மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து புதிய கிளவுட் மையங்கள் அமைக்க ஒப்பந்தம்: முகேஷ் அம்பானி அறிவிப்பு

12-08-2019 08:12 PM

மும்பை

இந்தியாவில் டிஜிட்டல் பரிணாம வளர்ச்சியை ஏற்படுத்தவும் புதிய கிளவுட் டேட்டா மையங்களை உருவாக்கும் நீண்ட கால திட்ட அடிப்படையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது.

இந்தத் தகவலை 42வது ரிலையன்ஸ் ஜியோ பொதுப்பேரவை கூட்டத்தில் பேசும் பொழுது முகேஷ் அம்பானி வெளியிட்டார்.

நாடெங்கிலும் பெரிய விரிவானகிளவுட்  டேட்டா சென்றவர்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அமைக்கும். அதனை இயக்கும் பணியை மைக்ரோசாப்ட் அஜூர்  நிறுவனம் மேற்கொள்ளும் என முகேஷ் கூறினார்.

இந்த டேட்டா கிளவுட் சென்டர்களை பயன்படுத்த விரும்பும் இந்திய கம்பெனிகள் டிஜிட்டல் தொழில்நுட்பம் பெற்றவர்களாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் டேட்டா கிளவுட்சென்டரை பயன்படுத்த முடியும் என்று முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.