மரம் மண்­ணுக்கு வரம்!

07-08-2019 06:06 PM

மதுரை மாவட்­டம், கோரிப்­பாளை யம், சாய்­ராம் மேல்­நி­லைப் பள்­ளி­யில், 7ம் வகுப்பு படித்­தேன்.

காலை­யில் நடக்­கும் பிரார்த்­தனை கூட்­டத்­தில், பள்ளி முதல்­வர் பேசு­வார். அப்­போது, 'மண்­ணு­யி­ருக்­கெல்­லாம் வரம், மரம் தான்; அனை­வ­ரும் வீட்­டில் ஒரு மரம் வளர்க்க வேண்­டும்...' என்று தவ­றா­மல் வலி­யு­றுத்­து­வார்.

அவ­ரின் பிறந்த நாள் நெருங்­கி­யது; ஒரு பரிசு கொடுக்க திட்­ட­மிட்டு யோசித்­தோம். ஒரு­வன், 'வீடு­க­ளில் மரங்­களை நட்டு, அதை புகைப்­ப­டம் எடுத்து, பரி­சாக வழங்­க­லாம்...' என்­றான்.

அதன்­ப­டியே, எங்­கள் வீட்­டின் அருகே மரங்­களை நட்டு, புகைப்­ப­டங்­கள் எடுத்து பரி­சாக கொடுத்­தோம். மிக­வும் மகிழ்ச்சி அடைந்­தார் பள்ளி முதல்­வர். அந்த மாண­வ­னுக்கு, அன்பு பரி­சும் கொடுத்­தார்.

அவர் போதித்த கருத்து, என் மன­தில் அழி­யா­மல் பதிந்­துள்­ளது.

–- லெ.விஷால், மதுரை.Trending Now: