நாவை வென்றவன் சாவை வென்றவன்!

12-08-2019 03:41 PM

* மனிதனை உயர்த்துவது எது?

    அடக்கம்.

* எது நம்முடைய நேரம்?

    எந்த நேரத்தில் இறைவனுடைய திருநாமத்தை நினைக்கின்றோமோ, அந்த நேரம்.

* எது நம்முடைய செல்வம்?

    எது தர்மத்தில் செலவழிந்ததோ அது.

* சாவை வென்றவன் யார்?

    நாவை வென்றவன்.

* செல்லும் இடத்துக்கு சிறப்பு வருவது?

    நண்பர்களால்.

* சபைக்குச் சிறப்பு யாரால்?

    சான்றோர் நிறைந்திருப்பதால்.

* பிறவிக்குச் சிறப்பு எது?

    கற்ற நூலறிவு கொண்டிருப்பது.

* தவத்தில் சிறந்த தவம் எது?

    தாய், தந்தையரைப் பணிதல்.

* மூன்று உலகங்களிலும் பிரகாசிப்பது எது?

    பயன் கருதாது செய்த தர்மம்.

* விஷத்தை உண்பது போன்றவன் யார்?

    தானம் செய்யாமல் புசிப்பவன்.

(‘வாரியாரின் ஒரு வரி பதில்’ நூலிலிருந்து.....)