மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் எழுதும் வாலிப கவிஞர் வாலி –3

08-08-2019 06:58 PM

திரைப்­ப­டங்­க­ளில் பல நல்ல பாடல்­களை எழு­திய வாலி­யால்­தான் திமு­கவே ஆட்­சிக்கு வந்­தது என்று ஆட்­சிக்கு வந்­த­தும் பேர­றி­ஞர் அண்­ணாவே வாலி­யி­டம் சொல்­லி­யி­ருக்­கி­றார்.

 வாலி சினி­மா­விற்கு பாட்­டெ­ழு­தத் துவங்­கி­ய­தும், எம்.ஜி.ஆருக்­கும் அவ­ருக்­கு­மி­டையே நெருக்­கம் ஏற்­பட்­டது. எம்.ஜி.ஆர்., மக்­க­ளால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட ஒரு பெரிய நடி­கர். மேலும், தன் படங்­க­ளின் மூல­மாக பல சமூக கருத்­துக்­களை சொல்ல ஆசைப்­பட்­ட­வர் எம்.ஜி.ஆர்.

வாலி அதற்கு துணை நின்­றார். எம். ஜி. ஆரின் சமூக கோட்­பா­டு­க­ளுக்கு திரைப்­பா­டல் மூல­மாக முத­லில் துணை நின்­ற­வர் பட்­டுக்­கோட்டை கல்­யா­ண­சுந்­த­ரம். அவர் ஆரம்ப காலங்­க­ளில் எம்.ஜி.ஆர்., படங்­க­ளில் தத்­துவ பாடல்­களை எழு­தி­னார்.

 ‘சின்­னப் பயலே சின்­னப் பயலே

 சேதி கேளடா

 நான் சொல்­லப் போகும் – வார்த்­தையை

 நல்லா எண்­ணிப் பாரடா

 வேப்­ப­மர உச்­சி­யில் நின்னு

 பேய் ஒண்ணு ஆடு­துன்னு

 விளை­யா­டப் போகும்­போது

சொல்லி வைப்­பாங்க

 வேலை­யற்ற வீணர்­க­ளின்

 தேவை­யற்ற வார்த்­தை­களை

 வேடிக்­கை­யா­கக்  கூட  நீ நம்­பி­வி­டாதே’

 என்ற பாட­லும்

 ‘தூங்­காதே தம்பி தூங்­காதே

 சோம்­பேறி என்ற பெயர் வாங்­காதே.

 என்ற பாடலை ‘நாடோடி மன்­னன்’ படத்­தி­லும் எழு­தி­ய­வர் பட்­டுக்­கோட்டை.  அதற்­குப் பிறகு கண்­ண­தா­சன் எம்.ஜி.ஆரின் தர்ம சிந்­தனை குறித்து ‘தர்­மம் தலை­காக்­கும்’ படத்­தில்  

 ‘தர்­மம் தலை­காக்­கும் – தக்க

 சம­யத்­தில் உயிர்­காக்­கும் – கூட

 இருந்தே குழி பறித்­தா­லும் – கொடுத்­தது

 காத்து நிற்­கும்’

 போன்ற பாடல்­களை எழு­தி­னார்.

 பிறகு வாலி எம்.ஜி.ஆரோடு இணைந்­தார். அப்­போது எம்.ஜி.ஆர்., திமு­க­வில் இருந்த நேரம். கட்­சி­யும் மூன்­றெ­ழுத்து. எம்.ஜி. ஆரும் மூன்­றெ­ழுத்து.  அத­னால்.

 ‘மூன்­றெ­ழுத்­தில் என் மூச்­சி­ருக்­கும்

 அது முடிந்த பின்­னா­லும் பேச்­சி­ருக்­கும்’ என்று ‘தெய்­வத்­தாய்’ படத்­தில் ‘எழு­தி­னார் வாலி’

 நான் ஆணை­யிட்­டால்  அது நடந்­து­விட்­டால்

 இங்கு ஏழை­கள் வேதனை பட­மாட்­டார்

 உயிர் உள்­ள­வரை  ஒரு துன்­ப­மில்லை

 அவர் கண்­ணீர் கட­லிலே விழ­மாட்­டார்.

இந்த பாடலை ‘எங்க வீட்­டுப் பிள்ளை’ படத்­தின் வெற்­றிக்கே வழி­வ­குத்­தது. அது எம்.ஜி.ஆரை மக்­கள் மன­தில் ஆழ­மாக கொண்டு போய் உட்­கார வைத்­தது.

 நல்ல நல்ல பிள்­ளை­களை நம்பி – இந்த

 நாடே இருக்­குது தம்பி

 சின்­னஞ்­சிறு கைகளை நம்பி – ஒரு

 சரித்­தி­ரம் இருக்­குது தம்பி’

 இந்த பாடலை ‘பெற்­றால் தான் பிள்­ளையா’ படத்­திற்­காக எழு­தி­னார் வாலி. இந்­தப் பாட­லின் சர­ணத்­தில்

 ‘அறி­வுக்கு இணங்கு  வள்­ளு­வ­ரைப் போல்

 அன்­புக்கு வணங்கு  வள்­ள­லா­ரைப் போல்

 கவி­தை­கள் வழங்கு  பார­தி­யைப் போல்

 மேடை­யில் முழங்கு  அறி­ஞர் அண்ணா போல்

 என்று எழு­தி­யி­ருந்­தார். அப்­போது காங்­கி­ரஸ் ஆட்சி. சென்­சார் அறி­ஞர் அண்ணா ‘என்­கிற வார்த்­தை’யை அனு­ம­திக்க மறுத்­து­விட்­டார்­கள். அத­னால் படத்­தில் இந்த வரி­கள், மேடை­யில் முழங்கு திரு விக போல் என்­று­தான் வரும். அதே போல் ‘அன்பே வா’ படத்­தில்

 புதிய வானம், ‘புதிய பூமி

 எங்­கும் பனி­மழை பொழி­கி­றது.

 நான் வரு­கை­யிலே என்னை வர­வேற்க

 வண்­ணப் பூ மழை பொழி­கி­றது

 உத­ய­சூ­ரி­ய­னின் பார்­வை­யிலே

 உல­கம் விழித்­துக் கொண்ட வேளை­யிலே

 என்று எழு­தி­யி­ருந்­தார்.  ‘அன்பே வா’ படம் 1965ல் வெளி­யா­னது. ‘உத­ய­சூ­ரி­யன்’ என்ற வார்த்­தையை சென்­சார் அனு­ம­திக்­க­வில்லை. அத­னால் படத்­தில் இந்த வரி­கள் ‘புதி­ய­சூ­ரி­ய­னின் பார்­வை­யிலே’ என்­று­தான் வந்­தது.

 அதே போல் `பட­கோட்டி’ படத்­தில் வாலி எழு­திய பாடல்­கள் எல்­லாமே எம்.ஜி.ஆரை மீனவ மக்­கள் மன­தில் கொண்டு போய் நிறுத்­தி­யது. மீன­வர்­க­ளுக்­காக இப்­ப­டி­யொரு பாடல் அமைந்­த­தில்லை என்று சொல்­கிற மாதிரி அரு­மை­யாக வாலி எழு­தி­யி­ருந்­தார்.

‘தரை­மேல் பிறக்க வைத்­தான் – எங்­களை

 தண்­ணீ­ரில் பிழைக்க வைத்­தான்

 கரை­மேல் இருக்க வைத்­தான் – பெண்­களை

கண்­ணீ­ரில் குளிக்க வைத்­தான்’

 இந்த பாட­லில் சர­ணத்­தில்

 ‘ஒரு­நாள் போவார் ஒரு நாள் வரு­வார்

 ஒவ்­வொரு நாளும் துய­ரம்

 ஒரு சாண் வயிறை வளர்ப்­ப­வர் உயிரை

 ஊரார் நினைப்­பது சுல­பம்’

 இந்த வரி­க­ளெல்­லாம் ஒவ்­வொரு மீனவ குடும்­பங்­க­ளி­லும் ‘தேசிய கீதம்’ ஆனது. அவர்­க­ளுக்கு இந்­தப் பாடலை திரை­யில் பாடிய எம்.ஜி.ஆர் ஒரு ‘மீனவ மகா­னா’­கவே தெரிந்­தார். அதே போல் அதே ‘பட­கோட்டி’ படத்­தில்

 ‘கொடுத்­த­தெல்­லாம் கொடுத்­தான் – அவன்

 யாருக்­காக கொடுத்­தான்

 ஒருத்­த­ருக்கா கொடுத்­தான் – இல்லை

 ஊருக்­காக கொடுத்­தான்

 மண்­கு­டிசை வாச­லென்­றால்

 தென்­றல் வர வெறுத்­தி­டுமா

 மாலை நிலா ஏழை­யென்­றால்

 வெளிச்­சம் தர மறுத்­தி­டுமா

 உனக்­காக ஒன்று எனக்­காக ஒன்று

 ஒரு­போ­தும் தெய்­வம் கொடுத்­த­தில்லை’

 என்று எழு­திய இந்த வரி­க­ளி­னால் பல பொது­வு­டைமை சிந்­த­னை­யா­ளர்­கள் கூட எம்.ஜி.ஆரை நேசிக்­கத் தொடங்­கி­னார்­கள். வாலி, எம்.ஜி.ஆருக்­காக எழு­திய வரி­கள், எல்­லாமே ` கவி­ஞன் வாய்க்கு பொய்க்­காது’ என்­ப­தைப் போல பலித்­தது.

அவர் எழு­திய ஒரு பாடல் மட்­டும் எம்.ஜி.ஆருக்கு பலிக்­க­வில்லை.

 ‘பணம் படைத்­த­வன்’ படத்­தில்

‘எனக்­கொரு மகன் பிறப்­பான் – அவன்

 என்­னைப் போலவே இருப்­பான்

 தனக்­கொரு பாதையை வகுக்­கா­மல் என்

 தலை­வன் வழி­யிலே நடப்­பான்’

 என்ற இந்த வரி­கள் மட்­டும் எம்.ஜி.ஆருக்கு பலிக்­க­வில்லை.

 ஒரு முறை எம்.ஜி.ஆர்., முதல்­வர் ஆன பிறகு அவ­ரு­டைய ஆற்­காடு சாலை இல்­லத்­தில் எம்.ஜி.ஆரும் – வாலி­யும் பேசிக்­கொண்­டி­ருந்­தார்­கள். அப்­போது அங்கே வந்த மதுரை முத்து வாலி­யைப் பார்த்து ` நீங்­கள் இவ­ருக்கு எழு­தின எல்­லாப் பாடல்­க­ளுமே பலித்­தது. ஆனால் ‘எனக்­கொரு மகன் பிறப்­பான்’ பாடல் மட்­டும் பலிக்­கலை’ என்­றார். எம்.ஜி.ஆர்., – வாலி இரு­வ­ருக்­குமே தர்­ம­சங்­க­ட­மா­கிப் போனது.

`அவர் சத்­து­ணவு போட­ற­த­னால, தமிழ்­நாட்டு குழந்­தை­கள் எல்­லாமே அவர் குழந்­தை­கள்­தானே’ என்று சொல்லி சமா­ளித்­தார் வாலி.

 அதே போல் எம்.ஜி.ஆர்., திமு­க­வி­லி­ருந்து வெளியே வந்­தி­ருந்த நேரம். அப்­போது அவர் நடித்த  ‘நேற்று இன்று நாளை’ படத்­தில் ஒரு பாட­லில் அப்­போது ஆட்­சி­யில் இருந்த திமு­கவை சாடு­கிற மாதிரி ஒரு பாடல் வேண்­டும் என்று எம்.ஜி.ஆர்., வாலியை கேட்­டுக்­கொண்­டார். அது­வ­ரை­யில் வாலி தானா­க­வே­தான் எம்.ஜி.ஆரின் இமேஜை புரிந்து கொண்டு எழு­தி­னார்.

முதல் முறை­யாக எம்.ஜி.ஆர் கேட்­டுக் கொண்­ட­தால் அந்த படத்­தில்

‘தம்பி நான் படித்­தேன்

 காஞ்­சி­யிலே நேற்று – அதை

 நான் உனக்கு சொல்­லட்­டுமா இன்று’ என்று எழு­தி­னார். இந்த பாட­லின் சர­ணத்­தில்-–

 ‘தெரு தெரு­வாய் கூட்­டு­வது

 பொது­ந­லத் தொண்டு

 ஊரார் தெரிந்து கொள்ள

 படம் பிடித்­தால்  சுய­ந­லம் உண்டு’

என்று திமுக தலை­வர்­களை கிண்­டல் செய்து எழு­தி­னார்.

 (தொட­ரும்)Trending Now: