தபால் கொண்டு வரும் தானோட்­டி­கள்!

08-08-2019 07:00 PM

அமெ­ரிக்க அர­சின் அஞ்­சல் துறை இன்­னும் இயங்­கிக் கொண்டுதான் இருக்­கி­றது. அது­மட்­டு­மல்ல, தபால்­களை எடுத்­துச் செல்ல நவீன தொழில்­நுட்­பங்­க­ளை­யும் பயன்­ப­டுத்த ஆரம்­பித்து வரு­கி­றது. சமீ­பத்­தில், தானோட்டி லாரி­கள் மூலம் தபால்­களை எடுத்­துச் செல்ல, இரண்டு வார சோதனை ஓட்­டம் நடத்­த­வும் திட்­ட­மிட்­டுள்­ளது.

அமெ­ரிக்­கா­வின் ஒரு மாகா­ணத்­தி­லி­ருந்து, 1,600 கி.மீ., தொலை­வில் உள்ள இன்­னொரு மாகா­ணத்­திற்கு தபால்­களை, ஒரு லாரி, ஓட்­டு­ன­ரில்­லா­மல் எடுத்­துச் செல்ல இருக்­கி­றது. இதற்­கான தானோட்டி லாரியை உரு­வாக்கி வரும், 'டுசிம்­பிள்' இந்த சோத­னை­யில் நிச்­ச­யம் வெற்றி கிடைக்­கும் என நம்­பு­கி­றது.தானோட்­டி­கள் மூலம் தபால் வினி­யோ­கத்­தால், அஞ்­சல் துறைக்கு பல வகை­க­ளில் லாபம் என்­ப­தோடு, சுற்­றுச்­சூ­ழல் பாதிப்­பும் குறை­யும்.

தனி­யார் துாதஞ்­சல்­கள் ஏற்­க­னவே இந்த தானோட்­டி­க­ளைப் பயன்­ப­டுத்த போட்டி போட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்­நி­லை­யில், அமெ­ரிக்க அஞ்­சல் துறை­யும் புதுமை படைக்­கத்

துடிப்­பது, விஞ்­ஞான உல­கில்

பாராட்­டுக்­களை பெற்­றுள்­ளது.Trending Now: