கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 8–08–19

07-08-2019 06:21 PM

உயர்வதும் உயர்த்துவதும்

ரைஸ் (rise) என்ற வினைச் சொல் மேல் நோக்கி எழு­வதை, உதிப்­பதை, உயர்­வதை, வலிமை பெறு­வ­தைக் குறிக்­கி­றது.

பிரை­ஸெஸ் ரைஸ் வென் தேர் இஸ் அ ஷார்­டேஜ்.              Prices rise when there is a shortage.

வென் தேர் இஸ் அ ஷார்­டேஜ் (when there is a shortage) - தட்­டுப்­பாடு நில­வும் போது

பிரை­ஸெஸ் (prices)  -- விலை­கள்

ரைஸ் (rise) - உயர்­கின்­றன.

ரைஸ் (rise) என்ற உச்­ச­ரிப்­பு­டன் rice என்று எழு­தப்­ப­டும்  சொல்­லுக்கு, அரிசி என்று பொருள். Rice Uppuma is a dish that is easy to make. அரிசி உப்­புமா எளி­தில் செய்­யக்­கூ­டிய ஒரு உணவு வகை.

பிரை­ஸெஸ் ரைஸ்…( Prices rise) விலை­கள் உயர்­கின்­றன

த பிரைஸ் ரைஸெஸ் …( The price rise) விலை உயர்­கி­றது.

ரைஸ் அண்ட் ஷைன் (Rise and shine). (உயர) எழு. சுடர்­விடு. அருகே  அல்­லது முன்னே இருக்­கும் ஒரு­வர் அல்­லது பல­ரைப் பார்த்­துக் கூறப்­ப­டும் எழுச்சி சொற்­கள் இவை.

நீ அல்­லது நீங்­கள் என்ற சொல் இந்த வாக்­கி­யத்­தில் கூறப்­ப­டா­ம­லேயே புரிந்­து­கொள்­ளப்­ப­டு­கி­றது.

வீ ஷுட்d ஸ்டார்ட் bபிஃபோர் dத ஸன் ரைஸெஸ். We should start before the sun rises.

பிஃபோர் த ஸன் ரைஸெஸ்    (before the sun rises) - சூரி­யன் எழு­வ­தன் முன்

வீ ஷுட்d ஸ்டார்ட் - நாம் புறப்­பட வேண்­டும்.

த dடைவர்ஸ் ரேட் இஸ் ரைஸிங்… The divorce rate is rising. விவா­க­ரத்து விகி­தம் அதி­க­ரித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது.

த வாடர் லெவெல் இன் த வெல் இஸ் ரைஸிங்…(The water level in the well is rising) கிணற்­றில் நீரின் மட்­டம் உயர்ந்­து­கொண்­டி­ருக்­கி­றது.                  

த வாடர் லெவெல்  (The water level) -- நீரின் மட்­டம்

இன் த வெல் (in the well) -- கிணற்­றில்

இஸ் ரைஸிங் -- (உயர்ந்­து­கொண்­டி­ருக்­கி­றது,  ஏறிக்­கொண்­டி­ருக்­கி­றது).

ஸ்மோக் வாஸ் ரைஸிங் ஃபிரம் த பில்­டிங். Smoke was rising from the building. அந்­தக் கட்­ட­டத்­தி­லி­ருந்து புகை மேலே எழும்­பிக்­கொண்­டி­ருந்­தது.

Smoke புகை from the building -- அந்­தக் கட்­ட­டத்­தி­லி­ருந்து was rising  -- மேலே எழும்­பிக்­கொண்­டி­ருந்­தது (மேலே கிளம்­பிக்­கொண்­டி­ருந்­தது, எழுந்­து­கொண்­டி­ருந்­தது).

நிலா உதிக்­கி­றது..நிலா உதித்­துக்­கொண்­டி­ருக்­கி­ற­து…­­நிலா உதித்­த­து…த மூன் ரைஸெஸ்…த மூன் இஸ் ரைஸிங்…த மூன் ரோஸ்…The moon rises..The moon is rising..The moon rose…

நிலா உதிக்­கி­றது  -- த மூன் ரைஸெஸ் The moon rises நிலா உதித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது --  


த மூன் இஸ் ரைஸிங்               The moon is rising..  

நிலா உதித்­தது    -- த மூன் ரோஸ்…    The moon rose…

ரோஸ் (rose) என்­றால்? ரோஸ் (rose) என்­றால் ரோஜா அல்­லவா?

உண்­மை­தான்…­­ரோஸ் (rose) என்­றால் ரோஜா தான்…­­ஆ­னால் ரைஸ் (rise) என்ற வினைச்­சொல்­லின் கடந்­த­கால வடி­வ­மும் ரோஸ் (rose) தான்.

ஹீ  ரோஸ் ஃபிரம் ஹிஸ் சேர் டு வெல்­கம் மீ. He rose from his chair to welcome me. என்னை வர­வேற்க அவர் தன்­னு­டைய இருக்­கை­யி­லி­ருந்து எழுந்­தார்.

ஷீ ரோஸ் அண்ட் வென்ட் இண்டு த கார்­டென். She rose and went into the garden. அவள் எழுந்து தோட்­டத்­திற்­குள் சென்­றாள்.

ஆஃப்­டர் dத கர்­டன்ஸ் ரோஸ், த பிளே ஸ்டார்­டெட்d. After the curtains rose, the play started. திரை மேலே எழுந்­த­தும், நாட­கம் தொடங்­கி­யது.

ஹீ ரோஸ் டு dகோ..He rose to go. செல்­வ­தற்­காக அவன் எழுந்­தான்.

ஹர் டியர்ஸ் ரோஸ், ஹர் டெம்­பர் ரோஸ் Her tears, her temper என்று கண்­ணீர் எழுந்­த­தை­யும், கோபம் கூடி­ய­தை­யும் ரோஸ் (rose நிகழ்­கா­லத்­தில் ரைஸ் rise) என்ற சொல்­லால் குறிப்­பி­ட­லாம்.

த ஸன் ரோஸ் இன் த ஈஸ்­டர்ன் ஸ்கை. The sun rose in the eastern sky. சூரி­யன் கிழக்கு வானில் எழுந்­தது.

சூரி­ய­னை­யும் சந்­தி­ர­னை­யும் குறிப்­பி­டும் போது, அவற்­றுக்கு முன் 'dத' (the) பயன்­ப­டுத்­தப் படு­வ­தைக் கவ­னி­யுங்­கள்.

த ஸன் இஸ் அப். The sun is up. சூரி­யன் எழுந்­து­விட்­டது.

த ஸன் இஸ் ஷைனிங் bபிரைட்லி. The sun is shining brightly. சூரி­யன் பிர­கா­ச­மாக ஒளி­வீ­சிக்­கொண்­டி­ருக்­கி­றது.

த ஸன் வில் ரைஸ் அgகென். The sun will rise again. சூரி­யன் மீண்­டும் உதிக்­கும்.

அதே போல், லுக் ஆட் dத மூன். Look at the moon. நில­வைப் பார்.

ஐ வான்ட் டு gகோ டு dத மூன்.  I want to go to the moon. நான் நில­வுக்­குச் செல்ல விரும்­பு­கி­றேன்.

ஐ ஃபீல் ஹேப்பி ஜஸ்ட் லுக்­சிங் ஆட் த மூன். I feel happy just looking at the moon. நிலவை சும்மா பார்த்­துக்­கொண்­டி­ருப்­பதே எனக்கு மகிழ்ச்சி  அளிக்­கி­றது.

'ரைஸ்' என்ற சொல்­லுக்­கும் 'ரெயிஸ்' (raise) என்ற சொல்­லுக்­கும் இடையே சிலர் குழம்­பு­வது உண்டு.

இரண்டு சொற்­க­ளும் உயர நகர்­த­லைத்­தான் குறிக்­கின்­ற­ன…­­ஆ­னால் அவற்­றின் பயன்­பாட்­டில் வேறு­பாடு இருக்­கி­றது.

ரைஸ் (rise) வாக்­கி­யத்­தில் எப்­படி வரு­கி­றது என்று நாம் பார்த்­தா­யிற்று.

ரெயிஸ் (raise) எப்­படி வாக்­கி­யங்­க­ளில் வரு­கி­றது என்று பார்ப்­போம்.

ரெயிஸ் (raise) என்­பது உய­ரத்­து­வ­தைக் குறிக்­கி­றது,

ஐ ரெயிஸ்ட் மை ஹேன்ட். I raised my hand. நான் என் கையை உயர்த்­தி­னேன்.

மை பாஸ் ரெயிஸ்ட் மை ஸாலெரி. My boss raised my salary. என்­னு­டைய பாஸ் என் சம்­ப­ளத்தை உயர்த்­தி­னார்.

கமலா ஹேஸ் ரெயிஸ்ட்d ஹர் கிdட்ஸ் வெல். Kamala has raised her kids well. கமலா தன்­னு­டைய பிள்­ளை­களை நன்­றாக வளர்த்­தி­ருக்­கி­றாள். இங்கே ரெயிஸ்dட் வளர்ப்­பைக் குறிக்­கி­றது.

dதே ரெயிஸ்ட்d  dத நேஷ­னல் ஃபிளாக், They raised the national flag. அவர்­கள் தேசி­யக் கொடியை உயர்த்­தி­னார்­கள்.

வி.ஓ.சிதம்­ப­ரம் பிள்ளை ரெயிஸ்ட்d ஃபன்ட்ஸ் ஃபார் அ ஷிப்­பிங் கம்­பெனி. V.O.Chidambaram Pillai raised funds for a shipping company. ஒரு கப்­பல் நிறு­வ­னத்­திற்­காக வ.உ.சிதம்­ப­ரம் பிள்ளை நிதி திரட்­டி­னார். இந்த வாக்­கி­யத்­தில் ரெயிஸ் என்­பது திரட்­டு­வது என்ற பொரு­ளில்

வந்­தது.Trending Now: