காவல் ஆய்வாளரை காஞ்சி கலெக்டர் கண்டித்த விவகாரம் - அரசு பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

13-08-2019 07:13 PM

காஞ்சிபுரம்,

அத்திவரதர் விழா பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை ஆய்வாளரை வசைபாடியது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு பதில் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அத்திவரதர் பாதுகாப்புப் பணியில் இருந்த திருவள்ளூர் காவல்துறை ஆய்வாளர் ரமேஷ்  விஐபி பாஸ் இல்லாமல் வி.ஐ.பி. தரிசன வரிசையில் சிலரை அனுமதித்ததாக கூறி மாவட்ட ஆட்சியர் வசைபாடியது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

பொதுமக்கள், காவலர்கள் முன்னிலையில் காவல் ஆய்வாளரை மாவட்ட கலெக்டர் வசைபாடியது மனித உரிமை மீறல் என தெரிவித்துள்ள மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு தலைமைச் செயலாளர்,  டி.ஜி.பி., காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆகியோர் 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.Trending Now: