அரசியல்மேடை : காஷ்மீர் புரட்சி!

09-08-2019 03:50 PM

காஷ்மீர் புரட்சி!

* மோடி மவுன யுத்தம்! * அமித்ஷா அதிரடி!

இந்­திய தேசத்­தின் தலைப்­ப­கு­தி­யில் உள்ள காஷ்­மீ­ரத்­தில் எழு­பது ஆண்டு பிரச்­னை­க­ளுக்கு ஒரு தீர்வு ஏற்­பட்­டுள்­ளது. இது நிரந்­தர தீர்வா? போக போக புதிய பிரச்­னை­கள் ஏதும் உரு­வா­குமா?.... என தெரி­ய­வில்லை. ஆனா­லும், பிர­த­மர் மோடி ஒரு மவுன யுத்­தத்தை நடத்தி காஷ்­மீ­ரத்­தில் ஒரு புரட்­சியை உரு­வாக்கி விட்­டார். அதற்­கான அதி­ரடி நட­வ­டிக்­கை­களை உள்­துறை அமைச்­சர் அமித்ஷா மிகச் சாதூர்­ய­மாக எடுத்து அதில் வெற்­றி­யும் கண்டு விட்­டார்.

எழு­பது ஆண்­டு­க­ளாக காஷ்­மீ­ரில் அப்­படி என்­ன­தான் பிரச்னை! கொஞ்­சம் பின்­னோக்­கிப் பார்ப்­போம். ஜம்மு – காஷ்­மீர் மாநி­லம் என்­பது, ஜம்மு – காஷ்­மீர் பள்­ளத்­தாக்கு மற்­றும் லடாக் என்ற மூன்று பெரும் பிரி­வு­களை உள்­ள­டக்­கிய பிர­தே­சம் ஆகும். இந்த பகு­தி­யில் கதுவா, ஜம்மு, சம்பா, உதம்­பூர், அனந்­த­நாக், குல்­காம், புல்­வாமா,சோபி­யான், பட்­காம், ஸ்ரீந­கர், கார்­கில், லே, ரியாசி, ராஜெ­ளரி, பூஞ்ச், தோடா, இராம்­பன், கிஷ்­து­வார், காந்­தர்­பல், பந்­தி­போரா, பார­முல்லா, குப்­வாரா ஆகிய ௨௧ மாவட்­டங்­கள் உள்­ளன.

இந்­தி­யா­வி­லுள்ள மாநி­லங்­க­ளி­லேயே ஜம்மு – காஷ்­மீர் பகு­தி­யில்­தான் இஸ்­லா­மி­யர் பெரும்­பான்­மை­யாக வசிக்­கின்­ற­னர். ஏற்­க­னவே, இந்த பகு­தி­யில் வசித்த பாரம்­ப­ரிய காஷ்­மீர் பண்­டிட்­கள் சுமார் ௩ லட்­சம் பேர் கடந்த ௯௦­க­ளில் நடை­பெற்ற தீவி­ர­வாத தாக்­கு­த­லின் போது வெளி­யேறி விட்­ட­னர்.

2011–ம் ஆண்டு இந்­திய மக்­கள் தொகை கணக்­கெ­டுப்­பின் படி ஜம்மு– காஷ்­மீர் மக்­கள் தொகை சுமார் ஒரு­கோ­டியே 26 லட்­சம் பேர். இவர்­க­ளில் இந்­துக்­கள் சுமார் 36 லட்­சம் பேர் (25.44%) இஸ்­லா­மி­யர் சுமார் 86 லட்­சம் பேர் (68.31%) கிறிஸ்­த­வர்­கள் சுமார் 36 ஆயி­ரம் பேர் (0.28%) சீக்­கி­யர்­கள் சுமார், 2 லட்­சத்து 35 ஆயி­ரம் பேர். இது தவிர சம­ணம், பவுத்­தம் உள்­ளிட்ட பிற சமூ­கத்­தி­னர் சுமார் ஒரு லட்­சத்து 16 ஆயி­ரம் பேர் (2.98%) உள்­ள­னர்.

சுதந்­தி­ரத்­திற்கு பின்­னர் 1947–அக்­டோ­ப­ரில் மன்­னர் ஆட்­சி­யில் இருந்த காஷ்­மீர் தேசத்­தின் மீது பாகிஸ்­தான் படை­கள் புகுந்து, அந்த பகு­தி­களை ஆக்­ர­மிக்­கத் தொடங்­கின. அப்­போது அங்கு ஆட்சி நடத்தி வந்த மன்­னர் ஹரி­சிங் இந்­தி­யா­வின் உத­வியை நாட, அப்­போது ஜம்மு – காஷ்­மீர் பகு­தியை இந்­தி­யா­வு­டன் இணைப்­ப­தற்கு ஒப்­பு­தல் வாங்­கிய இந்­திய அர­சாங்­கம், தனது ராணு­வத்தை காஷ்­மீர் பகு­திக்கு அனுப்பி பாகிஸ்­தான் படை­களை விரட்டி அடித்­தது. ஆனா­லும் அவர்­கள் ஆக்­ர­மித்த சில பகு­தி­கள் ‘ஆசாத் காஷ்­மீர்’ என்ற பெய­ரில் பாகிஸ்­தான் கட்­டுப்­பாட்­டி­லேயே இன்­றும் உள்­ளன.

இதற்­கி­டையே, இந்­தி­யா­வில் உள்ள சமஸ்­தா­னங்­கள் அனைத்­தை­யும், இந்­திய ஒன்­றி­யத்­தின் கீழ் ஒருங்­கி­ணைக்­கும்  முயற்­சி­யில் சர்­தார் வல்­ல­பாய் பட்­டேல் ஈடு­பட்டு வெற்­றி­யும் கண்­டார். ஆனால், ஜம்மு – காஷ்­மீர் பகுதி மட்­டும் தனித்து செயல்­பட வேண்­டும் என அந்த மன்­னர் விரும்­பி­னார். அத­ன­டிப்­ப­டை­யில், அர­சி­யல் சட்­ட­மேதை அம்­பேத்­கர், சர்­தார் வல்­ல­பாய் பட்­டேல் உள்­ளிட்ட தலை­வர்­க­ளின் ஆலோ­ச­னை­க­ளை­யும் மீறி, அன்­றைய பிர­த­மர் ஜவ­ஹர்­லால் நேரு, ஜம்மு –காஷ்­மீ­ருக்கு சிறப்பு அந்­தஸ்தை வழங்க முன்­வந்­தார்.

இத­னை­ய­டுத்து 1949–ம் ஆண்­டில் இந்­திய அர­சி­ய­மைப்பு சட்­டப் பிரிவு 370ன் படி ஜம்மு –காஷ்­மீர் மாநி­லத்­துக்கு சிறப்பு அந்­தஸ்து வழங்­கப்­பட்­டது.இந்த சட்­டப்­பி­ரி­வின்­படி ராணு­வம், வெளி­யு­றவு, தக­வல் தொடர்­புத்­து­றை­கள் தவிர, பிற துறை­கள் தொடர்­பாக, மத்­திய அரசு, இம்­மா­நில அர­சின் இசைவு இல்­லா­மல் இயற்­றும் சட்­டங்­கள் இங்கு பொருந்­தாது. ஜம்மு – காஷ்­மீர் மாநில எல்­லைக்­குள் பிற மாநி­லத்­த­வர் எவ­ரும் நிலம் உள்­ளிட்ட அசையா சொத்­துக்­களை வாங்க முடி­யாது. ஆனால், இந்த மாநி­லத்­த­வர் இந்­தி­யா­வின் எந்த பகு­தி­யி­லும் சொத்­துக்­கள் வாங்­க­லாம். இந்த மாநி­லத்தை சேர்ந்த பெண்­கள் வெளி­மா­நில ஆண்­களை திரு­ம­ணம் செய்­தால், அவர்­க­ளும் ஜம்மு –காஷ்­மீர் பகு­தி­யில் அசையா சொத்­துக்­களை வாங்க முடி­யாது. ஆனால், ஆண்­கள் எந்த மாநி­லத்தை சேர்ந்த பெண்ணை மணந்­தா­லும் அவர்­கள் இந்த மாநி­லத்­தில் அசையா சொத்­துக்­களை வாங்­க­லாம்.

இந்­தி­யா­வின் ஒரு பகு­தி­யாக விளங்­கும் காஷ்­மீர் பிர­தே­சம் மட்­டுமே காலம், கால­மாக இத்­தகு சிறப்பு சலு­கை­களை அனு­ப­வித்து வரு­வ­தில் மாறு­பட்ட கருத்து இல்லை. ஆனால், கால­மெல்­லாம் இந்­தி­யத் திரு­நாட்­டிற்கு தொல்லை கொடுக்­கும் தீவி­ர­வாத கும்­பல்­களை நட­மாட விட்டு, பல ஆயி­ர­க­ணக்­கான அப்­பா­வி­களை கொன்று குவிக்­கும் செயல்­க­ளை­யும், இந்­திய ராணு­வத்­தை­யும், எல்­லைப் பாது­காப்­புப் படை­யி­ன­ரை­யும் பலி வாங்­கும் நட­வ­டிக்­கை­யும் தான் சகித்­துக்­கொள்ள முடி­ய­வில்லை.

இதற்கு எப்­ப­டி­யும் ஒரு முடிவு கட்ட வேண்­டும் என்று பார­திய ஜனதா கட்சி முயற்சி மேற்­கொண்டு வந்­தது. தனது தேர்­தல் அறிக்­கை­யி­லும், ஜம்மு – காஷ்­மீ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள சிறப்பு சலு­கை­கள் ரத்து செய்­யப்­பட வேண்­டும், அர­சி­ய­ல­மைப்பு சட்­டப் பிரிவு 370–ஐ நீக்க வேண்­டும் என வலி­யு­றுத்தி வந்­தது. அதற்­கான சரி­யான சந்­தர்ப்­பம் இப்­போ­து­தான் பா.ஜ.வுக்கு வாய்த்­துள்­ளது.

பாகிஸ்­தான் ஆக்­கி­ர­மிப்பு, போர், சீன ஆக்­கி­ர­மிப்பு, அடிக்­கடி மிரட்­டல், ஐ.நா. பஞ்­சா­யத்து, பிரிட்­டன், திபெத், ஆப்­கா­னிஸ்­தான், ரஷ்யா உள்­ளிட்ட நாடு­க­ளோடு எல்லை பிரச்னை குறித்து பேச்­சுக்­கள் என அவ்­வப்­போது பெரும் தலை­வ­லி­யா­கவே தொடர்ந்து கொண்­டி­ருந்த பிரச்­னைக்கு ஒரே அதி­ரடி அறி­விப்­பின் மூலம் ‘அமித்ஷா’ தீர்வு கண்­டுள்­ளார்.

கடந்த 5–ம் தேதி மத்­திய அமைச்­ச­ரவை கூட்­டம், அடுத்த சில மணி நேரங்­க­ளில் நாடா­ளு­மன்ற மாநி­லங்­க­ள­வை­யில் மசோ­தவை தாக்­கல் செய்து நிறை­வேற்றி, அடுத்த நாளே மக்­க­ள­வை­யில் தாக்­கல் செய்து, அதை­யும் நிறை­வேற்­றி­யது. அதனை தொடர்ந்து அர­சி­ய­ல­மைப்பு சட்­டம் 370–ஐ ரத்து செய்­வ­தற்­கான ஜனா­தி­ப­தி­யின் ஒப்­பு­தல், உட­ன­டி­யாக அதை மத்­திய அர­சி­த­ழில் வெளி­யிட்­டது என எவ­ரை­யும், எதை­யும் சிந்­திக்­க­வி­டா­மல், ஆலோ­சனை கலக்க விடா­மல் அதி­ர­டி­யாக செயல்­பட்ட மோடி அர­சின் செயல்­பா­டு­கள் பொது வெளி­க­ளில் பெரும் அதிர்ச்­சி­யை­யும், ஆச்­சர்­யத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இனி ஜம்மு – காஷ்­மீர் மாநி­லம், மத்­திய அர­சின் நேரடி மேற்­பார்­வை­யில் சட்­ட­ச­பை­யு­டன் கூடிய யூனி­யன் பிர­தே­ச­மாக செயல்­ப­டும். லடாக் பகுதி, துணை நிலை ஆளு­ந­ரின் கட்­டுப்­பாட்­டி­லும் செயல்­ப­டும். இந்­தியா முழு­மைக்­கும் தற்­போது செயல்­பட்டு வரும், பொதுப் பிரி­வி­ன­ருக்­கு­மான 10 சத­வீத  ஒதுக்­கீட்டை ஜம்மு – காஷ்­மீர் பகு­தி­யி­லும் செயல்­ப­டுத்த வழி­வகை காணப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பான மசோ­தா­வும் நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இதை தொடர்ந்து இந்­திய அர­சின் அனைத்து நலத்­திட்­டங்­க­ளும், வளர்ச்­சிப் பணி­க­ளும் அங்கு சென்­ற­டை­யும்.

இப்­போ­தைக்கு யூனி­யன் பிர­தே­ச­மாக செயல்­பட்­டா­லும், விரை­வில் அங்கு சகஜ நிலை திரும்­பி­ய­தும், மீண்­டும் மாநில அந்­தஸ்து வழங்­கப்­ப­டும் என்று உறுதி அளித்­துள்ள உள்­துறை அமைச்­சர் அமித்ஷா, விரை­வில், பாகிஸ்­தான் மற்­றும் சீன ஆக்­ர­மிப்­பில் உள்ள காஷ்­மீர் பகு­தி­க­ளை­யும் மீட்­டெ­டுப்­போம் என்று சூளு­ரைத்­துள்­ளார். நல்­லது நடக்­கட்­டும்!