ஸ்டார்ட் அப் இந்­தியா புரோ­கி­ராம் மற்­றும் “ஜெம்” திட்­டம்

12-08-2019 02:27 PM

ஸ்டார்ட் அப் இந்­தியா புரோ­கி­ராம் ஜன­வரி மாதம் 2016ம் வரு­டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது.தற்­போது கிட்­ட­தட்ட 3 வரு­டம் 6 மாதம் ஆகி­விட்­டது

உங்­க­ளது ஸ்டார்ட் அப் கம்­பெனி பார்ட்­னர்­ஷிப், லிமி­டெட் லய­பி­லிட்டி பார்ட்­னர்­ஷிப்,பிரை­வேட் லிமி­டெட் கம்­பெனி ஆகத்­தான் இருக்க வேண்­டும். ப்ரோப்­ப­ரைட்­டர்­ஷிப் நிறு­வ­ன­மாக இருந்­தால் அதை ஸ்டார்ட் அப்- பின் கீழ் கொண்டு வர இய­லாது.

உங்­க­ளது கம்­பெனி ஆரம்­பிக்­கப்­பட்டு 10 வரு­டத்­திற்­குள் இருக்க வேண்­டும்.

உங்­க­ளது கம்­பெனி ரூபாய் 100 கோடி விற்­பனை அளவை தாண்­டி­யி­ருக்­கக் கூடாது.

பழைய கம்­பெ­னியை பிரித்து உங்­க­ளது ஸ்டார்ட் அப் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்க கூடாது

ஸ்டார்ட் அப் – களுக்கு அர­சாங்க உத­வி­கள்

*       உங்­கள் நிறு­வ­னத்தை ஸ்டார்ட் அப் என்று பதிவு செய்து கொள்­வ­தால் என்ன நன்­மை­கள்?

*        உங்­கள் கம்­பெ­னி­யின் பொருட்­க­ளுக்கு பேடண்ட் ரிஜிஜ்­டி­ரே­ஷன் செய்­தால் அந்­த­செ­ல­வு­க­ளில் 80 சத­வீ­தம் மானி­ய­மாக கிடைக்­கும்.

அர­சாங்­கம் தாங்­கள் வாங்­கும் பொருட்­களை உங்­கள் நிறு­வ­னத்­தின் மூல­மும்­வாங்­கு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் கிடைக்­கும். (ஜெம்) – கவர்­மெண்ட் திட்­டத்­தின் கீழ் - www.gem.gov.in

அர­சாங்­கத்­தின் ஸ்டார்ட் அப் கம்­பெ­னி­க­ளில் முத­லீடு என்ற வகை­யில் இருக்­கும்10,000 கோடி ரூபாய் பண்­டி­லி­ருந்து முத­லீடு (பண்­டிங்) வாய்ப்­பு­கள்.

வரு­மான வரி­யி­லி­ருந்து

3 வரு­டங்­க­ளுக்கு விலக்கு.

உங்­க­ளது நிறு­வ­னத்தை ஸ்டார்ட் அப் இந்­தி­யா­வின் (www.startupindia.gov.in)இணை­ய­த­ளத்­தில் விளம்­ப­ரம் செய்­யும் வாய்ப்பு. இது உங்­க­ளுக்கு பல ஆர்­டர்­க­ளை­பெற்று தரும் வாய்ப்­புக்­களை கொடுக்­க­லாம். 2000க்கும் மேல் கம்­பெ­னி­கள் இப்­ப­டி­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்­திய ஸ்டார்ட் அப் நில­வ­ரம்

* 2016 - 2018 வரை - 200,000 கோடி ரூபாய்­கள், ஸ்டார்ட் அப்­க­ளில் முத­லீ­டு­செய்­யப்­பட்­டுள்­ளது.

* 2016 – 2019 வரை 19,280 மேற்­பட்ட ஸ்டார்ட் அப்­கள், Startup India திட்­டத்­தின் கீழ்­அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இதில் 13,000 க்கும் மேற்­பட்ட ஸ்டார்ட் அப்­கள் கிட்­டத்­தட்ட 1.5லட்­சம் வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்­கி­யுள்­ளது.

* அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து நாடு­க­ளுக்கு அடுத்­த­ப­டி­யாக, இந்­தியா       ஸ்டார்ட் அப் ஆரம்­பிப்­ப­தில் மூன்­றாம் இடத்­தில் உள்­ளது.

* Niti Aayog-  கீழ் உள்ள அடல் இன்­ன­வொ­ஷன் மிஷன் மூலம் பள்ளி, கல்­லூ­ரி­க­ளி­லி­ருந்­தே­பு­திய கண்­டு­பி­டிப்­பிற்­கான எண்­ணங்­களை ஊக்­கு­விப்­ப­தற்கு 500 Tinkering Labsஉரு­வாக்­கி­யுள்­ளது.

ஸ்டார்ட் அப் – கம்­பெ­னி­க­ளுக்கு

சில உதா­ர­ணங்­கள்

ஓயோ (ஹோட்­டல்­கள்)

ப்ளிப் கார்ட் (ஆன்­லைன் மார்க்­கெட்­டிங்)

பாலிசி பஜார் (இன்­சூ­ரன்ஸ் பாலிசி ஆன்­லை­னில் விற்­ப­வர்­கள்)

பாங்க் பஜார் (வங்­கி­க­ளில் உள்ள டெபா­சிட் மற்­றும் கடன் கள் பற்றி ஆன்­லை­னில் உங்­க­ளுக்கு கூறு­ப­வர்­கள்)

மீன­வர்­க­ளுக்கு உத­வும் ஸ்டார்ட் அப்  www.inceve.com.

பைஜு  (மாண­வர்­க­ளின் படிப்­பிற்கு உத­வும் செயலி)

ஓலா கார்

ஸ்டார்ட் அப் கம்­பெனி என்­றாலே “சாப்ட்­வேர்” கம்­பெனி மட்­டும் தானா?

பல­ருக்கு சந்­தே­கம் இருக்­க­லாம் ஸ்டார்ட் அப் என்­றாலே பெரும்­பா­லும் சாப்ட்­வேர் கம்­பெனி ஆகத்­தான் இருக்க வேண்­டும் என்று. அப்­ப­டி­யான எண்­ணம் எல்­லாம் தவறு. ஸ்டார்ட் அப்­பில் 48 வகை­யான தொழில் பிரி­வு­கள் இருக்­கின்­றன. டெக்­னா­லஜி கம்­பெ­னி­கள் அதி­க­மாக ஸ்டார்ட் அப்­பில் இருக்­கி­றது. டெக்­னா­லஜி அல்­லாத கம்­பெ­னி­க­ளும் இருக்­கின்­றன.

நீங்­கள் எந்த வகை­யான கம்­பெனி வைத்­தி­ருந்­தா­லும், அது இந்த 48 தொழில் பிரி­வு­க­ளில் ஒன்­றின் கீழ் கட்­டா­யம் வரும். ஒவ்­வொரு தொழில் பிரி­வி­லும் பல செக்­டார்­கள் இருக்­கின்­றன என்­பதை ஞாப­கம் வைத்­துக் கொள்­ளுங்­கள். கிட்­டத்­தட்ட 150 செக்­டார்­கள் இருக்­கி­றது.

மத்­திய அர­சாங்­கத்­தின் “ஜெம்” திட்­டம்

நாம் நினைத்­துக் கொண்­டி­ருக்­கி­றோம் பிளிப்­கார்ட்­டில் தான் அதி­க­மான செல்­லர்­கள் இருக்­கி­றார்­கள் என்று (அதா­வது விற்­ப­னை­யா­ளர்­கள்). அது  போல இரண்டு மடங்கு விற்­ப­னை­யா­ளர்­கள் அர­சாங்­கத்­தின் ஜெம் மார்க்­கெட்­டில் இருக்­கி­றார்­கள். 259,000 செல்­லர்­கள் (விற்­ப­னி­யா­ளர்­கள்) இருக்­கி­றார்­கள். இது கவர்­மெண்ட் எலெக்­டி­ரா­னிக் மார்க்­கெட் பிளேஸ் GEM என அழைக்­கப்­ப­டு­கி­றது. 2016 வரு­டம்  ஆரம்­பிக்­கப்­பட்­டது. அர­சுத் துறை­க­ளுக்கு தேவை­யான பொருட்­க­ளில் 25 சத­வீ­தத்தை இந்த எலக்ட்­ரா­னிக் இணை­யத் தளம் மூல­மாக வாங்­கும் முயற்சி.

இது­வரை 28 ஆயி­ரத்து 730 கோடி ரூபாய் மதிப்­புள்ள பொருட்­களை வாங்­கி­யுள்­ளது. இந்த வரு­டம் 50 ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­புள்ள பொருட்­களை வாங்­கு­வ­தற்கு முடிவு செய்­துள்­ளது. இந்த வரு­டம் 21 லட்­சம் ஆர்­டர்­கள் இதன் மூல­மாக அளிக்­கப்­ப­டும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  3 சத­வீ­தம் பெண்­கள் நடத்­தும் கம்­பெ­னி­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

ஆபீஸ் ஸ்டேஷ­னரி முதல் கார்­கள் வரை  14147 வகை­யான பொருட்­கள் வாங்­கப்­ப­டு­கின்­றன என்­பது குறிப்­பி­ட­தக்­கது.  இவர்­க­ளின் இணை­ய­த­ளம் https://gem.gov.in/

ஸ்டார்ட் அப் கம்­பெ­னி­க­ளுக்கு மத்­திய அர­சின் கம்­பெ­னி­கள் தாங்­கள் வாங்­கும் பொருட்­க­ளில் 25 சத­வீ­தம் ஸ்டார்ட் அப் கம்­பெ­னி­க­ளில் இருந்து தான் வாங்க வேண்­டும் என்ற கட்­டா­யம் இருக்­கி­றது.

இத­னால் உங்­கள் கம்­பெனி ஸ்டார்ட் அப் கம்­பெ­னி­யின் கீழ் வரு­மா­னால் அர­சாங்­கத்­தில் பதிவு செய்து கொள்­வது நல்­லது. உங்­கள் விற்­பனை கூடும் வாய்ப்­பு­கள் அதி­கம்.