விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு வீர் சக்ரா விருது அறிவிப்பு

14-08-2019 02:23 PM

புதுடில்லி

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு வீர் சக்ரா விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று போர்க்களத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தை துரத்திச் சென்று தாக்கி அழித்தவர் அபிநந்தன்.

அப்போது, அவரது விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தததால் அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கியபோதும் அந்த சூழ்நிலையை அவர் தீரத்துடன் எதிர்கொண்டு இந்தியாவுக்கு திரும்பி வந்தார்.

இந்நிலையில், அபிநந்தனின் வீர தீர செயலை பாராட்டி அவருக்கு மத்திய அரசு வீர் சக்ரா விருது அறிவித்துள்ளது. இந்த விருது சுதந்திர தினமான நாளை (வியாழக்கிழமை) அவருக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பிரகாஷ் ஜாதவுக்கு கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.Trending Now: