பாட்டிமார் சொன்ன கதைகள் – 228 – சுதாங்கன்

07-08-2019 05:45 PM

ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!

கடை­சி­யாக, ` உன்­னைப் போன்ற மனி­தர்­க­ளின் கொடு­மைக்­காக வெட்­க­முற்­றுத்­தான் மானு­ரு­வம் கொண்டு, மான்­க­ளு­டன் கூடிக்  காட்­டிலே திரிந்து கொண்­டி­ருந்­தேன் ‘ என்று சொல்­லிப் பிரா­ணனை விட்­டார் முனி­வர்.

 பாண்­டு­வின் துக்­கத்­திற்கு அள­வே­யில்லை. ` தரு­மத்தை விட்டு வேட்­டைக்­குத் திரி­யும் எனக்கு இந்­தத் தண்­டனை தேவை­தான் ‘ என்று அவன் அல­றி­னான். ராஜ போகத்­தி­லும், பொது­வா­கச் சிற்­றின்­பங்­க­ளி­லும், வெறுப்பு அதி­க­மா­யிற்று. ` மரத்­த­டி­க­ளிலே தங்கி அந்த மரங்­க­ளி­டம் சாப்­பி­டத் தக்க கனி­க­ளைப் பிச்­சை­யாக வாங்­கிப் பிழைப்­பதே இனி எனக்கு தரு­ம­மும், தவ­மும் ‘ என்று புலம்­பி­னான். உடனே தன்­னு­டைய பொன்­மாலை இரத்­தின மாலை­க­ளை­யும் கவ­சங்­கள் முத­லி­ய­வற்­றை­யும் கழற்றி எறிந்­தான். அவ­னு­டைய மனை­வி­மா­ரும் அவனை விட்­டுப் பிரி­யா­மலே, அவன் ரிஷி­யாக தவம் செய்து வந்த இடங்­க­ளிலே அவ­னு­ட­னே­யி­ருந்­தார்­கள்.

  இப்­ப­டி­யி­ருக்­கை­யில் காந்­தாரி கர்ப்­பம் தரித்­தாள் என செய்­தி­கள் ரிஷி­கள் மூல­மாக அந்த வனத்­தி­லும் பர­வி­விட்­டது. இதைக் கேள்­வி­யுற்­ற­தும் குந்­தி­யும் மாத்­ரி­யும் எவ்­வ­ளவு வருத்­தம் அடைந்­தார்­கள் என்று சொல்­ல­வும் வேண்­டுமா ? தனக்­குச் சந்­த­தி­யில்­லையே என்ற கவலை பாண்­டு­வுக்கு ஏற்­பட்­டது. அவன் ரிஷி சாபத்தை நினைத்­துத் தன்னை தானே வெறுத்­துக்­கொண்டு ` எவ்­வ­ளவு தவம் செய்து எப்­ப­டிப்­பட்ட சித்­தி­களை அடைந்து என்ன பயன் ? என்று பெரு­மூச்­செ­றிந்­தான்.

 குந்தி ஆறு­தல் சொன்­னாள், ` நான் சிறு பெண்­ணா­யி­ருக்­கை­யில் துர்­வாச மக­ரிஷி எனக்­கொரு மந்­தி­ரத்தை உப­தே­சித்­தார். அந்த மந்­தி­ரத்­தி­னால் எந்த தேவ­தையை வேண்­டிக் கொண்­டா­லும், அந்த தேவ­தை­யின் அரு­ளால் எனக்கு புதல்­வன் உண்­டா­வான்’ என்­றாள். பிறகு அவள் கண­வ­னு­டைய அனு­பதி பெற்­றுத் தர்ம தேவ­தை­யின் அரு­ளால் ஒரு புதல்­வ­னைப் பெற்­றாள். அவன் தான் தர்­ம­புத்­தி­ரன் என்று பின்­னா­ளில் பேரும் புக­ழும் பெற்­றான்.

 இந்த செய்தி காந்­தாரி காதில் விழுந்­த­தும், அவள் துய­ர­முற்­றுக் கர்ப்­பத்­தோ­டி­ருந்த வயிற்­றில் ஒங்கி அடித்­துக் கொண்­டா­ளாம். உடனே இரும்பு குண்டு போல் ஒரு மாமிச பிண்­டம் வெளிப்­பட்டு நூறு பிரி­வாகி விட்­ட­தாம். அந்­தப் பிண்­டத்­தி­லி­ருந்து துரி­யோ­தன முத­லான நூறு புதல்­வர்­கள் தோன்­றி­னார்­க­ளாம்.  முன்­னோர்­க­ளில் ஒரு­வ­னான குரு என்ற பிர­சித்தி பெற்ற அர­ச­னு­டைய பெய­ரால் இவர்­க­ளைக் கெள­ர­வர்­கள் என்று விசே­ஷ­மாய் அழைப்­ப­துண்டு.

 பாண்­டு­வும் ஒரு புத்­தி­ர­னோடு திருப்­தி­ய­டை­ய­வில்லை. குந்­தி­தேவி வாயு­வின் அரு­ளால் மறு­ப­டி­யும் ஒரு பிள்­ளை­யைப் பெற்­றாள். அவ­னுக்­குப் பீம­சே­னன் என்று பெயர். பாண்­டு­வுக்கு இன்­னும் புத்­திர சம்­பத்­தில் ` போதும்’ என்ற மனம் ஏற்­ப­ட­வில்லை. எனவே குந்தி இந்­தி­ரன் அரு­ளால் அருச்­சு­னன் என்ற புத்­தி­ர­னைப் பெற்­றாள்.

 அப்­பால் மாத்ரி பாண்­டு­வி­டம் போய், ` காந்­தா­ரிக்கு நூறு புதல்­வர்­கள் பிறந்­த­தைக் கேட்­டும் எனக்கு அவ்­வ­ளவு துக்­கம் உண்­டா­க­வில்லை. ஆனால் குந்­திக்­குப் பிள்­ளை­கள் பிறந்­த­தும், உமக்கு சந்­ததி ஏற்­பட்­டதே என்ற சந்­தோ­ஷத்­திற்­குப் பதில் ஏன் இந்த பேய்­ம­னம் என்னை  இந்த பாடு­ப­டுத்­து­கி­றது ?’  என்று இர­க­சி­ய­மாய்க் கேட்­டாள். இதைக் கேள்­வி­பட்­ட­தும், குந்தி கரு­ணை­யோடு தன் மந்­திர ரக­சி­யத்தை மாத்­ரிக்­கும் தெரி­வித்­தாள். எனவே மாத்­ரிக்­கும் தேவர்­க­ளின் அரு­ளால் பிள்­ளை­கள் பிறந்­தார்­க­ளாம். நகு­லன் சகா­தே­வன் என்ற இரட்டை பிள்­ளை­கள் பிறந்­தது. இவ­ளு­டைய மனக்­கு­றை­யும் நீங்கி விட்­டது. பாண்­டு­வின் குறை­யும் பூர்­ண­மாக நீங்­கிப் போயிற்று. பாண்­டு­புத்­தி­ரர்­கள் பாண்­ட­வர் என்று விசே­ஷ­மாய் அழைக்­கப்­பட்­டார்­கள்.

 இப்­படி பரத குலம் தழைத்து வரு­வது குறித்து பீஷ்­ம­ரும் இராஜ்­ய­மும் அடைந்த  மகிழ்ச்­சிக்கு எல்லை இருக்க முடி­யுமா ?

                    வசந்த ரூப­மாக வந்த யமன்

தர்­ம­புத்­தி­ரன் குழந்­தை­யா­யி­ருக்­கும் போதே ` சாட்­சாத் தரும தேவ­தை­யின் குழந்­தை­தான் இவன் ‘ என்று சொல்­லும்­படி அவ்­வ­ளவு சாத்­வீக லட்­ச­ணங்­க­ளோடு விளங்­கி­னான். பீம­சே­னனோ, வாயு­வில் அரு­ளால் பிறந்­த­வு­டனே, ` இந்த பொல்­லாத குழந்தை என்ன பாடு­ப­டுத்­து­கி­றது. சண்ட மாரு­தம் போலே ‘ என்று பார்த்­த­வர் அஞ்­சும்­படி அவ்­வ­ளவு புஷ்­டி­யான உட­லும் பர­ப­ரப்­பும் வலி­மை­யும் வாய்ந்­த­வ­னாக இருந்­தான். இப்­ப­டிச் சாந்­தமே உரு­வெ­டுத்­தது போலி­ருந்த மூத்த பிள்­ளை­யும், வலி­மையே உரு­வெ­டுத்­தது போலி­ருந்த இளைய பிள்­ளை­யும், பெற்­றோர் இத­யத்தை எப்­படி மகிழ்­வித்­தி­ருக்க வேண்­டும்.

 ` சபித்து விட்­டாரே ! புத்­திர சம்­பத்­தில்­லா­மல் போய் விட்­டதே ‘ என்று ஏங்­கிக்­கொண்­டி­ருந்த இத­யங்­கள் அல்­லவா ?

 ஒரு சம­யம் குந்தி குழந்தை பீம­னை­டம் கூட ஒரு தடா­கத்­தில் போய் ஸ்நானம் செய்து மலை­யோ­ர­மாக வரு­கை­யில், ஒரு பெரும் புலி அவ­ளைக் கண்­ட­தும் குகை­யி­லி­ருந்து கிளம்பி விட்­டது. வாலை­ய­டித்­துக் கொண்டு, அதை கண்டு அவள் பயத்­தி­னால் மலை­மேல் ஏற ஆரம்­பித்­தாள். அப்­போது இடுப்­பி­லி­ருந்த குழந்தை நழு­விக் கிழே விழுந்­து­விட்­டது. இவற்­றை­யெல்­லாம் சிறிது தூரத்­தி­லி­ருந்து பார்த்­துக் கொண்­டி­ருந்த பாண்டு, உனடே வில்லை வளைத்து அம்பு போட்­டுப் புலி­யைக் கொண்டு விட்­டான். பிறகு அவள் மலைச் சரி­வுக்கு ஓடிப் போய் விழுந்த குழந்­தையை தூக்­கி­யெ­டுத்­த­தும், ` ஆச்­ச­ரி­யத்­தி­லும் ஆச்­ச­ரி­யம்’ அது கிடந்த பாறையே தூளாக்­கப்­பட்­டி­ருந்­த­தைக் கண்­டா­ளாம். இப்­போது அவ­ளால் தன் கண்­க­ளையே நம்ப முடி­ய­வில்லை. தாயின் மகிழ்ச்­சியை சொல்­ல­வும் வேண்­டுமா ?

 சாபத்­திற்கு அஞ்­சிய இந்­தி­ரிய ஜயம் செய்து  கொண்டு ரிஷி­க­ளோடு ரிஷி­யாய் காட்­டி­லி­ருந்­தா­லும் மைந்­தர்­க­ளை­யும் மனை­வி­ய­ரை­யும் காப்­ப­தற்­காக அந்­தத் தவக் கோலத்­தில் பாண்டு அம்­பும் வில்­லு­மா­யி­ருந்­தான்.

(தொட­ரும்)
Trending Now: