கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 15–08–19

14-08-2019 03:54 PM

சரியான இங்கிலீஷ்!

சிலர் ஆங்­கி­லத்­தைப் பயன்­ப­டுத்­தும் போது செய்­யும் தவ­று­களை உங்­க­ளுக்­குச் சுட்­டிக் காட்டி,  அந்­தத் தவ­று­களை எப்­ப­டித் தவிர்ப்­பது என்று உங்­க­ளுக்கு எடுத்­துக்­காட்­டு­க­ளு­டன் விளக்­கு­கி­றேன்.

dடிட்d (did) பயன்­ப­டுத்தி கேள்­வி­கள் கேட்­கும் போது, பலர் தவறு செய்­கி­றார்­கள்.                  

'அவன் வந்­தானா' என்று கேட்­கும் போது, சிலர்

dடிட்d  ஹீ கேம் (Did he came?) என்­கி­றார்­கள்.

ஆனால்,   dடிட்d  ஹீ கம் (Did he come?) என்­ப­து­தான் சரி­யான வாக்­கி­யம்.  

கேஸ் அடுப்பு சரி­யாக வேலை செய்­ய­வில்லை.

அதை சரி­செய்ய ஒரு­வர் பத்து மணிக்கு வரு­கி­றேன் என்று கூறி­யி­ருந்­தார்.

நாம் அப்­போது வேறு அலு­வ­லில் வெளியே சென்­று­விட்­டோம்.

பிறகு வீட்­டுக்கு திரும்­பும் போது,  நாம் கேட்­கக் கூடிய கேள்வி….  

dடிட்d  ஹீ கம் Did he come? (அவன் வந்­தானா அல்­லது அவர் வந்­தாரா)

(dடிட்d  ஹீ கேம் Did he came? என்­பது தவறு)

அதே போல், 'dடிட்d  ஹீ ஈட்? ' Did he eat? அவன் சாப்­பிட்­டானா?

(dடிட்d  ஹீ ஏட்? Did he ate? என்­பது தவறு)

'dடிட்d  யூ கால் ஹிம் யெஸ்­டர்டே? ' Did you call him yesterday? (நேற்று நீ அவனை அழைத்­தாயா?)

இந்த வாக்­கி­யத்­தில் 'dடிட்d  யூ கால்ட்d ஹிம் யெஸ்­டர்டே? ' Did you called him yesterday? என்று இருந்­தால் அது தவறு).

'dடிட்d  யூ bபை அ டிக்­கெட்? ' Did you buy a ticket? நீ ஒரு டிக்­கெட் வாங்­கி­னாயா? என்­பது சரி­யான வாக்­கி­யம். 'dடிட்d  யூ பைட்d அ டிக்­கெட்? ' Did you buyed a ticket? என்­பது தவறு.

டிட்d ராமு ஹெல்ப் ஹிஸ் மதர் லாஸ்ட் வீக். Did Ramu help his mother last week? கடந்த வாரம் ராமூ தன் தாய்க்கு உத­வி­னானா? இந்த வாக்­கி­யத்­தில் 'டிட்d  ராமு ஹெல்ப்ட்d (helped) ஹிஸ் மதர் லாஸ்ட் வீக்' என்று வந்­தால் தவறு.

மேற்­படி உதா­ர­ணங்­க­ளில் முக்­கி­ய­மா­கக் கவ­னிக்க வேண்­டி­யது, கேள்­வி­க­ளில் 'டிட்d' (did) என்­ப­தற்­குப் பின் வரும் வினைச் சொல், நிகழ் கால வடி­வத்­தில் தான் இருக்­கும் என்­பது. இதைப் புரிந்­து­கொண்டு பேசி­னால்/எழு­தி­னால் தவறு நேராது.

வேறு தவ­றான வாக்­கி­யங்­க­ளுக்­குச் சொல்­வோம்.

ஒரு­வர் கூறி­னார்…'ஐ ஸே திஸ் வித் பிரவ்ட்d' (I say this with proud). (நான் இதைப் பெரு­மை­யு­டன் கூறு­கி­றேன் என்று கூற நினைத்­தி­ருக்­கி­றார்).

ஆனால் ஐ ஸே திஸ் வித் பிரைட் ( I say this with pride) என்­ப­து­தான் சரி. பிரவ்ட்d என்­பது ஒரு பெய­ர­டைச் சொல் (அட்­ஜெக்­டிவ்). அது நல்ல அர்த்­தத்­தில் பெரு­மி­தம் என்ற


பொரு­ளில் பயன்­ப­டும், மற்­ற­படி, தலைக்­க­னம், செருக்கு என்ற பொரு­ளி­லும் வரும். பெயர்ச்­சொல்­லாக வரும் போது, அதைப் pபிரைட்d (pride) என்று பயன்­ப­டுத்­த­வேண்­டும்.

பிரவ்ட்d (proud) என்ற சொல்­லுக்கு ஒரு எடுத்­துக்­காட்டு வாக்­கி­யம் --  ஐ ஆம் பிரவ்ட்d tடு ஸே dதேட் ஐ ஆம் ஆன் இண்d­டி­யன்.  I am proud to say that I am an Indian. இந்­தி­யன் என்று என்­னைக் கூறிக்­கொள்ள நான் பெரு­மைப்­ப­டு­கி­றேன்.

'எனக்­குப் பத்து வரு­டம் அனு­ப­வம் இருக்­கி­றது'  என்­பதை, ' ஐ ஆம் டென் இயர்ஸ் எக்ஸ்­பீ­ரி­யன்ஸ்' (I am ten years experience) என்று ஒரு­வர் எழு­தி­னார். 'ஐ ஹேவ் டென் இயர்ஸ் எக்ஸ்­பீ­ரி­யன்ஸ்' (I have ten years experience) என்­ப­து­தான் சரி­யான வாக்­கி­யம்.

'ஐ ஆம் வெரி எக்­பீ­ரி­யன்ஸ்ட்d இன் திஸ் வர்க்' (I am very experienced in this work) என்று கூற­லாம். நான் இந்த வேலை­யில் அதிக அனு­ப­வம் உள்­ள­வன் என்று பொருள்.

ஒரு­வர் தன்­னு­டைய பெய­ரைக் குறி­பப்­பி­டும் போது, 'மை நேம் கே. கே. மோகன்' என்­றார். 'என் பெயர் கே. கே. மோகன்' என்று ஆங்­கி­லத்­தில் கூற வந்­த­வர், இது­போன்ற வாக்­கி­யத்­தில் 'இஸ்' (is) வரும் என்­பதை மறந்­து­விட்­டார்  (அல்­லது அறி­யா­மல் இருந்­தார்). ஆகவே, இந்த வாக்­கி­யம், 'மை நேம் இஸ் கே. கே. மோகன்' (My name is K.K.Mohan) என்று இருக்­க­வேண்­டும்.

இன்­னொ­ரு­வ­ருக்கு  தூக்­கம் சரி­யா­ன­படி வராத பிரச்னை இருந்­தது. அதற்கு ஒரு தீர்வு கூறப்­பட்­ட­தும் அவ­ருக்கு நல்ல தூக்­கம் வந்­தது. அதன் பிறகு அவர் கூறி­னார், 'ஐ ஹேட்d அ gகுட்d ஸ்லீப்'. I had a good sleep (நான் நன்­றா­கத் தூங்­கி­னேன்) . ஆனால் இது அவ்­வ­ளவு சரி­யான பயன்­பாடு அல்ல. இர­வுத் தூக்­கம் என்­றால் 'ஐ ஹேட் அ குட் நைட்ஸ் ஸீலீப்' ( I had a good night’s sleep) என்­றும் அல்­லது 'ஐ ஸ்லெப்ட் வெல்' (I slept well) என்­றும் குறிப்­பி­ட­லாம்.                                                     ஸ்லீப் (sleep) என்­ப­தன் கடந்த கால வடி­வம் ஸ்லெப்ட்t  (slept). 'ஐ ஸ்லெப்ட் வெல்' (I slept well) என்­றால் 'நான் நன்­றா­கத் தூங்­கி­னேன்' என்ற பொருள்.

ஒரு பாட­லைக் கேட்­ட­வு­டன், 'திஸ் இஸ் வொன் ஆஃப் மை ஃபேவ­ரெட் சாங்க்' (This is one of my favourite song) என்­றார் ஒரு­வர்.

இது நான் மிக­வும் விரும்­பு­கிற (ஃபேவ­ரெட்) பாடல்­க­ளில் ஒன்று என்று கூற­வேண்­டும் என்­பது அவர் எண்­ணம்.  ஆனால் 'பாடல்­க­ளில்' (சாங்ஸ்) என்று கூறா­மல் 'பாடல்' (சாங்) என்று கூறு­வது இலக்­க­ணப்­பிழை. ஆகவே 'திஸ் இஸ் வொன் ஆஃப் மை ஃபேவ­ரெட் சாங்ஸ்' (This is one of my favourite songs) என்று கூற­வேண்­டும்.

இதே போல் வரக்­கூ­டிய வேறு சில வாக்­கி­யங்­க­ளைப் பார்ப்­போம்.

'ஹீ இஸ் வொன் ஆப் த டாப் பர்­ஸன்ஸ் இன் தேட் கம்­பெனி'. He is one of the top persons in that company. அந்த நிறு­வ­னத்­தின் டாப் நபர்­க­ளில் அவர் ஒரு­வர்.

வொன் ஆஃப் த பர்ட்ஸ் ஆன் தேட் டிரீ இஸ் ரெட்.  One of the birds on that tree is red. அந்த மரத்­தில் இருக்­கும் பற­வை­க­ளில் ஒன்று சிவப்பு (நிறத்­தில் உள்­ளது).

'ஹீ இஸ் வொன் ஆஃப் மை ஃபிரெண்ட்' என்­பது தவறு. 'ஹீ இஸ் வொன் ஆஃப் மை பிரெண்ட்ஸ்' (He is one of my friends) என்று கூற­வேண்­டும். வாக்­கி­யங்­க­ளைப் பக்­கா­வாக ஒட்­டு­வ­து­தான் இலக்­க­ணம். அதை உணர்ந்து வாக்­கி­யங்­களை அமைத்­தால் வெற்றி

நிச்­ச­யம்.Trending Now: