ஒரு பேனாவின் பயணம் – 220 – சுதாங்கன்

12-08-2019 02:25 PM

தத்துவம் வேண்டும்! உயிர் வேண்டாம்!

 பல சேனைக் கப்­பல்­க­ளும் அத­னு­டன் கடல் வழி­யா­கச் சென்­றன. ஆனால் கடல் கிரேக்­கர்­க­ளின் பங்­கில் இருந்­தது. அதில் எழுந்த பெரும் புய­லி­னால் பெரும் பாலான கப்­பல்­கள் அழிந்து போயின. கிரேக்­கர்­கள் தங்­க­ளைத் தாக்க வரும் எதி­ரி­யின் பெரும்­ப­லத்­தைக் கண்டு பயந்­து­போய்த் தங்­கள் சச்­ச­ர­வு­களை மறந்து ஒன்று பட்­டார்­கள். பார­சீ­கர்­க­ளுக்கு முன்­னால் பின்­வாங்­கிச் சென்று `தர்­மாப்­பைலி’  என்­னும் இடத்­தில் தடுத்து நிறுத்த முயன்­றார்­கள். ஒரு பக்­கத்­தில் மலை­யும் மற்­றொரு பக்­கத்­தில் கட­லும் உடைய ஒரு குறு­க­லான வழி இது. ஆகவே ஒரு சிலர் கூடப்  பெருஞ்­சே­னையை இங்கு எதிர்த்து நிற்­க­லாம். இதை சாகும் வரை­யில் காப்­ப­தற்கு லியோ­னி­டாஸ் என்­ப­வ­ரைத் தலை­வ­னா­கக் கொண்ட 300 ஸ்பார்ட்டா வீரர்­கள் அடங்­கிய சிறு படை ஒன்று நிய­மிக்­கப்­பட்­டது.

  மார­தான் சண்டை நடந்து பத்து வரு­ஷங்­க­ளுக்­குப் பிறகு இது நடந்­தது. அஞ்சா நெஞ்­சம் படைத்த இவ்­வீ­ரர்­கள் தங்­கள் தேசத்­திற்­குப் போற்­று­தற்­கு­ரிய சேவை செய்­தார்­கள். பார­சீக சேனையை இவர்­கள் எதிர்த்து நின்ற போது கிரேக்க சேனை பின்­வாங்­கிச் சென்­றது. அந்­தக் குறு­க­லான வழி­யில் ஒரு­வன் இறந்­தால் உடனே  அவன் இடத்­திற்கு வேறொ­ரு­வன் வரு­வான். இப்­ப­டி­யாக எல்லா வீரர்­க­ளூம் ஒரு­வர் பின் ஒரு­வ­ராக மாண்­டார்­கள். பார­சீக சேனை­யால் முன்­னே­றிச் செல்ல முடி­ய­வில்லை.  லியோ­னி­டாஸ் என்­ப­வ­னும் அவ­னு­டைய  300 வீரர்­க­ளும் `தர்­மாப்­பைலி’ என்­னு­மி­டத்­தில் போரில் பட்டு வீழ்ந்த பிற­கு­தான் பார­சீக சேனை

மேலே செல்ல முடிந்­தது. 2 ஆயி­ரத்து 400 ஆண்­டு­க­ளுக்கு முன் அதா­வது கி.மு. 480 ல் இது நிகழ்ந்­தது. அவர்­க­ளின் வெல்ல முடி­யாத வீரத்தை இன்று நினைத்­துக் கொண்­டால் கூட நாம் தர்­மப்­பை­லிக்­குப் போனால் லியோ­னி­டா­சும் அவ­னு­டைய வீரர்­க­ளும் கல்­லில் பொறித்­தி­ருக்­கும் கீழ்­வ­ரும் செய்­தி­யைக் கண்டு கண்­க­லங்கி நிற்­போம்.

 `இவ்­வ­ழி­யா­கப் போகும் நீங்­கள் ஸ்பார்ட்­டா­வுக்­குச் சென்று நாங்­கள் தேசத்­தின் கட்­ட­ளைக்­குப் பணிந்து இங்கே இருந்­து­விட்­டோம் என்று அங்­குள்­ள­வர்­க­ளுக்­குச் சொல்­வீர்­க­ளாக’  மர­ணத்­தை­யும் வென்று நிற்­கும் வீர வியப்­பைத் தர­வில்­லையா? லியோ­னி­டா­சும் தர்­மாப்­பை­லி­யும் எந்­நா­ளும் மனி­தர் உள்­ளத்­திலே சிரஞ்­சீ­வி­யாக விளங்­கிக்­கொண்­டி­ருக்­கும். தூர­தே­ச­மா­கிய இந்­தி­யா­வி­லுள்ள நாம் கூட அதை நினைக்­கும்­போது உத்­வே­கம் கொள்­கி­றோம்.

அப்­ப­டி­யி­ருக்­கும் போது நமது சொந்த ஜனங்­க­ளும் நமது மூதா­தை­யர்­க­ளும் ஆகிய ஹிந்­துஸ்­தா­

னத்து ஆட­வர்­க­ளும் மாதர்­க­ளும் மர­ணத்­தைக் கண்டு எள்ளி நகை­யா­டி­னார்­கள் என்­றால், மானத்தை இழந்து அடிமை வாழ்வு வாழ்­வ­தை­வி­டச் சாவதே மேல் என்று எண்­ணி­னார்­கள் என்­றால். கொடுங்­கோன்­மை­யின் கீழ் வளைந்து வாழ விரும்­பா­மல், பிளந்து  மடிந்­தார்­கள் என்­றால் நாம் அதைப் பற்றி என்ன சொல்­வோம்? என்ன உணர்ச்சி கொள்­வோம்? சித்­தூ­ரின் ஒப்­பற்ற கதையை எண்­ணிப்­பார். அங்கு வாழ்ந்த ராஜ­புத்­திர ஆண் – பெண்­க­ளின் வீரம் நம்­மைத் திகைக்க வைக்­கி­ற­தல்­லவா? இந்த காலத்­தி­லும் நம்­மைப் போல உணர்ச்சி மிகுந்த நம் தோழர்­கள் இந்­தி­யா­வின் சுதந்­தி­ரத்­துக்­கா­கச் சாவுக்­கும் அஞ்­சா­மல் முன்­வ­ரு­வதை எண்­ணிப்­பார்.

 தர்­மாப்­பைலி சிறிது காலம் பார­சீக சேனை­யைத் தடுத்து நிறுத்­தி­யது. ஆனால் அதிக காலம் முடி­ய­வில்லை. கிரேக்­கர்­கள் புறங்­காட்­டி­னார்­கள். சில கிரேக்க நக­ரங்­கள் எதி­ரிக்கு பணிந்து விட்­டன.  மானம் மிகுந்த ஏதென்ஸ் நக­ரத்­தார் தங்­கள் எதி­ரிக்­குப் பணி­வ­தை­வி­டத் தங்­கள் அழ­கிய நக­ரம் அழி­வது மேல் என்று கருதி அனை­வ­ரும் நக­ரத்தை விட்­டு­விட்­டுக் கப்­பல்­க­ளில் ஏறிச்சென்­று­விட்­டார்­கள். பார­சீ­கர்­கள் அந்­ந­க­ரில் பிர­வே­சித்து அதை எதிர்த்­தார்­கள். ஏதென்­சின் கடற்­படை இன்­னும் தோல்வி அடை­யா­த­தால் சலா­மிஸ் என்­னும் இடத்­துக்­க­ரு­கில் ஒரு பெரிய கடற்­போர் நிகழ்ந்­தது. பார­சீக  கப்­பல்­கள் அழிக்­கப்­பட்­டன. இத­னால் செர்க்­சிஸ் மனம் உடைந்து பார­சீ­கத்­துக்­குத்

திரும்­பிப் போனான்.

 சில காலம் வரை­யில் பார­சீ­கம் பெரிய சாம்­ராஜ்­ஜி­ய­மா­கத் திகழ்ந்­தது. ஆனால், மார­தான், சலா­மிஸ் இரண்­டும் அதன் வீழ்ச்­சிக்­கு­ரிய வழி­யைக் காட்­டின. அது எவ்­வாறு வீழ்ச்­சி­யுற்­ற­தென்­ப­தைப் பிறகு காண்­போம். அந்த காலத்­தில் இருந்­த­வர்­கள் இப்­பெ­ரிய சாம்­ராஜ்­யம் நிலை கலங்கி ஆடு­வ­தைக் கண்டு மிக­வும் ஆச்­ச­ரி­யப்­பட்­டி­ருப்­பார்­கள். ஹெர­டோ­டஸ் இதைப் பற்றி சிந்­தித்து இதி­லி­ருந்து ஒரு படிப்­பினை எடுத்­துக்­காட்­டி­யி­ருக்­கி­றார். ஒரு தேசத்­தின் சரித்­தி­ரத்­தில் மூன்று நிலை­கள்  உண்டு என்று அவர் சொல்­லு­கி­றார். முதல் நிலை வெற்றி. இரண்­டா­வது நிலை வெற்­றி­யின் பய­னாக விளை­யும் அகங்­கா­ர­மும் அநீ­தி­யும். மூன்­றா­வது நிலை இவற்­றின் பய­னாக விளை­யும் வீழ்ச்சி.

ஜன­வரி 23,  1931

 பார­சீ­கர்­கள் மீது கிரேக்­கர்­கள் அடைந்த வெற்­றி­யி­னால் இரண்டு பயன்­கள் ஏற்­பட்­டன. பார­சீக சாம்­ராஜ்­ஜி­யம் கொஞ்­சம் கொஞ்­ச­மாக

வலி குன்றி வீழ்ச்­சி­ய­டை­யத் தலைப்­பட்­ட­தும் கிரேக்­கர்­க­ளின் சரித்­தி­ரம் ஒளி விட்டு பிர­கா­சிக்க ஆரம்­பித்­தது. கிரீஸ் தேசத்­தின் ஆயு­ளில் இத்­த­கைய சிறப்­புப் பொருந்­திய  காலப்­ப­குதி மிக­வும் குறு­கி­யது என்று சொல்­ல­லாம். இரு நூறு ஆண்­டு­க­ளுக்கு சற்­றுக் குறை­வா­கவே அது பெரு­மை­

யு­டன் விளங்­கி­யது. அந்­தப் பெருமை கூடப் பரந்த சாம்­ராஜ்­ஜி­யத்­துக்­கு­ரிய பார­சீ­க­மும் அதற்கு முன்பு இருந்த சாம்­ராஜ்­ஜி­யங்­க­ளை­யும் போல பெருமை அல்ல. பிற்­பாடு மகா அலெக்­சாண்­டர் தோன்றி தன்­னு­டைய வெற்­றி­க­ளால் சிறிது காலம் உல­கத்­தையே பிர­மிக்­கச் செய்­தான். ஆனால், நாம் இப்­போது அவ­னைப் பற்றி பேச­வில்லை. பார­சீக யுத்­தங்­க­ளுக்­கும்  அலெக்­சாண்­டர் தோன்­று­வ­தற்­கும் இடையே உள்ள காலத்­தைப் பற்­றிப் பேசிக்­கொண்­டி­ருக்­கி­றோம்.

அதா­வது தர்­மாப்­பைலி, சலா­மிஸ் போர்­க­ளுக்கு பிந்­திய  150 வருட காலம், பார­சீக எதிர்ப்பு கிரேக்­கர்­களை ஒன்­று­ப­டச் செய்­தது. அந்த எதிர்ப்­பி­னால் உண்­டா­கிய பயம் நீங்­கி­ய­வு­டனே அவர்­கள்

மறு­ப­டி­யும்  பிரிந்து ஒரு­வ­ரோ­டொ­ரு­வர் சண்டை போட்­டுக் கொள்ள ஆரம்­பித்­தார்­கள். குறிப்­பாக ஏதஸ் நகர ராஜ்­யத்­துக்­கும் ஸ்பார்ட்டா நகர ராஜ்­யத்­துக்­கும் பெருத்த போட்­டி­யும் பகை­மை­யும் ஏற்­பட்­டன. ஆனால் அந்த சண்­டை­கள் முக்­கி­யம்

வாய்ந்­தவை அல்ல. அவற்றை பற்றி நாம்  அதி­கம் கவ­னிக்க வேண்­டி­ய­தில்லை. அந்­நா­ளில்

கிரீஸ்  வேறு வழி­க­ளில் சிறந்து விளங்­கி­யி­ரா ­விட்­டால் நமக்கு இந்த சண்­டை­க­ளைப் பற்­றிய ஞாப­கம் கூட இராது.  அக்­கா­லத்­தில் கிரீ­சைப் பற்றி நமக்­குக் கிடைத்­துள்ள நூல்­க­ளும், உரு­வச் சிலை­க­ளும், பாழி­டங்­க­ளும் சிலவே. ஆனால் இந்­தச் சில­வற்­றி­லி­ருந்தே நாம் கிரேக்­கர்­கள் பல துறை­க­ளி­லும் அடைந்­தி­ருந்த மேன்­மை­யைக் கண்டு விம்­மி­தம் அடை­கி­றோம். அழ­கிய சிலை­க­ளை­யும் அற்­பு­த­மான கட்­ட­டங்­க­ளை­யும் சிருஷ்­டித்த அவர்­க­ளு­டைய மனப்­பான்­மை­யை­யும் கைத்­தி­ற­னை­யும் என்­னென்­பது!

அக்­கா­லத்­தில் வாழ்ந்த புகழ் பெற்ற சிற்­பி­க­ளில் பிடி­யாஸ் என்­ப­வன் ஒரு­வன். கிரேக்­கர்­கள் இயற்­றி­யுள்ள துன்ப நாட­கங்­க­ளும் இன்ப நாட­கங்­க­ளும் மிகச் சிறந்­த­வை­யா­கும். சோபோ­கி­ளீஸ், ஈஸ்­கை­லஸ் யுரி­பி­டிஸ், அரிஸ்­டோ­பே­னஸ், பிண்­டார், மினாண்­டர் சாபோ இவை வெறும் பெயர்­க­ளாக உனக்கு இப்­போது தோன்­ற­லாம். ஆனால் உனக்கு வயது வந்த பிறகு நீ அவர்­கள் இயற்­றிய நூல்­க­ளைப் படித்து கிரீ­சின் புகழை ஒரு­வாறு அறிந்து கொள்­ளக்­கூ­டும்.

 கிரேக்க சரித்­தி­ரத்­தில் இப்­ப­குதி ஒரு தேசத்­தின் சரித்­தி­ரத்தை நாம்  எவ்­வாறு அர்த்­தம் செய்து கொள்ள வேண்­டும் என்­ப­தற்கு ஒரு முன்­னெச்­ச­ ரிக்­கை­யாக இருக்­கி­றது. கிரேக்க ராஜ்­ஜி­யங்­க­ளின்  சண்­டை­க­ளை­யும் அவற்­றின் சின்­னத்­த­னங்­க­ளை­ யும் மட்­டுமே நாம் கவ­னிப்­போ­மா­னால் நாம்

கீரி­சைப் பற்றி என்ன அறிந்து கொள்ள முடி­யும்? அவர்­களை நாம் சரி­யா­ன­படி அறிந்து கொள்ள வேண்­டு­மா­னால் அவர்­க­ளு­டைய உள்­ளத்­தில் புகுந்து அவர்­க­ளு­டைய சித்த நிலை­யை­யும்

செய­லை­யும் மதித்­துப் போற்ற முயல வேண்­டும். ஒரு நாட்­டின்  புறச்­ச­ரி­தையை  விட அகச்­ச­ரிதை முக்­கி­ய­மா­னது. இந்த கார­ணத்­தி­னாலே தான் இன்­றைய ஐரோப்பா பல வழி­க­ளில் பண்­டைய கிரேக்க கலா­சா­ரத்­தில் குழந்­தை­யாக விளங்­கு­கி­றது.

 தேசங்­க­ளின் வாழ்­விலே இத்­த­கைய சிறப்பு வாய்ந்த பகு­தி­கள் தோன்றி மறை­வதை நினைத்­துப் பார்த்­தால் நமக்கு ஒரு­வி­த­மான கவர்ச்­சி­யும் ஆச்­ச­ரி­ய­மும் உண்­டா­கின்­றன. சிறிது காலம் எல்­லாம் ஒளி­ம­ய­மாக விளங்­கு­கி­றது. அக்­கா­லத்­தில் வாழும் அந்­நாட்டு மக்­கள் அழ­குள்­ள­ன­வற்­றைச் சிருஷ்­டி­ருத்­திக்­கி­றார்­கள்.  ஜனங்­கள்  அரு­ளா­வே­சம்  அடைந்­த­வர்­கள் போல் ஆகி­வி­டு­கி­றார்­கள். நமது தேசத்­தி­லும் அத்­த­கைய காலப்­ப­கு­தி­கள் வந்து போவ தை நாம் காண்­கி­றோம். நமக்­குத் தெரிந்­த­வ­ரை­யில் இவற்­றில் பழ­மை­யாக விளங்­கு­வது நம்  வேதங்­க­ளும் உப­நி­ஷ­தங்­க­ளூம் வேறு நூல்­க­ளும் தோன்­றிய கால­மே­யா­கும்.

துர­திர்ஷ்­ட­வ­ச­மாக அந்­நாட்­க­ளைப் பற்­றிய வர­லாறு நமக்­குக் கிடைக்­க­வில்லை. பல அரிய பெரிய நூல்­கள் அழிந்து போயி­ருக்­க­லாம். இனி­மேல் கண்­டெ­டுக்­கப்­பட்­டா­லும் பட­லாம். ஆனால் பழங்­கால இந்­தி­யர்­கள் அறி­வாற்­ற­லில் இணை­யற்­ற­வர்­கள் என்­ப­தைக் காட்­டு­வ­தற்­குப் போதிய சான்று இருக்­கி­ றது. பிற்­பட்ட இந்­திய சரித்­தி­ரத்­தி­லும் இத்­த­கைய சிறப்­புற்­றொ­ளி­ரும் பகு­தி­கள் காணக்  கிடக்­கின்­றன. வருங்­கா­லத்­தி­லும் நாம் அவ்­வாறு விளங்­க­லாம்.

 இக்­கா­லத்­தில் சிறப்­பாக ஏதென்ஸ் பெரும்­பு­க­ழு­டன் ஒளிர்ந்­தது. பெரி­கி­னீஸ் என்­னும் ஒரு ராஜ­தந்­திரி 30 ஆண்­டு­கள் அதன் தலை­வ­னாக விளங்­கி­னான். அவன் காலத்­தில் ஏதென்ஸ்  நக­ரத்­தில் அழ­கிய மாட­மா­ளி­கை­கள் தோன்­றின. அங்கே கலை­ஞர்­க­ளும் அறி­ஞர்­க­ளும் நிறைந்­தி­ருந்­தார்­கள். இப்­பொ­ழுது கூட `பெரி­கி­னீஸ் காலம்’  பெரி­கீ­னிஸ் காலத்து ஏதென்ஸ் என்று சிறப்­பித்­துப் பேசு­கி­றோம்.

 சற்­றே­றக்­கு­றைய இக்­கா­லத்­தில்­தான் நம் சரித்­தி­ரா­சி­ரி­ய­ரா­கிய ஹெர்­டோ­டஸ் ஏதென்­சில் வாழ்ந்­தி­ருந்­தார். ஏதென்­சின் வளர்ச்­சி­யைப் பற்றி அவர் சிந்­தித்து வழக்­கம் போல அதி­லி­ருந்து ஒரு படிப்­பி­னையை நமக்கு எடுத்­துக் காட்­டு­கி­றார். அவர் தாம் எழு­திய  சரித்­தி­ரத்­தில் பின்­வ­ரு­மாறு எழு­தி­யி­ருக்­கி­றார்.

`ஏதென்­சின் வல்­லமை வளர்ந்­தோங்­கி­யது சுதந்­திர நன்மை பயக்­கும் என்­ப­தற்கு இதுவே சாட்சி. இதை எங்­கும் காண­லாம். ஏதென்ஸ் யசேச்­ச­தி­கார கொடுங்­கோன்­மைக்கு உட்­பட்­டி­ருந்­த­போது அந்­ந­க­ரத்­தா­ரால் மற்­ற­வர்­க­ளைப் போரில் வெல்ல முடி­ய­வில்லை. அந்த கொடுங்­கோன்­மை­யி­னின்­றும் விடு­பட்ட பொழுது  அவர்­கள் மற்­ற­வர்­களை விஞ்சி நின்­றார்­கள்.  இதி­லி­ருந்து அடி­மைத்­த­ளத்­தில் அவர்­கள் ஒரு எஜ­மா­ன­னுக்­காக உழைக்க வேண்­டி­யி­ருந்­த­ப­டி­யால் பூரன் முயற்சி செய்­ய­வில்­லை­யென்­றும்  விடு­தலை அடைந்த பிறகு ஒவ்­வொ­ரு­வ­னும் தானா­கவே தன்­னால் இயன்­ற­த­னைத்­தை­யும் அக்­க­றை­யு­டம் செய்­தான் என்­றும் நன்கு விளங்­கு­கி­றது.

 அக்­கா­லத்­தில் வாழ்ந்த சில பெரி­ய­வர்­க­ளின் பெயர்­களை நான் உனக்­குச் சொன்­னேன். அக்­கா­லத்­திற்கு மட்­டு­மன்றி எக்­கா­லத்­திற்­கும் பெரி­ய­வ­ராக விளங்­கும் ஒரு­வ­ரு­டைய பெயரை நான் இன்­னும் சொல்­ல­வில்லை. அவ­ரு­டைய பெயர் சாக்­ர­டீஸ்.  சதா சத்­திய சோத­னை­யில் ஈடு­பட்­டி­ருந்த அவர் ஒரு சிறந்த தத்­துவ ஞானி. எல்­லா­வற்­றைக் காட்­டி­லும் பெற­தற்­கு­ரி­யது என்று

அவர் மதித்­தது உண்மை அறி­வே­யா­கும்.

தனது நண்­பர்­க­ளோ­டும் தனக்­குத் தெரிந்­த­வர்­க­ளோ­டும்  அடிக்­கடி அரிய விஷ­யங்­க­ளைப்

பற்றி அவர் விவா­திப்­ப­துண்டு. அத்­த­கைய விவா­தங்­க­ளின் மூலம் உண்மை புல­னா­கு­மென்­பது அவ­ரு­டைய எண்­ணம். அவ­ருக்­குப் பல சீடர்­கள் உண்டு. அவர்­க­ளில் தலை­சி­றந்­த­வர் பிளேட்டோ  என்­ப­வர். பிளேட்டோ இயற்­றிய பல அரிய நூல்­கள் நமக்­குக் கிடைத்­தி­ருக்­கின்­றன. அவற்­றி­லி­ருந்து அவ­ரு­டைய ஆசி­ரி­யர் சாக்­ர­டீ­சைப் பற்றி நாம் அதி­க­மாக தெரிந்து கொள்ள முடி­யும்.

உண்­மை­யைக் காணு­வ­தற்­குச் செய்­யப்­ப­டும்  முயற்­சி­யை யோ அம்­மு­யற்­சி­யைச் செய்­த­வர்­க­ளையோ கண்­டால் அர­சு­க­ளுக்­குப் பிடிப்­ப­தில்லை  போலும். பெரி­கி­னீஸ் காலத்­துக்­குப் பின்பு இருந்த ஏதென்ஸ் அர­சாங்­கம் சாக்­ர­டீ­சின் முறை­களை விரும்­ப­ வில்லை. அவ்­வ­ர­சங்­கத்­தார் அவரை விசா­ரித்து அவ­ருக்கு மரண தண்­டனை விதித்­தார்­கள். ஜனங்­க­ளோடு அவர் நடத்­தும் விவா­தங்­களை விட்­டு­விட்­டுத் தம் வழி­களை மாற்­றிக் கொண்­டால் அவரை ஒன்­றும் செய்­யா­மல் விட்டு விடு­வ­தாக அவர்­கள் தெரி­வித்­தார்­கள்.

ஆனால், சாக்­ர­டீஸ் அதற்கு உடன்­ப­ட­வில்லை. தன் கட­மை­யைத் துன்­பத்­தைக் காட்­டிலுk; உயி­ரைத் துறப்­பது மேல் என்று அவர் கரு­தி­னார். ஒரு கிண்­ணத்­தில் தமக்­குக் கொடுக்­கப் பட்ட  விஷத்தை உண்டு அவர் உயிர் துறந்­தார். உயிர் துறக்­கு­முன்பு தம் மீது குற்­றம் சாட்­டி­ய­வர்­க­ளை­யும் நியா­யா­தி­ப­தி­க­ளை­யும், ஏதென்ஸ் நகர மாந்­தர்­க­ளை­யும் பார்த்து அவர் பின்­வ­ரு­மாறு கூறி­னார்.

 ` நான் செய்து வரும் தத்­து­வ­ராய்ச்­சி­யைக் கைவிட்டு விட்­டால் என்னை விடு­தலை செய்­வ­தாக நீங்­கள் சொல்­வீர்­க­ளா­யின் ` ஓ! ஏதென்ஸ் நகர வாரி­சு­களே! உங்­க­ளுக்கு என் மன­மார்ந்த வந்­த­னம்.  ஆனால் உங்­க­ளுக்கு கீழ்ப்­ப­டி­வதை விட கட­வுள் எனக்கு விதித்­தி­ருப்­ப­தாக நான் நம்­பி­யி­ருக்­கும் பணி­யைச் செய்து கொண்­டி­ருக்­கி­றேன்.

என் உட­லில் வலு­வும் உயி­ரும்  இருக்­கும் வரை­யில் தத்­துவ ஆராய்ச்சி செய்­வதை நான் நிறுத்த மாட்­டேன். நான் யாரைக் கண்­டா­லும் அவரை நெருங்கி `ஐயா! அறி­வைப் பெறு­வோம்.  உண்­மையை உணர்­வோம்.

ஆத்­ம­லா­பத்தை  அடை­வோம் என்­னும்  எண்­ண­மின்­றிப் பொரு­ளி­லும் வீண் பொறா­மை­க­ளி­லும் மனம் வைத்து உழ­லு­கி­றீர்­களே! உங்­க­ளுக்கு வெட்­க­மில்­லையா?’ என்று கேட்­கும் வழக்­கத்தை விட­மாட்­டேன். எனக்­குச் சாவு என்­பது இன்­ன­தென்று தெரி­யாது. ஒரு வேளை அது நன்­மை­யா­ன­தா­க­வும் இருக்­க­லாம். நான் அதைக் கண்டு அஞ்­ச­வில்லை.

ஆனால் ஒரு­வன் தன் கட­மை­யி­னின்று  வழு­வு­தல் தீது என்­பதை நான் நன்கு அறிந்­தி­ருக்­கி­றேன். ஆகவே தீது என்று தெரிந்­தி­ருப்­ப­தைச் செய்­வ­தைக் காட்­டி­லும் ஒரு வேளை நன்­மை­யாக முடிந்­தா­லும் முடி­யக்­கூ­டிய சாவையே நான் வர­வேற்­கி­றேன்.

 உயிர் வாழும் போது உண்­மைக்­கும் அதை அறி­யும் அறி­வுக்­கும் சிறந்த தொண்டு செய்து வந்த அப்­பெ­ரி­யார் அவ்­வு­யி­ரைத் தியா­கம் செய்து அவற்­றுக்கு இன்­னும் சிறந்த தொண்டு செய்­தார். அவர் வாழ்க

( தொட­ரும்)Trending Now: