அப்பாவுக்கு தப்பாத ‘மகள்’! – சுமதி

07-08-2019 06:24 PM

அப்பாவின் விவசாய அறிவையும் அனுபவத்தையும் பார்த்து வியந்து அவர் வழியிலேயே விவசாயத்துறையில் புதுமைகள் படைத்து வருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீலஷ்மி.

“புதுச்­சேரி யூனியன் பிரதேசம் கூடப்­பாக்­கம் எனது சொந்த ஊர். அப்பா வேங்­க­ட­பதி 4ம் வகுப்பு மட்­டுமே படித்­தி­ருந்­தா­லும் வேளாண் ஆராச்­சி­யில் என்னை வியக்க வைத்த மனி­தர். லட்­சக்­க­ணக்­கில் பணம் செலவு செய்து பரி­சோ­த­னைக் கூடம் அமைக்­கும் அளவு வசதி இல்­லா­த­தால் எங்­க­ளி­டம் உள்ள பணம் மட்­டும் பொருட்­களை பயன்­ப­டுத்தி 1999லேயே சோத­னைக் கூடம் அமைத்து புதிய ரக கண்­டு­பி­டிப்­பு­களை அப்பா செய்து வந்­தார். அந்த கால­கட்­டத்­தில் அப்பா பல்­வேறு பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு சென்று வேளாண் தொடர்­பான கூட்­டங்­க­ளில் பங்­கேற்று பேசு­வ­துண்டு. அப்­பா­விற்கு ஆங்­கி­லம் தெரி­யாது என்­ப­தால் என்­னை­யும் உடன் அழைத்­துச் செல்­வார். பேரா­சி­ரி­யர்­கள் ஆங்­கி­லத்­தில் பேசு­வதை எனக்கு புரிந்த வரை அப்­பா­விற்கு விளக்­கிக் கூறு­வேன். இதோடு பேரா­சி­ரி­யர்­க­ளின் உரையை பதிவு செய்து வந்து வீட்­டி­லும் போட்டு கேட்டு அர்த்­தம் புரிந்து கொள்­வோம். இப்­ப­டி­யாக அப்­பா­விற்கு உத­வி­யாக 7 வய­தில் தொடங்­கிய பய­ணம் விவ­சா­யத்­தின் மீதான ஈர்ப்­புக்கு கார­ண­மா­கி­விட்­ட­தா­கக் கூறு­கி­றார் ஸ்ரீலஷ்மி.

கன­காம்­பர பூக்­க­ளில் புதிய ரகங்­களை விளை­வித்து வேங்­க­ட­பதி ரெட்­டி­யார் அனை­வ­ரை­யும் அதி­ச­யப்­ப­டுத்தி இருக்­கி­றார். இத­னைத் தொடர்ந்து சவுக்கை, கரும்பு போன்ற பயிர்­க­ளில் குறை­வான காலத்­தில் அதி­கப்­ப­டி­யான விளைச்­சலை தரக்­கூ­டிய வகை­களை உரு­வாக்­கி­யுள்­ளார். கல்­வி­ய­றிவு இல்­லா­விட்­டா­லும் விடா­மு­யற்­சி­யோடு வேளாண் ஆராய்ச்­சி­யில் புது­மை­கள் பல படைத்­ததை பெரு­மைப்­ப­டுத்­தும் வித­மாக மத்­திய அரசு இவ­ருக்கு ’பத்­மஸ்ரீ’ விருது வழங்கி கவு­ர­வித்­துள்­ளது.

அப்­பா­விற்கு பிள்ளை தப்­பா­மல் பிறந்­தி­ருக்­கி­றது என்­பதை உண்­மை­யாக்­கும் வித­மாக கான்­வென்ட்­டில் படித்து, எம்­பிஏ பட்­டம் பெற்­றா­லும் விவ­சா­யம் தான் எனது மூச்சு என்று அப்பா வேங்­க­ட­பதி வழி­யில் அவரை பின்­பற்றி ஸ்ரீலஷ்­மி­யும் படித்து முடித்த பின்­னர் வேளாண் ஆராய்ச்­சி­யில் இறங்­கி­விட்­டார்.

“எம்­பிஏ படித்து முடித்த பின்­னர் பன்­னாட்டு நிறு­வ­னத்­தில் வேலைக்கு தேர்­வான போதும் பிற­ரி­டம் அடி­மை­யாக ஏன் வேலை செய்ய வேண்­டும் என்று நினைத்­தேன். விவ­சா­யம் தான் நிறை­வான வாழ்­கைக்­கான அர்த்­தம் தரும், இந்­தத் துறை­யில் இருந்­தால் மட்­டுமே என்னை தனித்­துக் காட்ட முடி­யும் என கரு­தி­னேன். அதோடு வேளாண் ஆராய்ச்­சி­யில் எனக்கு வேண்­டிய தக­வல்­களை வழங்க எனக்கு குரு­வாக அப்பா இருக்­கி­றார், அவ­ரின் அனு­ப­வமே ஆயி­ரம் விக்­கி­பீ­டி­யா­விற்கு சமம் என்­ப­தால் விவ­சா­யத்­தையே சொந்த தொழி­லாக செய்­ய­லாம் என்று முடிவு செய்து அதையே விரும்பி செய்­தேன்,” என்­கி­றார் ஸ்ரீலஷ்மி.

பொது­வாக கத்­தி­ரிக்­காய் செடி­யில் இருந்து 6 மாதம் மட்­டுமே விளைச்­சல் எடுக்க முடி­யும், அதி­லும் நோய் தாக்­கு­த­லால் மக­சூல் பாதிக்­கும். இதனை கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாக கிராப்­டிங் செய்து ஒரே செடி­யில் கத்­தி­ரிக்­காய், மிள­காய், தக்­காளி (இவை மூன்­றும் ஒரே குடும்­பத்தை சேர்ந்­தவை) என மூன்­றை­யும் ஒட்­டு­கட்டி விளைச்­சல் எடுக்க முடி­யும். இது செடி போன்று இருக்­கா­மல் மரம் போன்று இருப்­ப­தால் 5 ஆண்­டு­கள் விளைச்­சல் கொடுக்­கும், மேலும் சுண்­டைக்­காயை வேரில் போட்டு ஒட்­டு­கட்­டு­வ­தால் மரம் வளர அதிக நீர் தேவை­யில்லை, வறட்­சி­யை­யும் சமா­ளிக்­கும் என்று தனது ஆராய்ச்­சி­க­ளின் பலன்­களை மடை திறந்த வெள்­ள­மென கொட்­டு­கி­றார் ஸ்ரீலஷ்மி.   வேளாண் ஆராய்ச்­சி­யில் இது­வரை செய்­தது எல்­லாம் டிரெய்­லர் தான் இனி தான் மெயின் பிச்­சரே என்­கிற ரீதி­யில் உற்­சா­கம் குறை­யா­மல் பேசும் ஸ்ரீலஷ்மி, கொய்­யா­வில் 50 புதிய ரகங்­களை கண்­டு­பி­டிக்க திட்­ட­மிட்­டுள்­ளார். 2 அல்­லது 3மாதங்­க­ளில் ஆராய்ச்சி முடிந்து புதிய ரக கொய்யா தயா­ரா­கி­வி­டும் என்­கி­றார் இந்த பெண் விவ­சாயி.Trending Now: