எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம்! – குட்டிக்கண்ணன்

14-08-2019 03:58 PM

2018---–19-ம் ஆண்­டு­க­ளில் இந்­தியா முழு­வ­தும் 65,000 பொருள்­க­ளில் நடந்த சோத­னை­யில் 20,000 பொருள்­க­ளில் கலப்­ப­டம் இருந்­துள்­ளது. தமி­ழ­கத்­தில் 5,730 பொருள்­க­ளில் நடந்த சோத­னை­யில் 2,601 பொருள்­க­ளில் கலப்­ப­டம் செய்­யப்­பட்­டுள்­ளது. ஆக மொத்­தத்­தில் கலப்­ப­டம்  அதிகம் நடை­பெ­றும் மாநி­ல­மாக தமி­ழ­கம் திகழ்­கி­றது. இது குறித்து இந்­திய நுகர்­வோர் பாது­காப்பு மையத்­தின் துணை இயக்­கு­ந­னர் கிருஷ்­ண­னி­டம் எப்­ப­டி­யெல்­லாம் கலப்­ப­டம் நடை­பெ­று­கி­றது என கேட்­ட­போது.

 “நான் சூப்­பர் மார்க்­கெட்­டில்­தான் பொருட்­களை வாங்­கு­கி­றேன். கலப்­ப­டம் என்ற பேச்­சுக்கே இடம் இல்லை” என்று சிலர் கூலா­கச் சொல்­வார்­கள். அதிக விலை­கொ­டுத்து வாங்­கி­னால் கலப்­ப­டம் இருக்­காது என்­ப­தும் பல­ரின் நம்­பிக்கை. உண்­மை­யில் பாலில் தொடங்கி பனீர் வரை  எங்­கும் எதி­லும் எப்­போ­தும் கலப்­ப­டம்­தான். மக்­கள் அதி­கம் பயன்­ப­டுத்­தும் பொருட்­கள் மற்­றும் பிராண்­டு­க­ளில் சர்­வ­சா­தா­ர­ண­மா­கக் கலப்­ப­டங்­க­ளைச் செய்­கி­றார்­கள் கலப்­பட மன்­னர்­கள். தரம் குறைந்த பொருட்­களை வாங்­கி­வந்து, செயற்கை நிறம் கலந்­தும் பாலீஷ் செய்­தும் தர­மான பொருட்­க­ளைப் போல விற்­கி­றார்­கள்.

குறை­வான விலை என்­ப­தா­லும், நம்மை எல்­லாம் ஒன்­றும் செய்­யாது எனும் அசட்டு நம்­பிக்கை கார­ண­மா­க­வும் கலப்­ப­டப் பொருட்­கள் விற்­பனை எந்­தத் தடை­யும் இன்றி நடந்­து­கொண்டே இருக்­கி­றது. கலப்­ப­டம் என்­பது, ஆரோக்­கி­யத்தை அசைத்­துப்­பார்த்து, உயி­ருக்கே உலை­வைத்­து­வி­டும் மரண வியா­பா­ரம். அது ஒரு சமூக அநீதி எனும் புரி­த­லும் விழிப்­பு­வு­ணர்­வும் விற்­ப­வர்­க­ளுக்­கும் தேவை. நுகர்­வோ­ருக்­கும் தேவை.

டீ  கடை­க­ளில் பயன்­ப­டுத்­திய டீ தூள் கசடை குறை­வான விலைக்கு வாங்கி, அதை வெயி­லில் உலர்த்தி, சிவப்பு நிறம் சேர்த்து விற்­கின்­ற­னர். குறை­வான விலை­யில் கிடைக்­கும் டீ தூள்­க­ளில், இந்த சிவப்பு நிறம் கலக்­கப்­ப­டு­கி­றது. சாதா­ரண பில்­டர் பேப்­ப­ரில் டீ தூளைக் கொட்டி, நான்கு துளி­கள் நீர் விட்­டால், சிவப்பு நிறம் தனியே பிரி­வது தெரி­யும். குறிப்­பாக, ஊர்­களை மையப்­ப­டுத்தி விற்­கும் ஸ்பெஷல் டீ தூள்­கள் பெரும்­பா­லும் கலப்­ப­டங்­களே.

தர­மான கடுகை, கைக­ளில் வைத்து அழுத்­திப்­பார்த்­தால் அதன் உட்­பு­றம் மஞ்­ச­ளாக இருக்­கும். கச­கசா வகை­யைச் சார்ந்த அர்­ஜி­மோன் விதை­கள் கலக்­கப்­பட்­டி­ருந்­தால், கைக­ளில் நசுங்­கும்­போது, அதன் உட்­பு­றம் வெள்­ளை­யாக இருக்­கும்.

மஞ்­சள் தூளில், ஸ்டார்ச் பவு­டர் மற்­றும் மெட்­டா­னில் எல்லோ எனும் ரசா­ய­னம்  கலக்­கப்­ப­டு­கின்­றன. அரை ஸ்பூன் மஞ்­சள்­தூளை, 20 மி.லி இளஞ்­சூ­டான நீரில் கலந்து, அதில் இரண்டு துளி­கள் ஹைட்ரோ குளோ­ரிக் அமி­லத்­தைச் சேர்க்க வேண்­டும். இளம் சிவப்பு, ஊதா நிறத்­தில் நீர் மாறி­னால், அதில் மெட்­டா­னில் எல்லோ கலந்­தி­ருப்­பதை உறுதி செய்­ய­லாம்.

பச்­சை­மி­ள­காய், குட­மி­ள­காய் போன்­றவை அதி­கப் பச்­சை­யா­கத் தெரி­வ­தற்­காக, மால­சைட் கிரீன் எனும் ரசா­ய­னத்­தில் முக்கி விற்­கப்­ப­டு­கின்­றன. இதே­போல, உலர் பட்­டாணி ஊற­வைக்­கப்­பட்டு, மால­சைட் கிரீன் கலந்து பிரெஷ்­ஷாக இருப்­ப­து­போல் விற்­கப்­ப­டு­கி­றது. இவற்றை வெந்­நீ­ரில் போட்­ட­தும் பச்சை நிறம் வெளி­யே­றி­னால், அதில் மால­சைட் கிரீன் கலந்­தி­ருக்­கி­றது என்­ப­தைத் தெரிந்­து­கொள்­ள­லாம்.

பட்­டை­யில், கேசியா, சுருள் பட்டை எனும் இரு வகை­கள் உள்­ளன. இதில், சுருள் பட்­டை­யில்­தான் சத்­துக்­கள் உள்­ளன. கேசியா பட்­டை­யில் சாதா­ரண மரப்­பட்­டை­கள் நிறம் சேர்த்­துக் கலக்­கப் படு­கின்­றன. ஓரி­ரண்டு  பட்­டை­யைக் கசக்­கிப் பார்த்­தால், கைக­ளில் எந்த நிற­மும் ஒட்­டக் கூடாது.

பப்­பாளி விதை­க­ளைக் காய­வைத்­தால், மிளகு போலத் தெரி­யும். அதை, மிள­கில் சேர்த்து விற்­கின்­ற­னர். அதே­போல, பழைய மிள­கில் மின­ரல் ஆயில் எனப்­ப­டும் பெட்­ரோ­லி­யப் பொருள் கலக்­கப்­பட்டு, மெரு­கேற்­றப்­ப­டு­கி­றது. மிளகு பார்ப்­ப­தற்­குப் பள­ப­ளப்­பு­டன் மின்­னக் கூடாது. முகர்ந்­து­பார்த்­தால்  கெர­சின் வாடை  அடிக்­கக் கூடாது. கண்­ணாடி டம்­ள­ரில் 50 மி.லி தண்­ணீரை ஊற்றி, அதில் மிள­கைப் போட வேண்­டும். மூழ்­கி­னால் அது உண்­மை­யான மிளகு, மிதந்­தால் அது பப்­பாளி விதை.

சீர­கத்­தில், குதி­ரைச் சாணம் சேர்க்­கப்­ப­டு­கி­றது. தவிர, அடுப்­புக் கரி­யும் சேர்க்­கின்­ற­னர். சீர­கத்­தைத் தண்­ணீ­ரில் போட்­டால், சாணம் கரைந்­து­வி­டும். சீர­கத்­தைக் கையில் வைத்­துத் தேய்க்­கும்­போது, கறுப்­பாக மாறி­னால், அதில் அடுப்­புக் கரி சேர்க்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதே­போல, சீர­கம் போன்ற தோற்­றம்­கொண்ட ‘சத­குப்ப’ எனும் பொரு­ளை­யும் சேர்த்து விற்­பனை செய்­கின்­ற­னர். இதைப் பரி­சோ­த­னைக்­கூ­டத்­தில் மட்­டுமே கண்­ட­றிய முடி­யும்.

தனியா அடர்­ப­ழுப்­பாக இருக்­கும். ஆனால், டீலக்ஸ் தனியா என்­பதை வெள்­ளை­யாக மாற்ற, சல்­பர் டை ஆக்­சைட் சேர்க்­கப்­ப­டு­கி­றது. வெள்­ளை­யாக்­கப்­பட்ட தனி­யா­வைத் தவிர்த்­து­வி­ட­லாம். அது­போல, ஒரு ஸ்பூன் தனியா தூளில் தண்­ணீர் விடும்­போது, மேலாக தூசு போல படிந்­தால் அதில் மரத் தூள் கலந்­தி­ருக்­க­லாம்.

மஞ்­சள் நிற­மாக இருக்­கும் ஜவ்­வ­ரிசி டினோ­பால் போன்ற, பளீர் வெள்ளை நிறத்­தைத் தரும் ரசா­ய­னங்­க­ளால் தீட்­டப் படு­கி­றது. சிறிது மஞ்­ச­ளாக இருக்­கும் ஜவ்­வ­ரி­சி­யைப் பயன்­ப­டுத்­துங்­கள்.

அதி­காலை கறக்­கும் பால் சில்­லிங் சென்­ட­ருக்கு போகும் வரை­யில் கெட்­டுப்­போ­கா­மல் இருக்க, யூரியா, காஸ்­டிக் சோடா, டிடர்­ஜென்ட் போன்­ற­வை­யும் சேர்க்­கப்­ப­டு­கின்­றன. பாலை­யும் தண்­ணீ­ரை­யும் 10 மி.லி அள­வில் சம­மா­கக் கலக்­கும்­போது, நுரை வந்­தால் அதில் டிடர்­ஜென்ட் கலந்­தி­ருக்­க­லாம். மேலும், அரு­கில் விற்­கும் பால்­கா­ர­ரி­டம் பால் வாங்­கு­வதே கலப்­ப­டங்­க­ளி­லி­ருந்து தப்­பிக்க எளிய வழி.

மிள­காய்த் தூள் இதில், புற்­று­நோயை உண்­டாக்­கும் சூடான் டை கலக்­கப்­ப­டு­கி­றது. ஒரு கிளாஸ் தண்­ணீ­ரில், ஒரு ஸ்பூன் மிள­காய்த் தூளைக் கலக்­குங்­கள். அதில் பளீர் சிவப்பு வண்­ணம் வெளி­வந்­தால், அதில் சிவப்பு வண்­ணம் கலந்­தி­ருக்­க­லாம்.

தேங்­காய் எண்­ணெ­யைக் கண்­ணாடி பாட்­டி­லில் ஊற்றி பிரிட்­ஜில் வையுங்­கள். தடி­ம­னான திக்­கான படி­மம் எண்­ணெ­யின் மேல் படிந்­தால், அது சுத்­த­மான தேங்­காய் எண்­ணெய். நீர்த்த நிலை­யில் அப்­ப­டியே இருந்­தால், அதில் மலி­வான எண்­ணெய்­கள் கலக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

பஞ்­சைத் தேனில் நனைத்து, நெருப்­பில் காட்­டும்­போது, பஞ்சு எரிந்­தால் நல்ல தேன். எரி­யும்­போது சட­ச­ட­வென சத்­தம் வந்­தால், அது கலப்­ப­டத் தேன். தேனைத் தண்­ணீ­ரில் விட்­டால், கரை­யா­மல் அடி வரை சென்று தங்­கும். கரைந்­தால், அது வெல்­லப்­பாகு.

ஒரு கிளாஸ் தண்­ணீ­ரில் காபி பொடி­யைப் போட்­ட­தும், காபி பொடி மேலே மிதக்­கும். சிக்­கரி கலந்­தி­ருந்­தால், நீரில் மூழ்­கும்.

எண்­ணெயை ரீபைண்ட் செய்ய, பல ரசா­ய­னங்­கள் சேர்க்­கப்­ப­டு­கின்­றன. இந்த எண்­ணெ­யைப் பயன்­ப­டுத்­து­வது உடல்­ந­லத்­துக்கு ஆபத்தை விளை­விக்­கும். செக்­கில் ஆட்­டப்­பட்ட எண்­ணெய் வாங்­கிப் பயன்­ப­டுத்­த­லாம். எண்­ணெ­யில், 20 சத­வி­கி­தம் அள­வுக்கு வேறு ஒரு எண்­ணெ­யைக் கலக்­க­லாம். அர­சின் இந்த அனு­மதி, பல கலப்­ப­டங்­க­ளுக்­குக் கார­ண­மாக இருக்­கி­றது.

வெளி­யில் விற்­கப்­ப­டும் இட்லி மாவு, புளிக்­கா­மல் இருக்க, கால்­சி­யம் சிலி­கேட் சேர்க்­கப்­ப­டு­கி­றது. இதில் சுகா­தா­ர­மற்ற தண்­ணீர் சேர்ப்­ப­தால் இ-கோலை பாக்­டீ­ரியா (மலக்­க­ழி­வில் இருக்­கும் கிருமி) இருக்­கும். பல நோய்­களை உரு­வாக்­கும் கிருமி இது. எனவே, வீட்­டில் மாவு அரைத்­துச் சாப்­பி­டு­வதே நல்­லது. ஒரு கப் தண்­ணீ­ரில் ஒரு பனீர் துண்­டைப் போட்­டுக் கொதிக்­க­வி­டுங்­கள். ஆறி­ய­தும், சில துளி­கள் அயோ­டின் சொல்­யூ­ஷன் கலக்­க­வும். பனீர் நீல நிற­மாக மாறி­னால், அது கலப்­ப­டம். பனீர் தயா­ரிக்­கப்­பட்ட பாலில் கஞ்சி, மாவுப் பொருட்­கள் கலந்­தி­ருக்­க­லாம். நெய் வனஸ்­பதி அல்­லது வேக­வைத்து மசித்த உரு­ளைக்­கி­ழங்கு கலந்­தி­ருக்­கும். இதைப் பரி­சோ­தனை மையங்­க­ளில் மட்­டுமே கண்­டு­பி­டிக்க முடி­யும். வெண்­ணெயை வாங்­கிக் காய்ச்­சு­வது நல்­லது.

யாரி­டம் புகார் செய்­ய­லாம்...

தமி­ழ­கத்­தில் சென்னை, தஞ்­சா­வூர், சேலம், கோவை, மதுரை, திரு­நெல்­வேலி ஆகிய இடங்­க­ளில் பரி­சோ­தனை மையங்­கள் உள்­ளன. வாங்­கும் பொருட்­க­ளால், ஏதே­னும் பாதிப்­பு­கள் ஏற்­பட்­டால், அந்த ஊரில் உள்ள உண­வுப் பாது­காப்பு அலு­வ­ல­ரி­டம் புகார் கொடுக்­க­லாம். எந்­தப் பொரு­ளால் உடல்­ந­லக் கேடு ஏற்­பட்­டதோ, அந்த இடத்­துக்­குச் சென்று, அந்த உண­வின் சாம்­பி­ளைப் பரி­சோ­தனை செய்­வர். ரிப்­போர்ட்­டில் கலப்­ப­டம் எனத் தெரிந்­தால், விற்­ற­வர் மற்­றும் தயா­ரித்­த­வர் மேல் வழக்­குப் போடப்­ப­டும். பாதிக்­கப்­பட்­ட­வ­ருக்கு நிவா­ர­ண­மும் பரி­சோ­த­னைக்­குச் செல­வான பண­மும் திரும்ப வழங்­கப்­ப­டும். நுகர்­வோ­ருக்கு உண்­டான அலைச்­சல், மன உளைச்­ச­லுக்­குத் தகுந்த தொகை தரப்­ப­டும்.

பாதிப்­பு­கள்

உண­வுப் பொருட்­க­ளில் சேர்க்­கப்­ப­டும் அனு­ம­திக்­கப்­ப­டாத வண்­ணங்­கள் புற்­று­நோய்க்­குக் கார­ண­மா­க­லாம். அர்­ஜி­மோன் விதை­கள், பெட்­ரோ­லிய பொரு­ளான மின­ரல் ஆயில் போன்­ற­வை­யும் புற்­று­நோயை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யதே. ஆப்­பிள் மேல் பூசப்­ப­டும் மெழு­கில் ‘லெட்’ இருக்­கி­றது. இது வாந்தி, வயிற்­றுப்­போக்­கில் தொடங்கி நரம்பு மண்­ட­லத்­தையே பாதிக்­க­லாம். உண­வால் ஏற்­ப­டும் கழி­வு­க­ளைச் சிறு­நீ­ர­க­மும் கல்­லீ­ர­லும் சுத்­தம் செய்­கின்­றன. வீரி­ய­முள்ள ரசா­ய­னங்­க­ளால் இந்த இரண்டு உறுப்­பு­க­ளும் பாதித்து, செய­லி­ழந்து போக நேரி­டும். எப்­போதோ ஓரிரு முறை கலப்­பட உண­வு­க­ளைச் சாப்­பிட்­டால் பிரச்னை இல்லை. மாதங்­கள், ஆண்­டு­கள் எனத் தொடர்ந்து சாப்­பி­டும்­போது, உடல்­ந­லம் கெடு­வது உறுதி. உடலை உருக்­கு­லைக்­கும் நோய்­க­ளுக்­கான வாச­லும் இதுவே" என்­கி­றார்.Trending Now: