மக்காச் சோளம் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதி

09-08-2019 03:45 PM

பீகார் மாநி­லம் பூர்­னியா மாவட்­டத்­தில் உள்ள பாய்சி என்ற கிரா­மத்­தைச் சேர்ந்த விவ­சாயி ராஜேஸ்­வர் மண்­டல். இவர் வரு­டத்­திற்கு இரண்டு முறை மக்­காச் சோளம் பயி­ரிட்டு வரு­கி­றார். இந்த வரு­டம் மக்­காச் சோளத்­தின் விளைச்­சல் அமோ­க­மாக இருந்­தது. ராஜேஸ்­வர் மண்­ட­லும், அவ­ரைப் போன்ற விவ­சா­யி­க­ளும் மகிழ்ச்­சி­யில் திளைத்­த­னர். ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்­க­வில்லை. ஏனெ­னில் மக்­காச் சோளம் விலை கடு­மை­யாக சரிந்­தது.

“எங்­க­ளால் என்ன செய்ய முடி­யும்? நாங்­கள் கடு­மை­யாக உழைத்­தோம். ஆனால் போதிய வரு­மா­னம் கிடைக்­க­வில்லை. மக்­காச் சோள விவ­சா­யி­களை ஒவ்­வொ­ரு­வ­ரும் ஏமாற்­று­கின்­ற­னர்” என்­கி­றார் ராஜேஸ்­வர் மண்­டல்.

இவரை போன்ற ஆயி­ரக்­க­ணக்­கான விவ­சா­யி­கள் முன்பு சணல், கோதுமை பயி­ரிட்டு வந்­த­னர். இதற்கு பதி­லாக இவர்­கள் அனை­வ­ரும் மக்­காச் சோளம் பயி­ரிட தொடங்­கி­னார்­கள். பீகா­ரில் நான்கு மாவட்­டங்­கள் அடங்­கிய ‘சீமான்­சல்’ பிராந்­தி­யம், மக்­காச் சோளம் அதி­கம் உற்­பத்தி செய்­யும் பகுதி என அழைக்­கப்­ப­டு­கி­றது. ஆனால் விளைச்­சல் அமோ­க­மாக இருப்­ப­தால், விலை சரிந்து விவ­சா­யி­கள் போதிய விலை கிடைக்­கா­மல் நஷ்­ட­ம­டை­கின்­ற­னர்.

இந்த பகு­தி­யில் கடந்த பத்து வரு­டங்­க­ளுக்கு முன், மக்­காச் சோளம் குறைந்த நிலப்­ப­ரப்­பில் பயி­ரிட்டு வந்­த­னர். மக்­காச் சோளத்­தின் தேவை அதி­க­மாக இருந்­தது. அதி­க­மாக விளைச்­ச­லும், நல்ல விலை­யும் கிடைத்த கார­ணத்­தால், அதிக அளவு விவ­சா­யி­கள் மக்­காச் சோளம் பயி­ரிட தொடங்­கி­னார்­கள்.

பஞ்லு ரஹ்­மான் என்ற விவ­சாயி கூறு­கை­யில், “நாங்­கள் முன்பு சணல் பயி­ரிட்டு வந்­தோம். இதில் கிடைக்­கும் வரு­வாயை வைத்து வாழ்க்கை நடத்­தி­னோம். பிறகு மக்­காச் சோளம் பயி­ரிட தொடங்­கி­னோம். ரபீ பரு­வத்­தில் நெல், கோதுமை பயி­ரிட்டு வந்த விவ­சா­யி­கள் மக்­காச் சோளம் பயி­ரிட தொடங்­கி­னார்­கள்” என்று தெரி­வித்­தார்.

ராஜேஸ்­வர் மண்­ட­லும், அவ­ரது நான்கு ஏக்­கர் நிலத்­தில் சணல், கோது­மையை பயி­ரிட்டு வந்­துள்­ளார். இவை­க­ளுக்கு பதி­லாக மக்­காச் சோளம் பயி­ரிட தொடங்­கி­யுள்­ளார். பின்­தங்­கிய சீமாஞ்­சல் பிராந்­தி­யத்­தில் பெரும்­பா­லான விவ­சா­யி­கள் மக்­காச் சோளம் பயி­ரி­டு­கின்­ற­னர். இதில் இருந்து கிடைக்­கும் வரு­மா­னத்­தில் குடும்­பம் நடத்­து­கின்­ற­னர் என்று கூறும் ராஜ்ஸ்­வர் மண்­டல், “எங்­கள் பிள்­ளை­களை படிக்க வைப்­பது, மகள்­க­ளுக்கு திரு­ம­ணம் செய்து கொடுப்­பது, மருத்­துவ செலவு ஆகி­ய­வை­க­ளுக்கு மக்­காச் சோளம் பயி­ரிட்டு கிடைக்­கும் வரு­மா­னத்தை மட்­டுமே நம்­பி­யுள்­ளோம். பல மாதங்­கள் கடு­மை­யாக உழைத்­தும் கூட, ஐந்து பேர் கொண்ட எனது குடும்­பம் நன்­றாக வாழ முடி­ய­வில்லை” என்­கின்­றார். சீமான்­சல் பிராந்­தி­யத்­தில் உள்ள ஒவ்­வொரு கிரா­மத்­தி­லும் வரு­டம் முழு­வ­தும் வயல்­க­ளில் மக்­காச் சோள செடி­கள் உள்­ளன.

2015ல் குவிண்­டால் மக்­காச் சோளத்­தின் குறைந்­த­பட்ச ஆதார விலை  ரூ.1,050 ஆக இருந்­தது. இதை சென்ற வரு­டம் மத்­திய அரசு ரூ.1,700 ஆக அதி­க­ரித்­தது. ஆனால் யதார்த்த்­தில் அரசு நிர்­ண­யித்­துள்ள விலையை விட, மிக குறைந்த விலைக்கே விவ­சா­யி­க­ளி­டம் இருந்து வியா­பா­ரி­கள் வாங்­கு­கின்­ற­னர்.  

சென்ற லோக்­சபா தேர்­த­லின் போது இதன் விலை குவிண்­டால் ரூ.2,300 இல் இருந்து ரூ.2,400 வரை இருந்­தது. லோக்­சபா தேர்­தல் முடிந்து அறு­வ­டைக்கு பிறகு, இதன் விலை ரூ.1,700 முதல் ரூ.1,800 ஆக சரிந்­தது. ஆனால் இந்த வரு­டம் மக்­காச் சோளம் அறு­வடை முடிந்து வரத்து அதி­க­மாக உள்­ள­தால், பல விவ­சா­யி­கள் குவிண்­டால் ரூ.1,050 முதல் ரூ.1,200க்கு விற்­பனை செய்­துள்­ள­னர். சில விவ­சா­யி­கள் இதை விட குறை­வான விலைக்­கும் விற்­பனை செய்­துள்­ள­னர். ஒரு சில விவ­சா­யி­கள் மட்­டுமே ரூ.1,500 முதல் ரூ.1,600 வரை விற்­பனை செய்­துள்­ள­னர்.

இதன் விலை சரிந்­த­தற்கு  என்ன கார­ணம் என்­பதை பற்றி பஞ்லு ரஹ்­மான் கூறு­கை­யில், எங்­களை போன்ற ஏழை விவ­சா­யி­க­ளுக்கு மக்­காச் சோளம் அறு­வடை செய்த உடன் பணம் உடனே  தேவைப்­ப­டு­கி­றது. இத­னால் கிடைத்த விலைக்கு விற்­பனை செய்ய நிர்ப்­பந்­தம் ஏற்­ப­டு­கி­றது. பெரிய, பணக்­கார விவ­சா­யி­கள் இருப்பு வைத்து நல்ல விலை கிடைக்­கும் போது காத்­தி­ருந்து விற்­பனை செய்­கின்­ற­னர்” என்று தெரி­வித்­தார்.

ராஜேஸ்­வர் மண்­டல், பஞ்லு ரஹ்­மான் போன்ற ஆயி­ரக்­க­ணக்­கான ஏழை விவ­சா­யி­கள் விலை கிடைக்­கா­மல் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். எங்­க­ளது கடின உழைப்­பால், சீமான்­சல் பிர­தே­சம் நாட்­டின் மக்­காச் சோள உற்­பத்தி கேந்­தி­ர­மாக ஆனது. ஆனால் இடைத்­த­ர­கர்­கள், வியா­பா­ரி­கள், வர்த்­த­கர்­க­ளால், எங்­க­ளுக்கு கிடைக்க வேண்­டிய வரு­மா­னம் பறி­போ­கின்­றது” என்­கின்­ற­னர் விவ­சா­யி­கள்.

பீகார் மாநில அர­சின் புள்­ளி­வி­ப­ரப்­படி பூர்­னியா, கிசன்­கஞ்ச், அரா­ரியா, கதி­கர் மாவட்­டங்­கள் அடங்­கிய சீமாஞ்­சல் பிர­தே­சத்­தில் 1 லட்­சத்து 40 ஆயி­ரம் ஹெக்­டேர் நிலப்­ப­ரப்­பில் மக்­காச் சோளம் பயி­ரி­டப்­ப­டு­கி­றது. இதன் அரு­கா­மை­யில் உள்ள மதி­புரா, சகர்சா, சூபால் ஆகிய மாவட்­டங்­கள் அடங்­கிய ‘கோசி’ பிராந்­தி­யத்­தில் 60 ஆயி­ரம் ஹெக்­டேர் நிலப்­ப­ரப்­பில் மக்­காச் சோளம் பயி­ரி­டப்­ப­டு­கி­றது. வேளாண் துறை அதி­கா­ரி­க­ளின் தக­வல்­படி, பீகா­ரில் ஒரு ஹெக்­டே­ருக்கு 3,904 கிலோ மக்­காச் சோளம் விளைச்­சல் உள்­ளது. தேசிய அளவை விட இது அதி­கம். தேசிய அள­வில் சரா­ச­ரி­யாக ஒரு ஹெக்­டே­ருக்கு 2,889 கிலோ விளைச்­சல் உள்­ளது.

கடந்த காலங்­க­ளில் பீகார் மாநி­லத்­தில் அதிக அளவு மக்­காச் சோளம் உற்­பத்­தி­யா­கி­யுள்­ளது. இந்­தி­யா­வில் மக்­காச் சோளம் அதிக அளவு உற்­பத்தி செய்­யும் மாநி­லங்­க­ளில் பீகார் மூன்­றா­வது இடத்­தில் உள்­ளது. 2005–06ம் ஆண்­டில் 13 லட்­சத்து 60 ஆயி­ரம் டன் உற்­பத்தி செய்­தது. இது 2016–17ல் 38 லட்­சத்து 50 ஆயி­ரம் டன்­னாக அதி­க­ரித்­தது.

பீகார் மாநி­லத்­தைச் சேர்ந்த வர்த்­த­கர் பப்பு யாதவ் கூறு­கை­யில், “விவ­சா­யி­க­ளி­டம் இருந்து வாங்­கும் மக்­காச் சோளத்தை வேறு மாநி­லங்­க­ளில் விற்­பனை செய்­கின்­றோம். இங்கு வரு­டம் முழு­வ­தும் மக்­காச் சோளம் குறைந்த் விலை­யில் தேவை­யான அளவு கிடைப்­ப­தால், இதன் வர்த்­தக மைய­மாக திகழ்­கி­றது” என்று கூறி­னார்.

பூர்­னியா மாவட்­டத்­தில் குலாப் பாக் என்ற இடத்­தில் மொத்த வியா­பார சந்தை உள்­ளது. இங்­குள்ள வர்த்­த­கர் சுனில் குமார் கேசரி கூறு­கை­யில், இங்­கி­ருந்து வாங்கி வேறு மாநி­லங்­க­ளுக்கு குறிப்­பாக தமிழ்­நாடு, பஞ்­சாப், மேற்கு வங்­கம், மகா­ராஷ்­டிரா ஆகிய மாநி­லங்­க­ளுக்கு அனுப்­பு­கின்­றோம். இதன் தேவை வரு­டத்­திற்கு வரு­டம் அதி­க­ரிக்­கின்­றது. நேபா­ளம், வங்­கா­ள­தே­சம் ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த வியா­பா­ரி­க­ளும் வாங்­கு­கின்­ற­னர்.கோத்­ரேஜ், என்.சி.எம்.எல் போன்ற பெரிய நிறு­வ­னங்­க­ளும் கூட, இங்கு மக்­காச் சோளம் வர்த்­த­கத்­தில் ஈடு­பட்­டுள்­ளன” என்று தெரி­வித்­தார்.

சீமான்­சல், கோசி பிராந்­தி­யங்­க­ளில் வரு­டத்­திற்கு 17 லட்­சம் டன்­னுக்­கும் அதி­க­மாக மக்­காச் சோளம் உற்­பத்­தி­யா­கி­றது. இதில் பன்­னாட்டு நிறு­வ­னங்­கள், பெரிய வர்த்­த­கர்­கள் 14 லட்­சம் டன் வரை வாங்கி மற்ற மாநி­லங்­க­ளுக்கு, மற்ற நாடு­க­ளுக்கு அனுப்­பு­கின்­ற­னர். 3 லட்­சம் டன் பீகா­ரில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. பீகா­ரில் இருந்து மக்­காச் சோளத்தை ரயில் மூலம் மற்ற பகு­தி­க­ளுக்கு அனுப்­பு­வ­தால், ரயில்­வேக்­கும் கணி­ச­மான வரு­வாய் கிடைக்­கின்­றது.

மகேந்­திர யாதவ் என்­ப­வர் கூறு­கை­யில், “மாநில அரசு தொடக்க வேளாண்மை கடன் சொசைட்­டி­கள் மூலம் விவ­சா­யி­க­ளி­டம் இருந்து நேர­டி­யாக நெல், கோதுமை போன்­ற­வை­களை கொள்­மு­தல் செய்­கின்­றன. ஆனால் இது போல் மக்­காச் சோளத்தை கொள்­மு­தல் செய்­வ­தில்லை. இத­னால் விவ­சா­யி­க­ளுக்கு அரசு நிர்­ண­யிக்­கும் குறைந்­த­பட்ச ஆதார விலை கிடைப்­ப­தில்லை. இவ்­வாறு விவ­சா­யி­க­ளுக்கு குறைந்­த­பட்ட ஆதார விலை கிடைக்­கா­மல் செய்­வ­து­டன், வர்த்­த­கர்­கள், வியா­பா­ரி­கள் தங்­கள் இஷ்­டம் போல் விலையை நிர்­ண­யித்­துக் கொள்­ள­வும் உத­வி­யாக உள்­ளது. ஆயி­ரக்­க­ணக்­கான விவ­சா­யி­கள் மக்­காச் சோளத்தை உற்­பத்தி செய்­கின்­ற­னர். ஆனால் இவர்­களை வைத்து நூற்­றுக்­க­ணக்­கான வியா­பா­ரி­கள், வர்த்­த­கர்­கள், பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் பலன் அடை­கின்­ற­னர் என்று தெரி­வித்­தார்.

இது பற்றி பீகார் விவ­சாய அமைச்­சர் பிரேம் குமார் கருத்து தெரி­விக்­கை­யில், “மக்­காச் சோளத்தை அப்­ப­டியே விற்­பனை செய்­வதை விட­ம­திப்பு கூட்டி விற்­பனை செய்­தால் விவ­சா­யி­க­ளுக்கு அதிக வரு­வாய் கிடைக்­கும். அத்­து­டன் இருப்பு வைக்­க­வும், மதிப்பு கூட்­டு­வ­தற்­கான வச­தி­க­ளை­யும் செய்ய வேண்­டும் என்று  அழுத்­தம் திருத்­த­மாக கூறி­னார்.

பிரிட்­ட­னின் டிபார்ட்­மென்ட் ஆப் இன்­டர்­நே­ஷ­னல் டெவ­லப்­மென்ட், ஆக்­சன் ஆன் கிளை­மேட் டுடே– கிளை­மேட் சேஞ்ச் இன்­ன­வே­சன் புரோ­கி­ராம் என்ற அறிக்­கை­யில், பீகா­ரில் உற்­பத்தி செய்­யப்­ப­டும் மக்­காச் சோளத்­தில் 8 முதல் 10 சத­வி­கி­தம் வரை மட்­டுமே, அந்த மாநி­லத்­தில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. உப­ரி­யாக உள்ள 80 முதல் 85 சத­வி­கி­தம் வேறு இடங்­க­ளுக்கு அனுப்­பப்­ப­டு­கின்­றது. தென் கிழக்­கா­சிய நாடு­கள், நேபா­ளம், வங்­கா­ள­தே­சம் ஆகிய நாடு­க­ளுக்­கும் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கி­றது.  

பீகா­ரில் பயன்­ப­டுத்­தப்­ப­டும் மக்­காச் சோளத்­தில் மூன்­றில் ஒரு பங்கு கால்­ந­டை­க­ளுக்­கும், கோழி தீவ­னங்­க­ளுக்­கும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. பத்­தில் ஒரு பங்கு மற்ற தேவை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

ஆந்­திரா, கர்­நா­டாகா ஆகிய மாநி­லங்­க­ளில் உள்­ளுர் தேவைக்­காக மக்­காச் சோளம் பயி­ரி­டப்­ப­டு­கி­றது. ஆனால் பீகா­ரில் ரபி பரு­வத்­தில் பயி­ரி­டுப்­ப­டும் மக்­காச் சோளம், இந்த மாநி­லத்­தின் தேவைக்­காக பயி­ரி­டப்­ப­டு­வ­தில்லை. இடைத் தர­கர்­களை தவிர்த்து, மக்­காச் சோளத்தை மதிப்பு கூட்டி விற்­பனை செய்­தால் விவ­சா­யி­க­ளுக்கு அதிக விலை கிடைக்­கும் என்று அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

மக்­காச் சோளம் பயி­ரி­டும் விவ­சா­யி­க­ளுக்கு, இதை வாங்­கும் நுகர்­வோர் செலுத்­தும் விலை­யில் மூன்­றில் பங்கே கிடைக்­கி­றது. வர்த்­த­கர்­கள், வியா­பா­ரி­கள், இதை பதப்­ப­டுத்­தும்  தொழிற்­சா­லை­க­ளுக்கு அதிக வரு­வாய் கிடைக்­கின்­றது. தற்­போது பீகா­ரில் மக்­காச் சோளம் பதப்­ப­டுத்­தும் 33 தொழிற்­சா­லை­கள் உள்­ளன. இவற்­றில் மாநி­லத்­தில் உற்­பத்­தி­யா­கும் மக்­காச் சோளத்­தில் பத்­தில் ஒரு பங்கு மட்­டுமே பதப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

பீகார் விவ­சாய துறை­யின் தக­வல்­படி, பீகா­ரில் உற்­பத்­தி­யா­கும் மக்­காச் சோளத்­தில் 65 சத­வி­கி­தம் சீமான்­சல், கோசி பிராந்­தி­யத்­தில் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கி­றது. இதன் உற்­பத்தி அமோ­க­மாக இருந்­தா­லும், குறைந்த விலை கிடைப்­ப­தால் விவ­சா­யி­கள் கஷ்­டப்­ப­டு­கின்­ற­னர். நியா­ய­மான விலை கிடைக்க அரசு உதவி செய்ய வேண்­டும் என்று விவ­சா­யி­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர்.

நன்றி: வில்­லேஜ்ஸ்­கொ­யர் இணை­ய­த­ளத்­தில் முக­மது இம்­ரான் கான்.