கடனாளி ஆவது பூர்வஜென்ம பாவம்! – குட்டிக்கண்ணன்

07-08-2019 06:25 PM

"இந்த விஷ­யத்­தில், அதா­வது கடன் பிரச்­னைக்கு ஏழை மற்­றும் பணக்­கா­ரன் என்ற ஏற்­றத்­தாழ்­வெல்­லாம் எது­வும் கிடை­யவே கிடை­யாது. ஒரு­முறை கடன்­பட்­டால், தோன்று தொட்­டுத் தொட­ரும் பாரம்­பர்­ய­மாய் ஒட்­டிக்­கொண்­டு­வி­டும். அத­னால்­தான் எல்­லோ­ருமே கடன் இல்­லாத வாழ்க்­கைக்கு ஆசைப்­ப­டு­கி­றோம். ஆனால், அப்­ப­டி­யான வாழ்க்கை எல்­லோ­ருக்­கும் வாய்த்­து­வி­டாது என்­ப­து­தான் யதார்த்­தம். கட­னா­ளி­யாக எப்­போது உரு­வா­கி­றார் என்­றால்,ஒரு­வர், தனது சக்­திக்கு மீறி செலவு செய்­யும் போதும் அடுத்­த­வ­ரி­டம் கட­னாக பண­மும் பொரு­ளும் வாங்­கும்­போ­தும் கட­னாளி ஆகி­றார். இது, அவ­ராக உரு­வாக்­கிக்­கொண்ட கடன். இன்­னொரு கட­னும் உண்டு. அது, பூர்­வ­ஜன்­மக் கடன்; சம்­பந்­தப்­பட்­ட­வ­ரின் மறுெ­ஜன்­மம்­வரை தொட­ரக்­கூ­டி­யது. இது எப்­படி சாத்­தி­யம். கடன் கொடுத்­த­வன் மறு­பி­ற­வி­யி­லும் வந்து அதை கேட்­பானா என்று நினைக்­கி­றீர்­களா? என்­பது தெரி­கி­றது என்ற ஜோதி­டர் ஞான­ரதம்

"இதில் உண்மை இருக்­கி­றது. பூர்­வ­ ெஜன்ம கடன் என்­பது, நாம் நிறை­வேற்­றா­மல் விட்­டு­விட்ட கட­மை­க­ளின் பாக்கி. உதா­ர­ண­மாக ஒன்­றைச் சொல்­கி­றேன்.எல்லா பெற்­றோ­ருமே தங்­கள் பிள்­ளை­க­ளின்­மீது அள­வு­க­டந்த அன்­பும் அக்­க­றை­யும் கொண்­டி­ருப்­பார்­கள். பிள்­ளை­க­ளின் கண்­ணில் தூசி விழுந்­தா­லும் துடி­து­டித்­துப் போவார்­கள். இப்­ப­டிப்­பட்ட பெற்­றோரை, அவர்­க­ளது முதிய பரு­வத்­தில் போஷிக்­கா­மல்,  கண்­டு­கொள்­ளா­மல் புறக்­க­ணித்­தால், அது ெஜன்ம  கட­னா­கி­வி­டும். இந்த கடனை மறு­பி­ற­வி­யி­லா­வது அடைத்­தா­க­வேண்­டும்.

கடன் என்­பது. ஒரு­வ­ரி­டம் பணம் மற்­றும் பொருள் வாங்கி, அவற்­றைத் திருப்­பித் தரா­மல் விடு­வ­து­தான் கடன் என்று கிடை­யாது; அன்பு, பாசம், நம்­பிக்கை  இவற்­றில் எதை நாம் பிற­ரி­ட­மி­ருந்து பெற்­றா­லும் அதை அவர்­க­ளுக்­குத் தரா­த­பட்­சத்­தில், அது­வும் நம் கடன் பட்­டி­ய­லில் சேர்ந்­து­வி­டும். இன்­னும் சிலர், தங்­க­ளின் நெருங்­கிய நண்­ப­ருக்கோ அல்­லது உற­வி­ன­ருக்கோ ஏதா­வது ஒரு வகை­யில் நம்­பிக்­கைத் துரோ­கம் செய்­தி­ருப்­பார்­கள். இது, மிகப்­பெ­ரிய கடன். வினைப்­ப­யன் எது­வாக இருந்­தா­லும், அதை நாம் அனு­ப­வித்­து­தான் ஆக­வேண்­டும்.

இதை தவிர, கடன் ஒரு­வ­ரது வாழ்க்­கை­யில் வரு­வ­தும் போவ­து­மாக இருக்­கும் என்­றா­லும், சிலர் ஆயுள் முழுக்­கக் கட­னா­ளி­யா­கவே இருப்­பார்­கள். அவர்­க­ளின் ஜாத­கம் நஷ்ட ஜாத­க­மாக இருப்­பதே அதற்­குக் கார­ணம். அவர்­கள் எந்த வியா­பா­ரம் செய்­தா­லும் கூடிய விரை­வில் இழுத்து மூடி­வி­டு­வார்­கள். இறு­தி­வரை விலங்­கா­மலே போவார்­கள்.

இது தொழில்­தான் என்­றில்லை, வீடு அல்­லது மனை வாங்­கப்­போ­கும் இடத்­தில், தாய்ப் பத்­தி­ரத்­தைச் சரி­யா­கக் கவ­னிக்­கா­மல் வில்­லங்­கத்­தில் சிக்கி பெரும் பண இழப்­பைச் சந்­திப்­பார்­கள். 10 ரூபாய் மதிப்­புள்ள ஒரு பொருளை 15 ரூபாய் கொடுத்து வாங்கி வரு­வார்­கள். அடுத்­த­வர்­கள் செய்­யும் மூளைச் சல­வை­யில் மயங்கி, பண இழப்­பைச் சந்­திப்­ப­வர்­க­ளில் இவர்­க­ளுக்கே முத­லி­டம் என­லாம்.

இவ்­வாறு இரு­ப­வர்­கள் எங்கே தொட்­டா­லும் பண இழப்பை ஏற்­ப­டுத்­து­கிற நஷ்ட ஜாதக அமைப்­பைக் கண்­ட­றிந்து, உரிய  பரி­கா­ரங்­கள் செய்­து­வந்­தால், தொடர் பண இழப்­பு­க­ளி­லி­ருந்து தப்­பித்­துக் கொள்­ள­லாம். ஜோதி­டத்­தில் வழி இருக்­கி­றது.

அதா­வது, ஒரு­வ­ரது ஜாத­கத்­தில் 2-ஆம் வீட்­டுக்­கு­ரிய கிர­க­மான தன ஸ்தானா­தி­பதி மறைந்­தி­ருந்­தாலோ, 4-ஆம் வீட்டு சுகா­தி­பதி மற்­றும் பாக்­கி­யா­தி­பதி பல­வீ­ன­மா­கவோ, நீச கதி­யிலோ, வக்­ர­க­தி­யிலோ மறைந்­தி­ருந்­தாலோ, பாவ கிர­கத்­து­டன் சேர்ந்து பல­மி­ழந்து இருந்­தாலோ இப்­ப­டி­யான ஜாதக அமைப்­பு­டன் பிறந்­த­வ­ரின் ஜாத­கம் நஷ்ட ஜாத­கம் ஆகும். லக்­னா­தி­ப­தி­யும் ராசி­நா­த­னும் வலு­வி­ழந்து, ஆனால் 6-க்கு உரி­ய­வன் வலு­வாக இருந்­தால், சம்­பந்­தப்­பட்ட ஜாத­கர் கடைசி வரைக்­கும்

கட­னா­ளி­யா­கவே இருப்­பார்.

லக்­னா­தி­ப­தி­யு­டன் 6-க்கு உரி­ய­வன் இருந்­தா­லும், அந்த ஜாத­கர் கட­னா­ளி­யா­கத்­தான் இருப்­பார். ஒரு­வ­ரது ஜாத­கத்­தில் 6-ஆம் இடம் கடன், சத்ரு, நோய், விபத்து, வழக்கு ஆகிய ஸ்தானங்­க­ளைக் குறிக்­கும். ஒரு­வர் கட­னா­ளி­யாக இருப்­பாரா, இல்­லையா என்­ப­தைத் தெரிந்­து­கொள்ள, இதைத் தெளி­வாக அறி­ய­வேண்­டும்.

இனி, நஷ்ட ஜாத­கம் அமைப்­பைக் கொண்­ட­வர் எந்­தெந்த வகை­யில் கட­னாளி ஆவார் என்­ப­தைச் சற்று விரி­வா­கப் பார்ப்­போம்.

6-க்கு உரி­ய­வ­னு­டன் சூரி­யனோ, பிதுர் ஸ்தானா­தி­ப­தியோ சேர்ந்­தி­ருந்­தால், தந்­தை­யால் கடன் உண்­டா­கும். அதா­வது, ‘எங்க அப்­பா­வுக்கு திடீர்னு கிட்னி பெயி­லி­யர் ஆயி­டுச்சு. சொத்து முழு­வ­தை­யும் விற்று வைத்­தி­யம் பார்த்தே நாங்­கள் கட­னாளி ஆகி­விட்­டோம்’ என்று யாரோ எப்­போதோ நம்­மி­டம் சொல்­லிக் கேள்­விப் பட்­டி­ருப்­போம் இல்­லையா அப்­ப­டி­யொரு நிலை ஏற்­பட, இந்த ஜாதக

அமைப்­பு­தான் கார­ணம்.

6-க்கு உரி­ய­வ­னு­டன் சந்­தி­ரனோ, 4-ஆம் வீட்­டுக்கு உரி­ய­வனோ சேர்ந்­தி­ருந்­தால், தாய் மற்­றும் தாய்­வழி உற­வி­னர்­க­ளால் கடன் ஏற்­ப­டும்.

6-க்கு உரி­ய­வ­னு­டன் செவ்­வாயோ, சகோ­தர ஸ்தானா­தி­ப­தியோ சேர்ந்­தி­ருந்­தால், உடன்­பி­றந்­த­வர்­க­ளால் கடன் ஏற்­ப­டும்.  சுக்­கி­ரனோ 7-க்கு உரிய கிர­கமோ சேர்ந்­தி­ருந்­தால் வாழ்க்­கைத் துணை­வ­ரால் கடன் பிரச்னை உரு­வா­கும்.

குரு 5-க்கு உரி­ய­வ­னு­டன் சேர்ந்­தி­ருந்­தால், பிள்­ளை­க­ளால் கடன் உரு­வா­கும். 5 அல்­லது 12-ஆம் வீட்­டுக்கு உரிய கிர­கம் சேர்ந்­தி­ருந்­தால், முன் ெ­ஜன்­மக் கடன் ஏற்­ப­டும்.

6-க்கு உரி­ய­வ­னு­டன் சனி சேர்ந்­தி­ருந்­தால் வேற்று மொழி பேசும் அன்­பர்­க­ளா­லும் ராகு சேர்ந்­தி­ருந்­தால் சட்­டத்­துக்­குப் புறம்­பா­கச் செயல்­ப­டு­வோ­ரா­லும் கடன் ஏற்­ப­டும். கேது சேர்ந்­தி­ருந்­தால் அர­சி­யல் கட்­சி­கள், இயக்­கங்­கள், அமைப்­பு­க­ளின் நட­வ­டிக்­கை­க­ளால் கடன் ஏற்­ப­டும். இப்­படி, கடனே வாழ்க்­கை­யா­கிப்­போன நஷ்ட ஜாத­கக்­கா­ரர்­கள் சில பரி­கா­ரங்­கள் செய்­தால், கடன் பிரச்­னை­க­ளி­லி­ருந்து விடு­தலை பெற­லாம்.

கடன் பிரச்­னை­க­ளுக்­குத் தானம்­தான் மிகச் சிறந்த பரி­கா­ரம் ஆகும். இயன்ற பொருள்­க­ளைத் தானம் செய்­ய­லாம். ஆசி­ரி­ய­ராக இருப்­ப­வர்­கள் மற்­ற­வர்­க­ளுக்கு இல­வ­ச­மா­கவோ, மிகக் குறைந்த கட்­ட­ணத்­திலோ கல்­வி­யைப் போதிப்­பது சிறந்த பரி­கா­ர­மா­கும்.

கடன் பிரச்­னை­கள் தீர­வேண்­டு­மெ­னில் சம்­ஹார திருத்­த­லங்­க­ளுக்­குச் சென்று வழி­ப­ட­லாம். குறிப்­பாக, சஷ்டி தினங்­க­ளில் ‘திருச்­சீ­ர­லை­வாய்’ எனப் புரா­ணங்­கள் போற்­றும் திருச்­செந்­தூர் திருத்­த­லத்­துக்­குச் சென்று முரு­கப்­பெ­ரு­மானை வணங்கி வழி­ப­டு­வது நல்­லது. இயன்­றால், வரு­டத்­துக்கு ஒரு­முறை திருச்­செந்­தூர் சென்று, கந்­த­வேளை வழி­ப­டு­வதை வழக்­க­மாக்­கிக்­கொள்­ள­லாம்.

நம்­மால் முடி­யும்­போ­தெல்­லாம் பசு­வுக்கு உண­வாக பீட்­ரூட், முட்­டை­கோஸ், கேரட், தண்­ணீ­ரில் ஊற­வைத்த பச்­ச­ரிசி ஆகி­ய­வற்­றைத் தர­லாம். இந்த பரி­கா­ரங்­க­ளைச் செய்­தால், கடன் பிரச்­னை­க­ளி­லி­ருந்து விடு­ப­டு­வ­து­டன், நமது வறுமை நிலை நீங்கி பொரு­ளா­தா­ரம் செழிக்­கும்.

ஸ்ரீஸ்­துதி

ஸ்ரீவே­தாந்த தேசி­க­ரால் அரு­ளப்­பட்ட இந்­தத் துதிப் பாடலை தின­மும் படித்து வழி­பட்­டால், தரித்­தி­ரம் வில­கும்; சகல சம்­பத்­து­க­ளும் உண்­டா­கும்.

மானா­தீ­தப்­ர­தித விப­வாம் மங்­க­ளம்

மங்­க­ளா­னாம்

வக்ஷ: பீடீம் மது­வி­ஜ­யினோ பூஷ­யந்­தீம் ஸ்வகாந்த்யா

ப்ரத்­ய­க்ஷா­னுஸ்­ர­வி­க­ம­ஹிம ப்ரார்த்­தி­னீ­னாம் ப்ரஜா­னாம்

ஸ்ரேயோ­மூர்த்­திம் ஸ்ரீய­ம­ஸ­ர­ணஸ்த்­வாம் ஸரண்­யாம் ப்ரபத்யே

கருத்து: அள­வி­ட­மு­டி­யாத மகி­மையை உடை­ய­வ­ளும், மங்­க­லப்­பொ­ருள்­க­ளுக்­கெல்­லாம் மங்­க­லம் அளிப்­ப­வ­ளும், மது எனும் அசு­ரனை அழித்த நாரா­ய­ண­ரின் மார்பை தன் ஒளி­யால் அலங்­க­ரிப்­ப­வ­ளும், இம்மை மறு­மைக்கு நன்மை அளிப்­ப­வ­ளு­மா­கிய திரு­ம­க­ளைச்

சர­ண­டை­கி­றேன்.