ஜம்மு காஷ்மீர் நேரில் வரும்படி ஆளுநர் சத்யபால் மாலிக் விடுத்த அழைப்பை ஏற்றார் ராகுல் காந்தி

13-08-2019 05:02 PM

புதுடில்லி,

ஜம்மு காஷ்மீருக்கு நேரில் வருகை தரும்படி ராகுல் காந்திக்கு ஆளுநர் சத்யபால் மாலிக் திங்கள்கிழமை அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று சில எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஜம்மு காஷ்மீர் வர ராகுல் காந்தி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் அங்கு சட்ட ஒழுங்கை பாதுகாக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இணையம் மற்றும் தொலைபேசி சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளியூரில் வசிப்பவர்கள் ஜம்மு காஷ்மீரில் உள்ள தங்கள் குடும்பத்தினருடன் பேச முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு கூறுவது போல் ஜம்மு காஷ்மீரில் நிலைமை சுமூகமாக இல்லை. அங்கு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

ராகுல் காந்தி கூறியதை ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் மறுத்தார்.

ஜம்மு காஷ்மீரின் உண்மையான நிலையை தெரிந்துகொள்ள ராகுல் காந்தி இங்கு நேரில் வர வேண்டும். அவருக்காக தனி விமானம் அனுப்பப்படும் என்று ஆளுநர் சத்யபால் மாலிக் நேற்று அழைப்பு விடுத்தார்.

ஆளுநர் சத்யபால் மாலிக்கின் அழைப்பை ஏற்பதாக ராகுல் காந்தி டுவிட்டரில் இன்று பதிலளித்துள்ளார்

 ‘‘மதிப்புக்குரிய ஆளுநர் மாலிக் அவர்களே, உங்களது அழைப்பை ஏற்று நானும் எதிர்க்கட்சி தலைவர்கள் சிலரும் ஜம்மு காஷ்மீருக்கு வருகிறோம். ஆனால் எங்களுக்கு தனி விமானம் தேவையில்லை. ஜம்மு காஷ்மீரில் சுதந்திரமாக பயணிக்கவும் மக்கள், அரசியல் தலைவர்கள், ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடவும் அனுமதித்தால் போதும்’’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.Trending Now: