மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் எழுதும் வாலிப கவிஞர் வாலி –2

07-08-2019 06:03 PM

வாலி இறப்­ப­தற்கு சில நாட்­க­ளுக்கு முன்­னால் போனில் என்­னி­டம் என்ன கேட்­டார்?

பிகாஸோ, பீதோ­வன், ஈபில் டவர் இந்த மூன்றை பத்­தி­யும் இப்ப சொல்­றியா  அல்­லது அரை மணி நேரம் கழித்து போன் பண்­ணட்­டுமா?

 `இப்­பவே சொல்­றேன்’ என்று  விளக்­கம் சொன்­னேன். அதில் நான் ஈபில் டவரை பற்றி  சொன்­ன­தைக் கேட்டு வியந்து போனார்.

`என்­னது? ஈபில் என்­பது ஒரு மனி­தர் பெயரா!’ என்று வியப்­போடு கேட்­டார்.

`ஆமாம்!  உலக நாடு­க­ளி­டையே சமா­தா­னம் ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக பிரான்­சில் ஒரு உலக தொழில் துறை கண்­காட்­சிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. அதன் நினை­வாக ஒரு ஸ்தூபியை கட்ட முடி­வெ­டுத்த போது, அதற்கு வடி­வ­மைத்­த­வர் ஒரு பொறி­யி­யல் வல்­லு­னர் குஸ்­டவ் ஈபில்.இவர் ஒரு பிரெஞ்­சுக்­கா­ரர். அவ­ரு­டைய  பங்­க­ளிப்­புக்­காக அவ­ரது பெய­ரையே அந்த கோபு­ரத்­திற்கு வைத்­தார்­கள். இதை எழுப்­பும் பணி 1887ம் வரு­டம் துவங்கி 1889ம் வரு­டம் முடிந்­தது’ என்­றேன்.

வியப்­போடு கேட்­டுக்­கொண்­டி­ருந்­த­வர் `இன்­னிக்கு உன் தய­வால ஒரு பாட்டு எழுதி கொஞ்­சம் சில்­லறை சம்­பா­திச்­சுக்­கி­றேன்’ என்­றார் வேடிக்­கை­யாக.

`உங்க கையி­லி­ருந்து வழி­யும் சில்­ல­றையை கொடுத்­தீங்­கன்னா நான் போட் கிளப் பகு­தி­யிலே ஒரு மூன்று படுக்­கை­யறை கொண்ட பிளாட் வாங்­கிக்­கு­வேன்’ என்­றேன்.

`உரக்க சொல்­லாதே. வரு­மான வரிக்­கா­ரன் வந்­து­டப்­போ­றான்’ என்­றார் சிரித்­துக் கொண்டே. அது­தான் அவர் என்­னு­டன் கடை­சி­யாக பேசி­யது.

2013 ஜூலை 8ம்தேதி அவர் என்­னு­டன் தொலை­பே­சி­யில் பேசி­னார்.  அடுத்த பத்­தா­வது நாள் அதா­வது ஜூலை 18, 2013ல் அவர் இந்த மண்­ணு­லகை விட்­டுப் பிரிந்­தார்.

  அவர் மறைந்­தா­லும், அவர் எழுத்­துக்­கள் அச்­சி­லும், காற்­றி­லும் உல­விக்­கொண்­டே­தான் இருக்­கின்­றன.

 வாலியை பற்றி அவ்வை நட­ரா­ஜன் சொன்­ன­து­தான் எத்­தனை பொருத்­தம்!

`அரு­மை­யில் எளிய அழகே போற்றி’ என்ற திரு­வா­ச­கத் தொடர்­தான் கவி­ய­ர­சர் வாலி­யின் கவிதை வரி­க­ளுக்கு நான் வரை­கின்ற புனை கோல­மா­கும்.  மொழியை உளி­யாக்கி கற்­பனை விரல்­க­ளால் செதுக்­கிய கலைத் தேரை திரை வீதி­க­ளில் ஓட வைத்­துத் தேரோட்­டம் நடத்­தி­ய­வர் கவி­ஞர் வாலி.

 ஏட்­டில் இருந்த ஏரா­ளக் கருத்­துக்­களை பாட்­டில் கொண்டு வந்த பாவ­லர், வாலி. நாட்­டில் இருந்த கவி­ஞர்­க­ளில் எதுகை மோனை­யோடு திரைக்­கூட்­டி­லி­ருந்த கவி­ஞர்­க­ளில் குறிப்­பி­டத்­தக்­க­வர். இலக்­கி­யம் ஒரு சிற­கா­க­வும், இசைப் பாடல்­கள் மறு சிற­கா­க­வும் கலை­வா­னில் பறந்த கவிக்­கு­யில், வாலி. வீட்­டில் தங்­கிய பொழு­து­களை விட­வும் பாட்­டில் தங்­கிய பொழு­து­களே அதி­கம்.

 முறைப்­போ­ரி­டம் துணி­வும், பழ­கு­வோ­ரி­டம் பணி­வும் காட்­டு­வதே பழக்­கம் கவி­ஞ­ருக்கு.

 கவிச்­சக்­க­ர­வர்த்­தியே, நீ மர­பில் பாடி­யதை நான் புதி­தில் பாடு­கின்­றேன். என்­னுள் புகுந்து எழுது, இறைஞ்­சு­கின்­றேன். தொழுது விதைப்­பது என் வேலை. விளை­விப்­பது உன் மூளை என்ற அவை­ய­டக்­கம் அன்பு நெறி­யை­யும் பிழிந்து பொழி­கி­றது.

 வாலி­யின் வைர வரி­கள் இழை­யோ­டாத இதழ்­களே கிடை­யாது. குதித்­தோ­டும் குழந்­தை­கள் முதல் தள்­ளா­டும் முதி­ய­வர்­கள் வரை  வாலி­யின் பாடல் வாய்க்­காத வாயே இல்லை. அவ்­வ­ளவு ஏன் ` அம்மா என்­ற­ழைக்­காத உயி­ரில்­லையே’ என்ற பாடல் வெல்­வெட்­டில் பொறிக்­கப்­பட்­டது போல் திருச்சி ஐயப்­பன் கோயில் கல்­வெட்­டில் பொறிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

 வீட்­டுப் புத்­த­கத்­தில் எழு­தப்­பட வேண்­டிய எத்­த­னையோ வரி­க­ளைத் தன் பாட்­டுப் புத்­த­கத்­தில் தந்­தி­ருப்­ப­வர் அவர்.

 ‘தாயி­ருக்­கும் கார­ணத்­தால் கோயி­லுக்கு போன­தில்லை.

 எந்த வேர்­வைக்­கும் வெற்­றி­கள் வேர் வைக்­குமே

  இருந்­தா­லும் மறைந்­தா­லும் பேர் சொல்ல வேண்­டும்.

 இவர்­போல யார் என்று ஊர் சொல்ல வேண்­டும்.

நட்­பைக் கூட கற்­பைப் போல எண்­ணு­வேன்.’

 இப்­படி திரைக் குர­லி­லேயே திருக்­கு­றள் எழு­திப் பார்த்­த­வர் வாலி.

பாட்­டில் மட்­டு­மல்ல, ஏட்­டில் எழு­திய

கவி­தை­க­ளி­லும் வார்த்­தை­க­ளால் வலை விரிக்­கும் வல்­லமை உண்டு வாலி­யி­டம். ‘பாண்­ட­வர் பூமி’­யும், ‘அவ­தார புரு­ஷ’­னும், ‘கிருஷ்ண விஜ­ய’­மும், ‘தமிழ்க் கட­வு’­ளும், ‘ராமா­னுஜ காவி­ய’­மும், ‘ஆறு­முக அந்­தா­தி’­யும் நூல்­க­ளால் ஆன வலை மாதிரி தாள்­க­ளால் ஆன வலை­தான் என்­பது அவற்றை வரிக்கு வரி விடா­மல் படித்­த­வர்­க­ளின் வாக்­கு­மூ­லம்.’

 இப்­ப­டி சொன்­னார் அவ்வை நட­ரா­ஜன்.

 நான் பழ­கிய வாலியை விட நான் பரு­கிய வாலி­யின் தமிழ்த் தேன் அதி­கம். ‘கற்­ற­லிற் கேட்­டலே நன்று’ என்­பார்­கள். அப்­படி கேட்ட எத்­தனை பாடல்­கள் என்னை வாலி பக்­கம் இழுத்­தது என்று பட்­டி­யலே போட முடி­யும்.

 ‘பஞ்­ச­வர்­ணக்­கிளி’ படம். இதில் ஜெய்­சங்­க­ருக்கு இரட்டை வேடம். வலம்­புரி சோம­னா­தன் கதை எழு­தி­யி­ருப்­பார். இது ஜெய்­சங்­க­ரின் மூன்­றா­வது படம். அதில் அத்­தனை பாடல்­க­ளும் வாலி­தான்.  இந்த படத்­தில் பாடல்­கள் அத்­த­னை­யும் மன­தில் சம்­ம­ணம் போட்டு உட்­கார்ந்து விட்­டது என் சின்ன வய­தில்.

 அதில் முதல் பாடல்--–

`அழ­கன் முரு­க­னி­டம் ஆசை வைத்­தேன் – அவன் ஆல­யத்­தின்  அன்பு மலர் பூசை வைத்­தேன்.

 அண்­ணல் உற­வுக்­கென்றே உட­லெ­டுத்­தேன் – அவன்

 அரு­ளைப் பெறு­வ­தற்கே உயிர் வளர்த்­தேன்.

 பனி­பெய்­யும் மாலை­யிலே

 பழ­மு­திர் சோலை­யிலே

 கனி கொய்­யும் வேளை­யிலே

 கன்னி மனம் கொய்­து­விட்­டான்

 பன்­னி­ரண்டு கண்­ண­ழகை

 பார்த்­தி­ருந்த பெண்­ண­ழகை

 வள்­ளல்­தான் ஆள­வந்­தான்

 பெண்­மையை வாழ வைத்­தான்

 மலை­மேல் இருப்­ப­வனோ

 மயில்­மேல் வரு­ப­வனோ

 மெய்­யு­ரு­கப் பாடி­வந்­தால்

 தன்­னைத்­தான் தரு­ப­வனோ

 அலை­மேல் துரும்­பா­னேன்

அனல்­மேல் மெழு­கா­னேன்

அய்­யன்கை தொட்­ட­வு­டன்

 அழ­குக்கு அழ­கா­னேன்’

 வாலி­யில் இந்த பாடலை கேட்டு, நானும் ‘அனல்­மேல் மெழு­கா­னேன்’. எத்­தனை அழ­கான வரி­கள். இந்த பாட­லில் அவ­ருக்கு முரு­கன் மேல் இருக்­கும் காதலை படத்­தில் வரும் பெண் மூல­மாக உருகி எழு­தி­யி­ருப்­பார்.

 கண்­ண­னைப் பற்றி கண்­ண­தா­சன் ஏரா­ள­மான பாடல்­கள் எழு­தி­யி­ருக்­கி­றார். அதே போல் ‘பஞ்­ச­வர்­ணக்­கிளி’ படத்­தி­லும் வாலி­யும் கண்­ணனை வைத்து ஒரு குழந்­தைக் கொஞ்­சு­வது போல் எழு­தி­யி­ருப்­பார்.

 அந்த பாட்டு அந்த நாட்­க­ளில் தாலாட்டு பாடும் தாய்­மார்­க­ளுக்­கெல்­லாம் உத­வி­யது.

 ‘கண்­ணன் வரு­வான் கதை சொல்­லு­வான்

 வண்­ண­ம­லர்த் தொட்­டில் கட்­டித் தாலாட்­டு­வான்

 குழ­லெ­டுப்­பான் பாட்­டி­சைப்­பான்

வலம்­புரி சங்­கெ­டுத்து பாலூட்­டு­வான்.’

 அதே போல் எத்­தனை வித­மான நாக­ரி­க­மான காதல்  காத­லி­க­ளின் வர்­ண­னை­கள் அவர் வரி­க­ளில் மின்­னும்!

 அதற்கு சிறந்த உதா­ர­ணம்–

 ‘அவ­ளுக்­கும் தமி­ழென்று பேர் – என்­றும்

 அவன் எந்­தன் உள்­ளத்­தில் அசை­கின்ற தேர்

அவ­ளுக்கு நில­வென்று பேர் – வண்ண

 மலர் கொஞ்­சும் குழல் அந்த முகி­லுக்கு நேர்.’

 ( தொட­ரும்)

Trending Now: