பாரத் போர்ஜ் நிறுவனத்தின் லாபம் 28% சரிவு

13-08-2019 06:06 PM

புதுடெல்லி

மோட்டார் வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனம் ஆகிய பாரத் போர்ஜ் நிறுவனம் தன்னுடைய லாபத்தில் 28 சதவீதம் குறைந்து விட்டதாக அறிவித்துள்ளது,

நடப்பு ஆண்டில் அதன் லாபம் ரூ 171. 92 கோடி ஆகும். சென்ற ஆண்டு நிகர லாபம் ரூபா 238.74 கோடி ஆகும்.

நடப்பு நிதியாண்டில் பாரத் போர்ஜ்  நிறுவனத்தின் மொத்த வருமானம் 2372 கோடியாகும். 

சென்ற ஆண்டு மொத்த வருமானம் ரூ.2454 கோடி ஆகும் மொத்த வரவு 3.31 சதவீதம் குறைந்துள்ளது.

பாரத் போர்ஜ்  நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த ஆவணம் ஒன்றில் இந்த புள்ளிவிபரத்தை தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகன சந்தையில் தற்போது தேவை மிகவும் குறைவாக இருப்பதால் தேவையை ஊக்குவிக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் காரணமாக 2019-20  ஆண்டில் சந்தை நிலைமை சீராகும் என்று எதிர்பார்ப்பதாக பாரத் நிறுவனத்தின் தலைவரும் மானேஜிங் டைரக்டருமான கல்யாணி தெரிவித்தார். 

மும்பை பங்குச் சந்தையில் பாரத் போர்ஜ் நிறுவனத்தின் பங்குகள் 4.3 சதவீத இழப்புடன் விற்பனையாகிக் கொண்டுள்ளன. பாரத் போர்ஜ்  நிறுவனத்தின் ஒரு பங்கு விலை ரூபாய் 408.50 பைசா ஆகும்.Trending Now: