ஹாங்காங் நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் விமான நிலையத்தில் புகுந்து முற்றுகை; விமானங்கள் ரத்து.

12-08-2019 05:01 PM

ஹாங்காங்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஹாங்காங் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சுட்டனர். ஒரு பெண்ணின் கண்ணில் ரவை பாய்ந்துவிட்டது. அந்தப் பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அந்த நகர போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் போலீஸார் ரவைக்குண்டுகள் நிரப்பிய  துப்பாக்கியால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சுட்டனர். ஒரு ரவைக்குண்டு  ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த பெண்ணின் கண்ணில் பாய்ந்துவிட்டது. உடனடியாக அவர் தரையில் சாய்ந்தார். அவர் கண்ணில் இருந்து ரத்தம் வழியத் தொடங்கியது.

அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

இந்தச் செய்தி அந்த நகரம் முழுக்க அதிவிரைவில் பரவி விட்டது. அதனால் திங்கட்கிழமை பெரும் எண்ணிக்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நகர தெருக்களில் கூடினார்கள்.

 ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரே வீச்சில் ஹாங்காங் விமான நிலையத்துக்குள் புகுந்தனர். விமான நிலையத்தில் எந்த பணியும் நடக்கவிடாமல் அவர்கள் விமான நிலையத்தின் எல்லாப்பகுதிகளிலும் புகுந்து கொண்டனர். அதனால் விமானங்கள் வந்து இறங்குவதும்  விமானங்கள் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வேறு விமான நிலையங்களுக்கு செல்வதும் பாதிக்கப்பட்ட து.

திங்கட்கிழமை ஹாங்காங்  விமான நிலையம் முற்றிலும் செயலிழந்துவிட்டது. வெளியில் இருந்து ஒரு விமானம் கூட விமான நிலையத்தில் தரை இறங்க அனுமதிக்கப்படவில்லை. அதேபோல விமான நிலையத்தில் இருந்து வேறு இடங்களுக்கு பறந்து செல்ல எந்த விமானத்தையும் அனுமதிக்கவில்லை.

தென் கொரியாவில் இருந்து ஆங்காங்கு நகருக்கு சுற்றுலா பயணத்துக்காக ஹாங்காங் வந்திருந்த பெண் ஒருவர் எல்லாம் விமானங்கள் ரத்து செய்யப்பட்ட போதிலும் ஆர்ப்பாட்டக்காரர்களை முழுக்க முழுக்க தான் ஆதரிப்பதாகக் கூறினார். கண்ணில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த  பெண்ணின் புகைப்படத்தை நான் பார்த்தேன். அது எனக்கே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது .இதே உணர்வுடன் தான் நகர மக்கள் அனைவரும் இருப்பார்கள் என்று நம்புகிறேன். எனக்கு விமானம் ரத்து செய்யப்பட்டது கஷ்டமாகத்தான் உள்ளது. ஆனாலும் எனக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வருத்தம் இல்லை என்று அந்த தென் கொரிய பெண் கூறினார்.

 ஆனால் நகர விமான நிலையத்தில் எந்த விமானமும் வரவில்லை அங்கிருந்து எந்த விமானமும் வெளியேற வில்லை என்ற செய்தியை விமான நிலைய பேச்சாளர் மறுத்தார். விமானங்கள் வந்து இறங்கிக் கொண்டிருக்கின்றன .இங்கிருந்து சில விமானங்கள் புறப்பட்டுச் சென்றுள்ளன.பறந்த விமான எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது என அவர் கூறினார்.