விடுகதை!

07-08-2019 05:49 PM

1. சின்ன விழியிலே சிங்காரப் பாப்பா – அது எது?

2. சிறகு மடக்காமல், சின்ன விழி மூடாமல் பறக்கும் பூச்சி; அது என்ன?

3. சின்னப் சின்னப் பெட்டிக்குள்ளே, சேதியெல்லாம் கண்ணுக்குள்ளே – அது என்ன?

4. சிங்கார மேடையில் சங்கீதக் கச்சேரி; அங்கே போனால் அடியும் உதையும் – அது என்ன?

5. சின்ன மச்சான் குனிய வச்சான் – அது யார்?

6. சிவப்பு ரோஜா மலர்ந்தால் வெள்ளை மலர்கள் தெரியும் – அது என்ன?

7. சின்னக் கறுப்பன்; உருவம் சிறுத்தாலும் காரம் குறையாதவன்; அறுசுவை உணவுக்குள்ளும் அவன் இருப்பான். அது எது?

8. சின்ன வீடு நிறைய சீத்தாப் பழம் – அது என்ன?

9. சிறு சிறு கதவுகள், செய்யாத கதவுகள்; திறக்க, மூட சப்தம் இல்லாத கதவுகள்.... அவை என்ன?

10. சின்னச் சின்ன சீமாட்டிக்கு சிற்றலங்காரத்துக்கு மட்டும் நுாற்றைம்பது உடைகள்... அது என்ன?


விடை :

1. கண்மணி

2. தட்டாம்பூச்சி

3. தொலைக் காட்சிப்பெட்டி

4. தேன் கூடு

5. முள்

6. உதடு; பற்கள்

7. கடுகு

8. பற்கள்

9. கண்ணிமைகள்

10. வெங்காயம்Trending Now: