ஆசியாவின் மகிழ்ச்சி பூட்டான்!

07-08-2019 05:52 PM

ஆசியா கண்­டத்­தில் மிக­வும் மகிழ்ச்­சி­யான நாடு பூட்­டான். உல­கில், நான்கு புற­மும் நிலத்­தால் சூழப்­பட்ட, 48 நாடு­க­ளில் ஒன்று. கிழக்கு, தெற்கு, மேற்­கில் இந்­தி­யா­வும், வடக்கே திபேத்­தும் எல்­லை­க­ளாக உள்­ளன. எந்த வகை ஆக்­கி­ர­மிப்­புக்­கும் உட்­ப­டா­தது!

இங்கு ஜன­நா­யக முறை­யில், தேர்­தல் நடத்­தப்­பட்­டா­லும், முதன்மை அதி­கா­ரம் பெற்­ற­வ­ராக, பூட்­டான் மன்­னரே உள்­ளார். முன்­னேற்­றம் என்ற பெய­ரில், காட்டு செல்­வத்தை அழிக்­காத நாடு. காட்­டின் பரப்­ப­ளவை, 60 சத­வீ­தத்­திற்கு கீழ் குறை­யா­மல் பாது­காத்து வரு­கி­றது. கரி­ய­மில வாயுத் தாக்­கம் இந்த நாட்­டில் மிக­வும் குறைவு; சுத்­த­மான காற்றை சுவா­சிக்­க­லாம்.

மக்­கள் தொகை­யில், மூன்­றில் ஒரு பகு­தி­யி­னர், 14 வய­துக்கு குறைந்த சிறு­வர், சிறு­மி­யர்.

பூட்­டான் நகர சாலை­க­ளில் ஒரு இடத்­தில் கூட, போக்­கு­வ­ரத்தை ஒழுங்கு படுத்­தும் அமைப்பு இல்லை; இதற்கு கார­ணம், இங்கு போக்­கு­வ­ரத்­தால் நெரி­சலே ஏற்­படு வதில்லை.

சிக­ரெட் புகைக்க தடை விதிக்­கப் பட்­டுள்­ளது. பிளாஸ்­டிக் என்ற நெகிழி பயன்­பாட்­டுக்­கும் தடை அம­லில் உள்­ளது.

ஆண்­டுக்கு, 40 ஆயி­ரம் பேர் இங்கு சுற்­றுலா வரு­கின்­ற­னர். சுற்­றுலா முக­வர்­கள் உத­வி­யு­டன் மட்­டுமே, சுற்­றிப்­பார்க்க முடி­யும். தனி­யாக எங்­கும் செல்ல முடி­யாது.

இங்­குள்ள, 18 மலை­கள், 23 ஆயி­ரம் அடிக்கு மேல் உய­ரம் உள்­ளவை; இவற்­றில், காங்­கார் பியூன்­சம் என்ற மலை, 24 ஆயி­ரத்து, 840 அடி உய­ர­முள்­ளது.

பூட்­டான், புத்த மதத்தை பின்­பற்­று­கி­றது. 75 சத­வீ­தம் பேர் பவுத்­தர்­கள். புத்த சன்­யா­சி­க­ளுக்­கும், மடங்­க­ளுக்­கும் பஞ்­ச­மில்லை.

இங்கு, சூறா­வ­ளி­யு­டன் கூடிய, மழை இயல்­பா­னது. குளிர் காலத்­துக்­கான உணவு தேவையை சமா­ளிக்க, காய்­க­றி­களை உலர்த்தி சேமித்து வைக்­கின்­ற­னர்.

பூட்­டா­னில் வினோத பழக்­கம் ஒன்று உள்­ளது. இந்த நாட்­டில் யாரா­வது உணவு கொடுத்­தால், உடனே வாங்கி சாப்­பி­டக் கூடாது; மூன்று முறை மறுத்த பின்பே, ஏற்க வேண்­டும். அந்­நாட்டு மக்­கள் இதை பாரம்­ப­ரி­ய­மாக கடை­பி­டிக்­கின்­ற­னர்; இந்த வழக்­கத்தை, நாக­ரி­க­மாக கரு­து­கின்­ற­னர்.

ஆசி­யா­வில், மிக மகிழ்ச்­சி­யான நாடு­க­ளில் முதன்மை இடத்தை பிடித்­துள்­ளது. உலக அள­வில் மகிழ்ச்­சி­யான நாடு­க­ளின் தர­வ­ரி­சை­யில், 84ம் இடத்­தில் உள்­ளது.

இந்த நாட்­டில், கருப்பு கழுத்து நாரை என்ற பறவை இனம், அழி­யும் நிலை­யில் உள்­ளது. இதை வேட்­டை­யா­டி­னால், ஆயுள் தண்­டனை நிச்­ச­யம்.

நீண்ட வால் குரங்கு, பனி சிறுத்தை, புனுகு மான், இமா­ல­யன் சாம்­பல் கரடி, புலி, மலை ஆடு மற்­றும் நீல செம்­ம­றி­யாடு என, பல உயி­ரி­னங்­கள் பூட்­டா­னில் மகிழ்ச்­சி­யாக வாழ்­கின்­றன.

பரப்­ப­ளவு: 38ஆயி­ர­தது, 394 சதுர கி.மீ.,

மக்­கள் தொகை: 8 லட்­சம்

தலை­ந­க­ரம்: திம்பு

ஆண்டு மழை­ய­ளவு: 140 செ.மீ.,

பணம்: நுகல்ட் ரம், இந்­திய ரூபாய்

–- திலிப்Trending Now: