‘ஆபரேஷன் அரபைமா!’

08-08-2019 07:17 PM

‘துரு­வங்­கள் 16’ படத்­தின் மிக பிரம்­மாண்­ட­மான வெற்­றிக்­குப் பிறகு ரகு­மான் முற்­றி­லும் மாறு­பட்ட கதா­பாத்­தி­ரத்­தில் நடித்து வரும் திரைப்­ப­டம், ‘ஆப­ரே­ஷன் அர­பைமா.’ ப்ராஷ் இப்­ப­டத்தை இயக்­கு­கி­றார். இவர் இந்­திய ராணு­வத்­தில் அட்­வென்ச்சர் பைலட்­டாக பணிபுரிந்­த­வர்.

இப்­ப­டத்­தில் ரகு­மான், ‘நாடோ­டி­கள்’ அபி­நயா, டினி டாம், கவுரி லட்­சுமி ஷிஹாத், அர­விந்த் கலா­தர், சஜி சுரேந்­தி­ரன், நேகா சக்­சேனா, சாம்­சன் உட்­பட பலர் நடித்­துள்­ளார்­கள். ராகேஷ் பிரம்­மா­னந்­தம் இசை­யில் பாடல்­களை முரு­கன் மந்­தி­ரம் எழு­தி­யுள்­ளார். டைம் அண்ட் டைடு பிரேம்ஸ் நிறு­வ­னத்­தின் தயா­ரிப்­பாக உரு­வாகி வரும் இப்­ப­டத்­தைப் பற்றி இயக்­கு­நர் ப்ராஷ் கூறு­கை­யில், ‘‘நேர்­மை­யும், துணிச்­ச­லும் கொண்ட ஒரு கடற்­படை அதி­கா­ரி­யின்  சஸ்­பென்ஸ் த்ரில்­லர் படம் இது. சில உண்­மைச் சம்­ப­வங்­க­ளின் அடிப்­ப­டை­யில் திரைக்­க­தையை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றேன். தமிழ், தெலுங்கு இரு­மொ­ழி­க­ளில் மிகுந்த பொருட்­செ­ல­வில் நவீன தொழில் நுட்­பங்­க­ளு­டன் வேக­மாக உரு­வாகி வரு­கி­றது’’ என்­றார்.Trending Now: