தத்து குழந்தைகள்... நடிகை நெகிழ்ச்சி

08-08-2019 07:02 PM

ஐத­ரா­பாத்­தில் இந்­திய வர்த்­தக தொழில் கூட்­ட­மைப்பு சார்­பில் நடந்த நிகழ்ச்­சி­யில் பாலி­வுட் நடி­கை­யும், முன்­னாள் பிர­பஞ்ச அழ­கி­யு­மான சுஷ்­மிதா சென் பங்­கேற்­றார். பின்­னர் அவர் அளித்த பேட்டி:

‘‘ஐத­ரா­பாத், நான் பிறந்த ஊர். என் தாய், இங்­கு­தான் வசித்து வரு­கி­றார். இங்­குள்ள சினிமா சிட்­டி­யில், ‘சுஷ்’ என்ற பெய­ரில் எனக்கு ஒரு வீடு இருக்­கி­றது. இத­னால், இங்கு வரு­வ­தில் எனக்கு தனி குஷி.

நான் ‘மிஸ் யுனி­வர்ஸ்’ பட்­டம் பெற்ற பிறகு, உல­கம் முழு­வ­தும் சுற்­றும் வாய்ப்பு கிடைத்­தது. அப்­போ­து­தான் உல­கின் நிஜ முகத்தை என்­னால் கண்­டு­கொள்ள முடிந்­தது. குறிப்­பாக, அனாதை குழந்­தை­கள் பற்­றிய விவ­ரங்­க­ளை­யும், அவர்­க­ளு­டைய அவல நிலை­க­ளை­யும் அறிந்து கொள்­ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்­தது. அதன்­பின், அனாதை குழந்­தை­கள் மீது எனக்கு ஒரு­வி­த­மான ஈர்ப்பு ஏற்­பட்­டது. அவர்­க­ளு­டன் அதி­க ­நே­ரத்தை செல­விட ஆரம்­பித்­தேன்.

என்­னு­டைய 19வது வய­தில் ஒரு குழந்­தையை தத்­தெ­டுக்க விரும்­பி­னேன். விருப்­பத்தை என் தந்­தை­யி­டம் தெரி­வித்­தேன். ஒரு குழந்­தையை பரா­ம­ரிக்­கும் பக்­கு­வம் எனக்கு இருக்­குமா என்ற சந்­தே­கத்­தால் அவர் தயக்­கம் காட்­டி­னார். இத­னால், என்­னு­டைய 24வது வய­தில்­தான், அந்த விருப்­பம் நிறை­வே­றி­யது. இரு பெண் குழந்­தை­க­ளைத் தத்­தெ­டுத்­தேன். தத்­தெ­டுப்­பது என்­பது, வாழ்க்­கையை மாற்­றும் முடிவு. அந்த குழந்­தை­க­ளுக்­குத் தாயாக மாறு­வது என்­பது, இத­யத்­தில் நடக்­கும் பிறப்பு.

இரு குழந்­தை­க­ளைத் தத்­தெ­டுத்­த­தால், இரு முறை தாய்மை அடைந்­த­து­போல் உணர்­கி­றேன். எனக்கு இப்­போது 43 வயது. மூத்த மகள் ரினீக்கு 20 வயது, இளைய மகள் அலி­ஷா­வுக்கு 10 வயது. ரினீக்கு சினி­மா­வில் நடிக்க ஆசை. படிப்பு முடித்­த­ பி­றகு சினி­மா­வில் நுழை­ய­லாம் என்று அறி­வு­றுத்­தி­யி­ருக்­கி­றேன். அலி­ஷா­வுக்கு நடிப்­ப­தில் ஆசை இல்லை. வளர்ந்­த ­பி­றகு அவ­ளது விருப்­பம் எது­வாக இருந்­தா­லும், அதில் நான் குறுக்­கி­டப் போவ­தில்லை.’’Trending Now: