ஏற்­று­மதி உல­கம் : செருப்பு ஏற்­று­மதி

12-08-2019 02:26 PM

இன்று இந்­தி­யா­வில் பல பிர­ப­ல­மான பிராண்ட்­க­ளின் செருப்­பு­கள், ஷீக்­கள் மற்­றும் உல­கத்­தின் பிர­ப­ல­மான பிராண்ட்­க­ளின் செருப்­பு­கள், ஷீக்­கள் ஆக்­ரா­வி­லும் தயா­ரா­கின்­றன என்­றால் நம்ப முடி­கி­றதா? அந்த அள­விற்கு ஆக்ரா செருப்பு உற்­பத்தி தொழி­லில் முன்­னேறி உள்­ளது.

ஆக்ரா என்­றால் தாஜ்­ம­ஹால் தான் கண் முன்னே வரும். இது தவிர ஆக்­ரா­வில் தயா­ரா­கும் ஒரு­வகை பேடா­வும் மிக­வும் பிர­சித்­தம் (பூச­னிக்­கா­யி­லி­ருந்து தயா­ரிக்­கப்­ப­டும் ஒரு வகை சுவீட்). ஆக்ரா இவை­கள் தவிர மற்­றொன்­றுக்­கும் மிக­வும் பிர­சித்தி பெற்­றது. செருப்பு தயா­ரிப்பு மற்­றும் ஏற்­று­ம­தி­யில் ஆக்ரா மிக­வும் சிறந்து விளங்­கு­கி­றது.

செருப்பு தயா­ரிப்­பில் இந்­தி­யா­வில் கோலாப்­பூர், ஆக்ரா, சென்னை, கான்­பூர் ஆகி­யவை மிக­வும் சிறந்து விளங்­கு­கின்­றன. இதில் ஆக்­ரா­வில் தயா­ரிக்­கப்­ப­டும் செருப்­புக்­க­ளில் பெரும்­பா­லும் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­றன.

 இந்­தி­யா­வின் செருப்பு ஏற்­று­ம­தி­யில் 28 சத­வீ­தம் ஆக்­ரா­வி­லி­ருந்து தான் நடக்­கி­றது. இங்கு சுமார் 100 கம்­பெ­னி­கள் இருக்­கின்­றன. வரு­டத்­திற்கு சுமார் 3000 கோடி ரூபாய்­கள் அள­விற்கு செருப்­பு­கள் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­றன.

ஹார்டி நெட்

உள்­ளங்­கைக்­குள் உல­கம் என்­பது மொபை­லுக்கு தான் பொருந்­தும். முன்பு காலத்­தில் கஷ்­டப்­பட்டு செய்த பல விஷ­யங்­களை மொபை­லும், இண்­டர்­நெட்­டும் எளி­தாக தற்­போது செய்து முடிக்­கின்­றன. அதே மொபைல் தான் ப்ளூவேல் போன்ற கேம்­க­ளை­யும் தரு­கி­றது. நல்­லதை தரம் பிரித்து பார்ப்­பது, நல்­லதை மட்­டும் எடுத்­துக் கொள்­வது நமக்கு நல்­லது.

அந்த மொபைல் டெக்­னா­லஜி மூலம் அபிடா ஒரு மொபைல் ஆப் தயா­ரித்­துள்­ளது. இதன் மூலம் கிரேப், மாது­ளம்­ப­ழம், காய்­க­றி­க­ளுக்கு ரிஜிஜ்­டி­ரே­ஷன்,  டெஸ்­டிங், சர்ட்­டி­பி­கே­ஷன் ஆகி­ய­வை­கள் செய்ய முடி­யும். ஹார்டி நெட் என்ற இணை­ய­த­ளத்­திற்­குள் செல்­ல­வும் (அபிடா இணை­ய­த­ளம் மூலம்)

ஏற்­று­மதி கேள்வி பதில்

கேள்வி : நாங்­கள் சிங்­கப்­பூ­ரில் உள்ள ஒரு கம்­பெ­னிக்கு சரக்­கு­களை கலெ­க்ஷன் மூல­மாக அனுப்­பி­னோம். அவர் சரக்­கு­களை எடுக்­க­வில்லை. தற்­போது வேறோரு கம்­பெ­னிக்கு சரக்­கு­களை மாற்றி விற்க விரும்­பு­கி­றோம். இது முடி­யுமா? என்ன செய்ய வேண்­டும்?

பதில் : கட்­டா­யம் முடி­யும். நீங்­கள் அனுப்­பிய சரக்­கு­களை முத­லில் ஆர்­டர் கொடுத்­த­வர் எடுக்­காத பட்­சத்­தில், இரண்­டா­வது பையர் கண்­டு­பி­டித்து அவர் கம்­பெனி பெய­ருக்கு மாற்­றிக் கொடுத்து விற்­க­லாம். இதை ரிசர்வ் வங்­கி­யும் அனு­ம­திக்­கி­றது.

கேள்வி : இந்­தி­யா­வில் இறக்­கு­மதி வளர்ச்சி கழ­கங்­கள் இருக்­கின்­றதா?

பதில் : இறக்­கு­ம­தி­யையே நம்பி இருக்­கும் நாடு­கள் இறக்­கு­மதி வளர்ச்சி கழ­கங்­களை வைத்­தி­ருக்­கின்­றன. இந்­தி­யா­வில் உற்­பத்தி பெரும்­பா­லான பொருட்­க­ளில் தேவை­யான அளவு இருக்­கி­றது. ஆத­லால் இறக்­கு­மதி வளர்ச்சி கழ­கங்­கள் இல்லை. குறிப்­பாக நாம் இறக்­கு­மதி செய்­வது கச்சா எண்­ணெய், வைரம், தங்­கம் போன்­றவை தான் அதி­கம்.

இந்த இறக்­கு­மதி வளர்ச்சி கழ­கங்­கள் உங்­க­ளுக்கு நல்ல தர­மான இறக்­கு­ம­தி­யா­ளர்­களை கண்­டு­பி­டிக்க உதவி செய்­யும்.

கேள்வி : ஏற்­று­ம­தி­யில் எல்.சி.க்கு யூ.சி.பி.ஏன் தேவை? நல்ல சரக்­கு­களை அனுப்­பி­னால் பணம் தானாக வந்து விடப்­போ­கி­றது? இதற்கு ரூல்­கள் தேவையா?

பதில் : ஏற்­று­மதி வர்த்­த­கத்­தில் சுமார் 180நாடு­கள் தற்­போது ஈடு­பட்டு வரு­கின்­றன. ஒவ்­வொரு நாடும் ஒவ்­வொரு சட்­டத்தை வைத்­துக் கொண்­டி­ருந்­தால் அது ஏற்­று­மதி செய்­ப­வ­ருக்­கும், இறக்­கு­மதி செய்­ப­வ­ருக்­கும் பல குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தும்.

இத­னால் தான் உல­க­ள­வில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விதி­யாக யூ.சி.பி. கொண்டு வரப்­பட்­டுள்­ளது.  இது ஏற்­று­ம­தி­யா­ளர், இறக்­கு­ம­தி­யா­ளர், ஏற்­று­ம­தி­யா­ளர் வங்கி, இறக்­கு­ம­தி­யா­ளர் வங்கி ஆகி­ய­வற்­றில் ஏற்­ப­டும் பிரச்­ச­னை­களை சரி செய்ய உத­வு­கி­றது.Trending Now: