சேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 12–8–19

12-08-2019 02:31 PM

இந்திய பங்குச் சந்தை நிலவரம்

சந்­தை­கள் இந்த வாரம் புதிய உயிர் பெற்­றன என்­றால் மிகை­யா­காது. பரம பதத்­தில் பாம்­பின் வாயில் அகப்­பட்டு கீழே சென்று கொண்­டி­ருந்த சந்­தைக்­கும் ஒரு ஏணி கிடைத்­தது.

பட்­ஜெட்­டுக்கு பிறகு சந்­தை­கள் எத­னால் கீழே சென்று கொண்­டி­ருந்­த­னவோ, அத­னாலே மேலே இந்த வாரம் வியா­ழன், வெள்­ளி­யன்று சென்­றது.

 என்ன புதி­ராக இருக்­கி­றதா? பட்­ஜெட்­டில் அறி­விக்­கப்­பட்ட வெளி­நாட்டு போர்ட்­போ­லியோ இன்­வெஸ்­டர்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த வரி தற்­போது நீக்­கப்­ப­ட­லாம் என்று வந்த செய்­தி­க­ளால் தான் சந்தை மறு­படி உயிர்த்­தெ­ழுந்து இருக்­கி­றது.

இந்த வாரம் சந்­தை­கள் குறிப்­பாக வங்­கிப் பங்­கு­கள் மேலே சென்ற கார­ணம், ரிசர்வ் வங்கி அறி­வித்த 35 புள்­ளி­கள் சத­வீ­தம் வட்­டிக் குறைப்பு. இது கடன் களுக்­கான வட்டி விகி­தங்­களை குறைக்­கும். அதே சம­யம் டெபா­சிட்­க­ளுக்­கான வட்டி விகி­தங்­க­ளை­யும் குறைக்­கும். தொடர்ந்து டெபா­சிட்­க­ளுக்­கான வட்டி விகி­தங்­கள் குறை­வது கவ­லை­ய­ளிக்­கக்­கூ­டிய விஷ­யம் தான் குறிப்­பாக மூத்த குடி­ம­கன்­க­ளுக்கு.

கிட்­ட­தட்ட 1000 புள்­ளி­கள் வரை திரும்ப பெற்­றி­ருக்­கி­றது. இருந்­தா­லும் இழந்­தது இன்­னும் அதி­கம் தான்.

வெள்­ளி­யன்று இறு­தி­யாக

வெள்­ளி­யன்று இறு­தி­யாக மும்பை பங்­குச் சந்தை    254                  புள்­ளி­கள் கூடி     37581            புள்­ளி­க­ளு­ட­னும், தேசிய பங்­குச் சந்தை   77        புள்­ளி­கள் கூடி        11109                   புள்­ளி­க­ளு­ட­னும் முடி­வ­டைந்­தன.  உல­கம் முழு­வ­தும் சந்­தை­கள் கூடி வரும் போது இந்­திய சந்­தை­கள் கடந்த சில வாரங்­க­ளாக கீழே இறங்கி சென்­றது வழக்­கத்­திற்கு மாறான ஒன்று. ஆனால் கார­ணங்­கள் இல்­லா­மல் இல்லை.

மழை

மழை இந்த வரு­டம் தேவைக்கு அதி­க­மாக பல இடங்­க­ளில் பெய்து வெள்­ளத்தை உண்­டாக்கி உள்­ளது. பல இடங்­கள் இன்­னும் மழை இல்­லா­மல் இருக்­கி­றது. மும்­பை­யில் செப்­டம்­பர் 15 தேதி­கள் ஒவரை மழை இருக்­கும். ஆனால் ஆகஸ்ட் முதல் வாரமே இந்த வரு­டத்­தின் 91 சத­வீ­தம் மழை பெய்­தி­ருக்­கி­றது. இது போல கர்­நா­டகா, குஜ­ராத், மகா­ராஷ்­டிரா, ஓரிசா என்று பல மாநி­லங்­க­ளி­லும் அதி­கப்­ப­டி­யான மழை.

கார் சேல்ஸ்-க்கு என்­னாச்சு?

எக­னாமி சுலோ டவுன் ஆகிக்­கொண்டே வந்­த­த­னால் கார் வாங்­கும் எண்­ணம் இருந்­த­வர்­கள் கூட இன்­னும் சிறிது நாள் கழித்து வாங்­க­லாம் என்று தள்­ளிப்­போட்டு கொண்டு வந்­தார்­கள். மேலும், பட்­ஜெட்­டில் எலக்­டி­ரிக் வாக­னங்­கள் வாங்­கு­ப­வர்­க­ளுக்கு வரிச்­ச­லுகை, ஜி.எஸ்.டி. சலுகை கொடுக்­கப்­ப­டும் என அறி­விக்­கப்­பட்­ட­வு­டன் சாதா கார் வாங்க நினைத்­த­வர்­கள் எல்­லாம் எலக்­டி­ரிக் காருக்­காக வெயிட் செய்ய ஆரம்­பித்­தார்­கள். நல்ல எண்­ணத்­து­டன் வரும் அர­சாங்க அறி­விப்­பு­கள் எதிர்­மறை விளை­வு­களை கொண்டு வரும் என்­ப­தற்கு இது ஒரு எடுத்­துக் காட்டு.

இது போன்ற சம­யத்­தி­லும் பஜாஜ் ஆட்டோ இந்த காலாண்­டில் நன்கு பரி­ண­மித்­தி­ருப்­பது கவ­னிக்­கப்­பட வேண்­டிய விஷ­யம்.

காலாண்டு முடி­வு­கள்

காலாண்டு முடி­வு­கள் பல பெரிய கம்­பெ­னி­க­ளில் பொய்க்­க­வில்லை. ஆனால் பல நடுத்­தர கம்­பெ­னி­கள் தங்­கள் கம்­பெ­னி­யின் லாபத்­தில் இந்த காலாண்­டில் நிறைய இழந்­தி­ருக்­கின்­றன். கன்ஸ்­சூ­மர் குட்ஸ், வங்­கி­கள், ஐ.டி., மருந்­துக் கம்­பெ­னி­கள் ஆகி­யவை இந்த காலாண்­டில் நன்கு  பரி­ண­மித்­தி­ருக்­கின்­றன.

உங்­கள் போர்ட்­போ­லி­யோ­வில்

குஜ­ராத் பெட்ரோ நெட்,  பெர்­ஜர் பெயிண்ட்ஸ், ஏசி­யன் பெயின்ட்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், வினாதி ஆர்­கா­னிக்ஸ், ஐடி­எப்சி வங்கி ஆகிய கம்­பெ­னி­கள் உங்­கள் போர்ட்­போ­லி­யோ­வில் நீண்­ட­கால அடிப்­ப­டை­யில் இருக்­க­லாம்.

அடுத்த வாரம் எப்­படி இருக்­கும்?

அடுத்த வாரம் சில அறி­விப்­பு­கள் வர­லாம். அவை வெளி­நாட்டு போர்ட்­போ­லியொ முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு சுமத்­தப்­பட்ட வரிச்­சுமை, அதிக வரு­மா­னம் உடை­ய­வர்­க­ளுக்கு சுமத்­தப்­பட்­டி­ருந்த கூடு­தல் வரிச்­சுமை நீக்­கம். இவை அறி­விக்­கப்­ப­டு­மே­யா­னால் சந்­தை­கள் இன்­னும் கூடும் வாய்ப்­பு­கள் அதி­கம்.

ஜி.எஸ்..டி. கலெ­க்ஷன் 1,02,000 கோடி ரூபாய்­களை எட்­டி­யி­ருப்­பது ஒரு நம்­பிக்­கை­யான விஷ­யம். வரும் மாதங்­க­ளும் இது போன்ற கலெ­க்ஷன் இருந்­தால் அது சந்­தை­களை நிமிர்த்­தும்.

சந்­தை­க­ளில் ஒரு பங்­கில் 20 சத­வீ­தம் லாபம் கிடைக்­கும் போது வெளி­யேறி விடுங்­கள். மறு­படி அந்த பங்கு எப்­போது குறை­யும் என்று பார்த்து வாருங்­கள். அப்­படி நிலைக்கு வரும் போது எண்­டர் செய்­யுங்­கள். அது போல ஒரு பங்­கில் 20 சத­வீ­தம் நஷ்­டம் வரும் போது அந்த பங்கை விட்டு வெளி­யேறி விடுங்­கள்.

உங்கள் சந்தேகங்களுக்கு

உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.  

ப்ளாக்: sethuramansathappan.blogspot.com.   மொபைல்: 098 204 51259. இந்த தொடரின் பழைய பகுதிகளை படிக்க www.startupfundingsources.com


Trending Now: