிய தின உரையை நிகழ்த்தப் போவதாக இம்ரான் கான் அறிவித்தார்.

அதன்படி இஸ்லாமாபாத்தில் இருந்து முசாபராபாத் துக்கு வந்த போது அவரை பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர் ஜனாதிபதி சர்தார் மசூத் கான், பிரதமர் ராஜா பாரூக் ஹைதர் ஆகியோர் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் இம்ரான் கானை வரவேற்றனர் .அத்துடன் அணிவகுப்பு மரியாதையும் இம்ரான் கானுக்கு வழங்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு முசாபராபாத் சட்டமன்றத்தில் இம்ரான்கான் சிறப்பு சுதந்திர தின உரையை நிகழ்த்தினார்.

அவர் தனது சுதந்திர தின உரையில் இந்தியாவை விமர்சிப்பதற்கும்  இந்தியாவை ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் ஆர்எஸ்எஸ் கொள்கை சித்தாந்தத்தை விமர்சிப்பத்ற்கும்  நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார்.

அவரது உரையின் முக்கிய பகுதிகள் விவரம்:

இங்கு பேசிய பிரதமர் ராஜா பாரூக் ஹைதர்,  ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைகளை பறித்த இந்திய அரசு அடுத்து பாகிஸ்தான் காஷ்மீரில் மீது நடவடிக்கையை துவங்கும் என்று கூறினார். அதை  நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர் கூறியது ,சரியான கருத்து தான். அடுத்து பாகிஸ்தான் வசம் உள்ள ஜம்மு காஷ்மீர் மீது இந்திய ராணுவம் நடவடிக்கை எடுக்க திட்டம் தீட்டி இருக்கிறது.

இது குறித்த முழு விவரங்களும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு கிடைத்திருக்கிறது.

இந்த சமயத்தில் இந்திய பிரதமர் மோடிக்கு ஒரு செய்தியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு நான் விடுக்கும் செய்தி இதுதான்: பாகிஸ்தான் மீது நீங்கள் நேரடி நடவடிக்கை எடுத்தால், நீங்கள் ஒரு செங்கல்லை எங்கள் மீது வீசி எறிந்தால், அதற்கு தகுந்த பதிலடி கிடைக்கும். பாகிஸ்தானிலிருந்து ஒரு பாறை உங்களை தாக்குவதற்காக வீசப்படும். பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் மட்டுமல்ல, பாகிஸ்தான் நாடு முழுக்க தயாராக உள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து போராட பாகிஸ்தான் மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

இந்தியாவின் இந்தப் போர் இஸ்லாமுக்கு எதிரானது. சுதந்திரத்துக்காக இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்திய பொழுது மிகப் பெரும் படைகளை கூட தோற்கடித்து இருக்கிறார்கள் என்பது வரலாறு.

 நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்களின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பதில் நடவடிக்கைகள் எடுப்போம்.

 காஷ்மீர் மக்களின் உரிமையைப் பறித்து, அதன் மூலம் மிகவும் முக்கியமான தவறினை மோடி அரசு செய்துவிட்டது.

ஹிட்லரின் நாஜிக் கொள்கையை விட பாரதிய ஜனதாவின் ஆர்எஸ்எஸ் தத்துவம் மிகவும் மோசமானது . அந்த ஆர்எஸ்எஸ் அமைப்பில் மோடி சிறு வனாக இருந்த  காலத்திலேயே உறுப்பினராக இருந்திருக்கிறார்.

 அரசின் இந்த தத்துவம் காரணமாகவே கடந்த 5 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் வன்முறைகள் நடத்தப்பட்டுள்ளன.

 ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதும் அடுத்து என்ன நடக்கும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு செல்வம், வளம் வந்து சேரும் என்று அரசியல் சட்ட விதி 370 இரத்துச் செய்யும் பொழுது இந்தியப் பிரதமர் மோடி அறிவித்தார். ரஷ்யாவை தாக்கும் பொழுது ஜெர்மனியின் ஹிட்லர் இதை த்தான் கூறினார் . இதுபோன்ற நடவடிக்கைகளை தான் ஜெர்மனியின் நாஜிக்கள் மேற்கொண்டார்கள் .

ரஷ்யாவுக்கு ராணுவத்தை அனுப்பும் பொழுது உங்களுக்கு செல்வம் கிடைக்கும் என்று ஹிட்லர் கூறினார்.

 ஜவகர்லால் நேரு தந்த வாக்குறுதிகளை இப்பொழுது உள்ள இந்திய தலைவர்கள் மறந்துவிட்டார்கள்.

இஸ்லாமிய நாடுகள் ஜம்மு-காஷ்மீருக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தயங்கி இருக்கலாம். ஆனால் ஐக்கிய நாடுகள் சபை ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக குரல் கொடுக்கும் என நம்புகிறேன்.

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பாகிஸ்தானின் தூதுவராக நான் ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காக வாதாடுவேன்.

பாகிஸ்தான் மக்கள் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்திற்காக அங்கே கூட இருக்கிறார்கள்.

காஷ்மீர் மக்களின் உரிமைகளை ஒருபோதும் அழிக்க முடியாது என்பதை மோடிக்கு  மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றினார்.