படிப்பே பலன் தரும்!

07-08-2019 06:00 PM

சிவ­கங்கை மாவட்­டம், தேவ­கோட்டை, பெத்­தாள் ஆச்சி பெண்­கள் உயர்­நி­லைப் பள்­ளி­யில், 1976ல், 11ம் வகுப்பு படித்­தேன். பொதுத்­தேர்­வில், வர­லாறு பாடத்­தில் தோற்­றேன்.

'படித்­தது போதும்...' என, கூறி விட்­டார் அப்பா.

'மீண்­டும் படிக்­கி­றேன்...' என, பிடி­வா­தம் செய்­த­தால், அதே பள்­ளிக்கு அழைத்­துச் சென்­றார் அம்மா. தலைமை ஆசி­ரியை பெரி­யாள் அறி­வுரை கூறி சேர்த்­துக் கொண்­டார். நன்­றாக படித்து தேர்ச்சி பெற்­றேன்.

உடன், திரு­ம­ணம் நடை­பெற்­றது. ஒரு மகன் பிறந்­த­தும், என் ஒரு கண் பார்வை பறி­போ­னது. வரு­வாய் துறை­யில் வேலை கிடைத்­தது. பின், ஒரு மக­ளும், மக­னும் பிறந்­த­னர்.

என், 26 வய­தில், கண­வரை இழந்­தேன். உழைப்பே வாழ்­வா­னது; நம்­பிக்­கை­யு­டன் உழைத்து, மூன்று பிள்­ளை­க­ளை­யும் படிக்க வைத்­தேன்.

என் மகள் பிஎச்.டி., பட்­டம் பெற்று, ஒரு பத்­தி­ரி­கை­யின் ஆசி­ரி­ய­ராக உள்­ளார். இரண்­டா­வது மகன் ஆடிட்­டர்; மூன்­றா­வது மகன், நிரு­ப­ராக பணி­பு­ரி­கி­றான்.

பணித் திற­மை­யால், பல விரு­து­கள் பெற்­றேன். பதவி உயர்­வு­கள் பெற்று, வட்­டாட்­சி­ய­ராக பணி­பு­ரிந்து ஓய்வு பெற்­றேன்.

அன்று, தோல்­வி­யில் துவண்டு போயி­ருந்­தால், என் பிள்­ளை­களை சிறப்­பாக வளர்த்­தி­ருக்க முடி­யாது; நானும் உயர்ந்­தி­ருக்க மாட்­டேன். படிப்பே பலன் தந்­தது.

தற்­போது, 61 வய­தா­கி­றது; எனக்கு பேரு­தவி செய்த தலைமை ஆசி­ரி­யையை நன்­றி­யு­டன் நினைவு கூர்­கி­றேன்.

–- கே. லட்­சுமி, சிவ­கங்கை.Trending Now: