பாரம்பரியம் என்ற பெயரில் திமிங்கில வேட்டை

09-08-2019 03:39 PM

டென்மார்க் அருகே உள்ள போரிஸ் தீவு கூட்டத்தைச் சேர்ந்த ஒரு தீவு கிரின்ட் தீவு. இந்த தீவில் பாரம்பரியம் என்ற பெயரில் வருடம் முழுவதும் திமிங்கில வேட்டை நடக்கிறது. இந்த தீவைச் சேர்ந்தவர்கள் திமிங்கிலங்களைக் கொன்று அவற்றின் மாமிசம், கொழுப்பு ஆகியவற்றை குளிர்காலங்களில் தேவைப்படும் உணவுக்காக சேமித்து வைக்கின்றனர்.

இந்த திமிங்கில வேட்டையை தடுக்க ‘சீ செப்பார்ட்’ என்ற தொண்டு நிறுவனம், திமிங்கிலங்களை வேட்டையாடுவதை நிறுத்தினால் வருடத்திற்கு ஒரு மில்லியன் யூரோவை பத்து வருடங்களுக்கு தருவதாக கூறியது. ஆனால் இந்த் தீவைச் சேர்ந்தவர்கள் திமிங்கில வேட்டை பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் பராம்பரிய விசயம். எனவே திமிங்கில வேட்டையை நிறுத்த முடியாது என்று கூறி மறுத்து விட்டனர். இந்த வருடம் மட்டும் பத்தாவது முறை திமிங்கில வேட்டை நடத்தியுள்ளனர். இது வரை 536 திமிங்கிலங்களை கொன்றுள்ளனர்.

இந்த திமிங்கில வேட்டையை உள்ளுர் மக்களும், சுற்றுலா பயணிகளும் கூடி கொடூரமாக திமிங்கிலத்தை வேட்டையாடுவதை பார்த்து மகிழ்கின்றனர் என்று ஒருவர் விமர்ச்சித்துள்ளார்.

Trending Now: