ஆன்மிக கோயில்கள்: ஒரே கோயிலில் தட்சிணாமூர்த்தி லட்சுமி ஹயக்ரீவர்!

08-08-2019 07:10 PM

தல வர­லாறு:

திருப்­புல்­லாணி கிரா­மத்­துக்கு அரு­கில், சேதுக் கட­லோ­ரத்­தில் சுமார் 450 வரு­டங்­க­ளுக்கு முன்பு, பித்­ருக்­க­ளுக்கு ஏரா­ள­மா­னோர் திதி கொடுத்து கொண்­டி­ருந்த வேளை­யில்... அங்கே கரை ஒதுங்­கி­யி­ருந்த பெரு­மா­ளின் விக்­கி­ர­கத்­தைக் கண்டு வியந்து மகிழ்ந்­த­னர்.

அந்த விக்­கி­ர­கத்தை மாட்­டு­வண்­டி­யில் ஏற்­றிக்­கொண்டு காரைக்­கு­டிக்­குச் சென்­ற­னர். வழி­யில் நா­க­நாத சுவாமி கோயில் கட்­டும் பணி­கள் நடை­பெற்­றுக் கொண்­டி­ருந்­தன. எனவே, பெரு­மாள் விக்­கி­ர­கத்தை அங்­கேயே பிர­திஷ்டை செய்­வது என எல்­லோ­ரும் ஏக­ம­ன­தாக முடிவு செய்­த­னர்.    

தல­ பெ­ருமை:    

இங்கு தனி சன்னிதி­யில் காட்சி தரும் லட்­சுமி ஹயக்­ரீ­வர் விசே­ஷ­மா­ன­வர். வியா­ழக்­கி­ழ­மை­க­ளில் இவ­ருக்கு ஏலக்­காய் மாலை சார்த்தி வணங்­கி­னால், படிப்­பில் மந்­த­மாக உள்ள குழந்­தை­கள்­கூட ஞாப­க­சக்தி அதி­க­ரித்து கெட்­டிக்­கா­ரர்­க­ளாக மாறு­வார்­கள். தேர்­வு­க­ளில் அதிக மதிப்­பெண் எடுப்­பார்­கள் என்­கின்­ற­னர் பக்­தர்­கள்.

மாதந்­தோ­றும் பவுர்­ண­மி­யில் சிறப்பு ஹோம­மும் அபி­ஷே­க­மும் நடை­பெ­று­கி­ன்றன. அதில் கலந்­து­கொண்டு லட்­சுமி ஹயக்­ரீ­வ­ரைத் தரி­சித்­துப் பிரார்த்­தித்­தால், சத்ரு பயம் நீங்­கும், அறி­வாற்­றல் பெரு­கும்; தொழில் விருத்­தி­யா­கும். பதவி உயர்வு கிடைக்­கும் என்­பது நம்­பிக்கை.

தேர்­வுக்கு முன்­ன­தாக இங்கு மாண­வர்­க­ளுக்­கா­கச் சிறப்பு வழி­பாடு நடை­பெ­று­கி­றது. அப்­போது காரைக்­குடி மற்­றும் சுற்­று­வட்­டார ஊர்­க­ளில் இருந்து ஏரா­ள­மான மாண­வர்­கள் வந்து சுவாமி தரி­ச­னம் செய்­வது வழக்­கம். அதே­போல், குழந்­தை­களை முதன்­மு­த­லா­கப் பள்­ளி­யில் சேர்ப்­ப­தற்கு முன்பு, இங்கு ‘அட்­ச­ராப்­பி­யா­சம்’ எனப்­ப­டும் நெல்­லில் குழந்­தை­களை எழு­தச் செய்­யும் வைப­வம் சிறப்­புற நடை­பெ­றும்.

புதன்­கி­ழ­மை­க­ளில் பெரு­மா­ளுக்கு அவல் படைத்து வழி­பட்­டால் பிள்ளை வரம் பெற­லாம். மாசி மக கரு­ட­சே­வை­யைத் தரி­சித்­தால், 12 வரு­டங்­கள் பெரு­மாளை வழி­பட்ட பலன் கிடைக்­கும். செண்­ப­க­வல்­லித் தாயா­ருக்கு வில்வ மாலை மற்­றும் எலு­மிச்சை மாலை அணி­வித்து நெய் தீ­ப­மேற்றி வழி­பட்­டால், கடன் தொல்லை ஒழி­யும் என்­பது ஐதீ­கம்!

தல சிறப்பு: 

ஒரே கோயிலில் கல்வி தெய்வங்களான தட்சிணாமூர்த்தியும் ஹயக்ரீவரும் அருள் பாலிப்பது சிறப்பு.

பொது தக­வல்: 

பெரி­ய­நா­யகி சமேத நாக­நாத சுவா­மி­யும் தவிர தட்­சி­ணா­மூர்த்தி பிர­மாண்ட திரு­மே­னி­ய­ரா­கக் காட்சி தரு­கி­றார். சக்­க­ரத்­தாழ்­வார், யோக நர­சிம்­மர், தன்­வந்­திரி பக­வான் ஆகி­யோ­ரும் இங்கே காட்­சி ­த­ரு­கின்­ற­னர்.      

பிரார்த்­தனை 

படிப்­பில் சிறது விளங்­க­வும், தேர்­வில் வெற்றி பெற­வும், குழந்தை வரம் கிடைக்­க­வும் இங்கு பிரார்த்­தனை செய்­கி­றார்­கள்.    

நேர்த்­திக்­க­டன்: 

ஏலக்­காய் மாலை சார்த்­தி­யும், விளக்­கேற்­றி­யும் தங்­கள் நேர்த்­திக்­க­டனை செலுத்­து­கின்­ற­னர்.

திரு­விழா: 

பவுர்­ணமி, பிரதி வியா­ழக்­கி­ழமை.      

திறக்­கும் நேரம்:   

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.    

முக­வரி:  கிருஷ்­ண­மூர்த்தி பெரு­மாள் திருக்­கோ­யில், நாக­நா­த­பு­ரம், சிவ­கங்கை.Trending Now: