‘மொக்க’ ஜோக்ஸ்!

07-08-2019 05:55 PM

‘‘மன்னர் திடீரென்று ‘ஸ்கேட்டிங்’ பழகுறாரே... ஏன்?’’

‘‘புறமுதுகிட்டு ஓடி ஓடி அலுத்துப் போச்சாம்... வித்தியாசமா ‘ஸ்கேட்டிங்’ மூலமா ஓடப் போறாராம்!’’

– டி. ஜெய்சிங், கோவை.

‘‘பள்ளி கூட விழாவுக்கு தலைவர் காதுல பஞ்சை வெச்சுக்கிட்டு வந்துருக்கிறாரே ஏன்?’’

‘‘மணி சத்தம் கேட்டா, ஜெயில் ஞாபகத்துல, தட்டை துாக்கிடுவாரு அதான்!’’

– பி. செல்வராஜ், விழுப்புரம்.

‘‘கடை திறப்பு விழாவுக்கு நம்ம தலைவரை கூப்பிட்டது தப்பா போச்சு...’’

‘‘ஏன், என்னாச்சு?’’

‘‘கத்தரிகோலை கையில எடுத்ததுமே முடி வெட்ட  ஆரம்பிச்சிட்டாரு!’’

– வேத. புருசோத்தமன், திருவள்ளூர்

‘‘மன்னர் எதுக்கு புது ‘ஆன்ட்ராய்டு’ மொபைல் போன் வாங்கியிருக்காரு?’’

‘அதுல ‘கூகுள் மேப்’ பார்த்து இரவு நகர் வலம் செல்லும் வழியை தெளிவா தெரிஞ்சுக்குவாராம்!

– வி. அனுசுயா, நாகப்பட்டினம்.

‘‘பதுங்கு குழியே, பத்து பன்னிரண்டு இருக்கிறதா.... எதற்கு தளபதியாரே?’’

‘‘புறமுதுகிட்டு ஓடுடும் போது  அருகில் இருப்பத்தில்  நுழைந்து விடலாம் என்று தான்!’’

– வி. ரேவதி, தஞ்சை.Trending Now: