கம்பு கீரை பக்கோடா!

07-08-2019 05:45 PM

தேவையான பொருட்கள்:

முருங்கைக் கீரை - 1 கப்

கடலை மாவு -- 50 கிராம்

கம்பு மாவு - 50 கிராம்

பச்சரிசி மாவு - 2 தேக்கரண்டி

வெங்காயம் - 2

பூண்டு - 1

பெருங்காயத்துாள் - சிறிதளவு

கறி வேப்பிலை, எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

முருங்கை கீரையை பொடியாக நறுக்கவும். கடலை மாவு, கம்பு மாவு, பச்சரிசி மாவு, அரைத்த பூண்டு, பெருங்காயத் துாள், கறிவேப்பிலை, உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கீரையுடன் கலக்கவும்.

இந்த கலவையில், தேவையான அளவு தண்ணீர் தெளித்து, கெட்டியாகப் பிசையவும். வாணலியில், எண்ணெய் காய வைத்து, மாவை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். சுவையான, 'கீரை பக்கோடா' தயார். சத்துக்கள் நிறைந்தது.

தேங்காய் சட்னியில் தொட்டு சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்; சிறுவர், சிறுமியர் விரும்பி உண்பர்.

–- மு. மாதஸ்ரீ, புதுச்சேரி.Trending Now: