சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் பட்னாவிஸ்

09-08-2019 03:53 PM

மகா­ராஷ்­டிர முதல்­வர் தேவேந்­திர பட்­னா­விஸ் வரும் மகா­ராஷ்­டிரா சட்­ட­சபை தேர்­த­லுக்­காக பிர­சா­ரத்தை தொடங்­கி­விட்­டார். சட்­ட­சபை தேர்­தல் வரும் அக்­டோ­பர் மாதம் நடை­பெற வாய்ப்பு உள்­ளது. இந்த மாதம் தேவேந்­திர பட்­னா­வில் தேர்­தல் பிர­சாத்­திற்­காக பல்­வேறு பொதுக்­கூட்­டங்­க­ளில் உரை­யாற்ற உள்­ளார். அவர் ‘மகா­ஜ­ன­தேஷ் யாத்­திரை’ என்ற பெய­ரில் சென்ற வாரம் தேர்­தல் பிர­சா­ரத்தை தொடங்­கி­விட்­டார். விதர்பா பிராந்­தி­யத்­தில் அம­ரா­வதி மாவட்­டத்­தில் உள்ள மொஜாரி என்ற இடத்­தில் முதல் பிர­சார கூட்­டத்­தில் பட்­னா­விஸ் பேசி­னார். அப்­போது பதி­னைந்து வருட காங்­கி­ரஸ்–­தே­சிய வாத காங்­கி­ரஸ் கூட்­டணி ஆட்­சி­யை­யும், ஐந்து வருட பா.ஜ., ஆட்­சி­யை­யும் ஒப்­பிட்டு பேசி­னார். இந்த மாநி­லத்­தில் பா.ஜ.வின் கோட்டை என கரு­தப்­ப­டும் விதர்பா பிராந்­தி­யத்­தில் ஏற்­பட்­டுள்ள மாற்­றத்­தை­யும் சுட்­டிக் காட்­டி­னார்.

“ஐந்து வரு­டங்­க­ளில் நாங்­கள் என்ன செய்­துள்­ளோம் என்­பதை எடுத்­துக்­கூ­றவே வந்­துள்­ளேன். முந்­தைய அரசு 15 வரு­டங்­க­ளில் செய்­யா­ததை, நாங்­கள் ஐந்து வரு­டங்­க­ளில் செய்­துள்­ளோம். நான் பகி­ரங்­க­மாக எதிர்­கட்­சி­க­ளுக்கு சவால் விடு­கின்­றேன். நீங்­கள் என்ன செய்­துள்­ளீர்­கள் என்­ப­தை­யும், நாங்­கள் என்ன செய்­துள்­ளோம் என்­ப­தை­யும் பகி­ரங்­க­மாக விவா­திக்க அழைக்­கின்­றேன். உங்­களை விட நாங்­கள் இரண்டு மடங்கு அதி­க­மாக செய்­ய­வில்லை எனில், நாங்­கள் மக்­க­ளின் ஆசிர்­வாத்த்தை பெற போக­வில்லை” என்று பொதுக் கூட்­டத்­தில் பேசும் போது முதல்­வர் தேவேந்­திர பட்­னா­விஸ் கூறி­னார்.  

அவர் முந்­தைய கூட்­டணி அர­சும், தனது அர­சும் நீர்­பா­ச­னம், கல்வி, தூய்­மை­யான கழிப்­பறை கட்­டு­வது, தொழிற்­துறை, விவ­சா­யம் போன்­ற­வை­க­ளில் செய்­துள்ள சாத­னை­களை பற்றி ஒப்­பிட்டு கூறி­னார்.

முந்­தைய கூட்­டணி அரசு கடந்த பதி­னைந்து வரு­டங்­க­ளில் 4 ஆயி­ரம் ஹெக்­டே­ருக்கு பாசன வசதி செய்­துள்­ளது. நாங்­கள் 2014 முதல் 2018 வரை நான்கு வரு­டங்­க­ளில் 50 ஆயி­ரம் ஹெக்­டே­ருக்கு பாசன வசதி ஏற்­ப­டுத்­தி­யுள்­ளோம். எங்­கள் அரசு கடன் தள்­ளு­படி, வறட்சி நிவா­ர­ணம், பயிர் காப்­பீடு, மற்ற திட்­டங்­களை அமல்­ப­டுத்­து­வ­தில் விவ­சா­யி­க­ளுக்கு ஆத­ர­வாக உள்­ளது. கடந்த ஐந்து வரு­டங்­க­ளில் விவ­சா­யி­க­ளுக்கு ரூ. 50 ஆயி­ரம் கோடி கொடுத்­துள்­ளோம். முந்­தைய கூட்­டணி அரசு 15 வரு­டங்­க­ளில் ரூ.15 ஆயி­ரம் கோடி கூட கொடுக்­க­வில்லை என்று பொதுக் கூட்­டத்­தில் தேவேந்­திர பட்­னா­விஸ் சுட்­டிக் காட்­டி­னார்.

மேலும் அவர் கல்வி அளிப்­ப­தில் மகா­ராஷ்­டிரா 18 ம் இடத்­தில் இருந்­தது. தற்­போது மூன்­றா­வது இடத்தை பிடித்­துள்­ள­தை­யும், தொழிற்­துறை வளர்ச்சி, அந்­நிய நேரடி முத­லீடு பெறு­தல் ஆகி­யவை பற்றி புள்ளி விப­ரங்­க­ளு­டன் விளக்­கி­னார்.

இந்த மாதம் முழு­வ­தும் முதல்­வர் தேவேந்­திர பட்­னா­விஸ் மகா­ஜ­ன­தேஷ் யாத்­திரை செல்­கின்­றார். 32 மாவட்­டங்­க­ளில் 4,384 கி.மீட்­டர் யாத்­திரை (சுற்­றுப்­ப­ய­ணம்) செல்­கின்­றார். மொத்­த­முள்ள 288 சட்­ட­சபை தொகு­தி­க­ளில் 150 தொகு­தி­க­ளில் பய­ணம் மேற்­கொள்­கின்­றார். அப்­போது 85 பெரிய பொதுக்­கூட்­டங்­க­ளி­லும், 238 கிரா­மங்­க­ளைச் சேர்ந்த மக்­களை சந்­திக்க 75 சிறிய அள­வி­லான கூட்­டங்­க­ளி­லும் உரை­யாற்­று­கின்­றார்.

இந்த மகா­ஜ­ன­தேஷ் யாத்­திரை மாநி­லம் முழு­வ­தும் நடந்­தா­லும், தேவேந்­திர பட்­னா­விஸ் பெரும்­பா­லான நாட்­களை விதர்பா பிராந்­தி­யத்­தில் செல­வ­ழிக்­கின்­றார். விதர்பா பிராந்­தி­யம் பா.ஜ.,வின் செல்­வாக்கு அதி­கம் உள்ள பகுதி மட்­டு­மல்­லாது.

தேவேந்­திர பட்­னா­விஸ் விதர்பா பிராந்­தி­யத்தை சேர்ந்­த­வ­ரும் கூட. விதர்பா பிராந்­தி­யத்­தில் 1,232 கி.மீட்­டர் பய­ணம் செய்து மக்­களை சந்­திக்­கின்­றார். இதே போல் மரத்­வாடா பிராந்­தி­யத்­தில் 1,069 கி.மீட்­டர், மேற்கு மகா­ராஷ்­டி­ரா­வில் 812 கி.மீட்­டர், கொங்­கன் பிர­தே­சத்­தில் 638 கி.மீட்­டர், வடக்கு மகா­ராஷ்­டி­ரா­வில் 633 கி.மீட்­டர் சுற்­றுப் பய­ணம் செய்து மக்­களை சந்­தித்து ஆத­ரவு திரட்­டு­கி­றார்.

விதர்பா பிராந்­தி­யத்தை பிரித்து தனி மாநி­ல­மாக ஆக்க வேண்­டும் என்ற கோரிக்கை நீண்ட கால­மாக உள்­ளது. இதற்கு பா.ஜ., தலை­வர்­கள் ஆத­ர­வாக உள்­ள­னர். இந்த பிராந்­தி­யத்­தின் வளர்ச்­சி­யில் பட்­னா­விஸ் அரசு கவ­னம் செலுத்­து­கி­றது என்­பதை எடுத்­துக் காட்­டும் வகை­யில், இங்­கி­ருந்து தேவேந்­திர பட்­னா­விஸ் பிர­சா­ரத்தை தொடங்­கி­யுள்­ளார்.

மொஜா­ரி­யில் நடை­பெற்ற முதல் பிர­சார கூட்­டத்­தில் தேவேந்­திர பட்­னா­விஸ் பேசும் போது, “ எங்­கள் அரசு பத­வி­யேற்­ப­வ­தற்கு முன் மகா­ராஷ்­டிரா, விதர்பா, விவ­சா­யி­க­ளின் நிலை எப்­படி இருந்­தது? 2009ல் இருந்து விவ­சாய பம்பு செட்­க­ளுக்கு மின் இணைப்பு கொடுக்­கா­மல் நிலு­வை­யில் இருந்­தன. எங்­கள் அமைச்­சரை கூடி, மின் இணைப்பு கொடுக்­கும் முடிவை எடுத்­தது. 1 லட்­சத்து 50 ஆயி­ரம் விவ­சா­யி­க­ளுக்கு மின் இணைப்பு கொடுத்­துள்­ளோம்” என்று கூறி­னார்.

விதர்பா பிராந்­தி­யத்­தில் முத­லீ­டு­களை பெறும் வகை­யில் தொழிற்­து­றைக்கு மின் கட்­ட­ணத்தை குறைத்­துள்­ள­தை­யும், 50 ஆயி­ரம் பேருக்கு வேலை வாய்ப்பை உரு­வாக்­கும் வகை­யில் ஒருங்­கி­ணைந்த ஜவுளி பூங்கா அமைய உள்­ளத. நாக்­பூர்– மும்பை விரை­வுச் சாலை அமைக்­கும் வேலை­களை தொடங்­கி­யுள்­ளோம். இந்த விரை­வுச் சாலை அமை­வ­தால் இரண்டு நக­ரங்­க­ளுக்­கும் இடை­யி­லான பிர­யாண நேரம் குறை­யும். அத்­து­டன் மும்­பை­யில் உள்ள ஜவ­ஹர்­லால் நேரு துறை­மு­கத்­திற்கு விரை­வாக சரக்­கு­களை அனுப்­ப­மு­டி­யும். இத­னால் வர்த்­த­கம் அதி­க­ரிக்­கும் என்­றும் முதல்­வர் தேவேந்­திர பட்­னா­விஸ் கூறி­னார்.

விதர்பா பிர­தே­சத்­தில் நிக­வும் வறட்­சி­யால் எப்­போ­தும் தண்­ணீர் பற்­றாக்­குறை இருக்­கின்­றது. இத­னால் விவ­சா­யி­கள் பல இன்­னல்­களை எதிர் கொள்­கின்­ற­னர். இந்த வறட்சி போக்­கப்­ப­டும் என்று கூறிய பட்­னா­விஸ், “நமது தலை­முறை வறட்­சியை சந்­திக்­கின்­றது. அடுத்த தலை­முறை வறட்­சியை எதிர்­கொள்ள அனு­ம­திக்க மாட்­டேன்’ என்­றும் கூறி­னார்.

மகா­ராஷ்­டி­ரா­வில் பார­திய ஜன­தா­வும், சிவ­சே­னா­வும் கூட்­டணி கட்­சி­யாக உள்­ளன. வரும் சட்­ட­சபை தேர்­த­லை­யும் கூட்­டாக சந்­திக்க உள்­ளன. அதே நேரத்­தில் இரண்டு கட்­சி­க­ளும் மக்­களை சந்­தித்து ஆத­ரவு திரட்ட தனித்­த­னி­யாக தேர்­தல் பிர­சா­ரத்தை தொடங்­கி­யுள்­ளன. முதல்­வர் தேவேந்­திர பட்­னா­விஸ் மகா­ஜ­ன­தேஷ் யாத்­திரை நடத்­தும் அதே நேரத்­தில் சிவ­சேனா தலை­வர் உத்­தவ் தாக்­ரே­யின் மகன் ஆதித்ய தாக்ரே ‘ஜன ஆசிர்­வாத்’ யாத்­திரை மேற்­கொண்­டுள்­ளார். இவர் முதல் கட்ட ஜன ஆசிர்­வாத் யாத்­தி­ரையை சென்ற மாதம் முடித்­து­விட்­டார். சென்ற வாரம் பட்­னா­விஸ் மகா­ஜ­ன­தேஷ் யாத்­திரை தொடங்­கு­வ­தற்கு ஒரு நாள் முன்­பாக, ஆதித்ய தாக்ரே இரண்­டாம் கட்ட ஜன ஆசிர்­வாத் யாத்­தி­ரையை சோலா­பூர் மாவட்­டத்­தில் இருந்து தொடங்­கி­னார்.

பார­திய ஜனதா நடத்­தும் மகா­ஜ­ன­தேஷ் யாத்­தி­ரை­யின் நோக்­கம்,பா.ஜ., சிவ­சேனா கூட்­ட­ணி­யின் தலை­வர், முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் தேவேந்­திர பட்­னா­விஸ் என்­பதை உறு­திப்­ப­டுத்­தும் வித­மாக நடக்­கின்­றது. சிவ­சேனா நடத்­தும் ஜன ஆசிர்­வாத் யாத்­திரை எதிர்­கால முத­ல­மைச்­சர் உத்­தவ் தாக்ரே என்­பதை எடுத்­துக் காட்­டும் வகை­யில் அமைந்­துள்­ளது. இரண்டு கட்­சி­க­ளும் நடத்­தும் யாத்­தி­ரை­க­ளும் மக்­களை சந்­தித்து ஆத­ரவு தெரி­வித்­தற்கு நன்றி தெரி­விப்­ப­து­டன், இரண்டு மாதத்­தில் நடக்க உள்ள சட்­ட­சபை தேர்­த­லுக்கு ஆத­ரவு திரட்­டும் வகை­யி­லும் உள்­ளது.

பார­திய ஜன­தா­வும், சிவ­சே­னா­வும் கூட்­டணி கட்­சி­க­ளாக இருந்து தேர்­தலை ஒன்று சேர்ந்து போட்­டி­யிட்­டா­லும், அதி­கா­ரத்தை பகிர்ந்து கொள்­வ­தில் பிரச்­னை­க­ளும் உள்­ளன. குறிப்­பாக முத­ல­மைச்­சர் பதவி யாருக்கு என்­ப­தில் போட்டி உள்­ளது. இருப்­பி­னும் முதல்­வர் தேவேந்­திர பட்­னா­விஸ், சிவ­சேனா தலை­வர் உத்­தவ் தாக்ரே கூட்­டாக சட்­ட­சபை தேர்­தலை சந்­திப்­பது என்­ப­தில் உறு­தி­யாக உள்­ள­னர்.

நன்றி: தி பிரிண்ட் இணை­ய­த­ளத்­தில் மனாசி பாட்கி.