கைகொ­டுத்­தது சீரி­யல்­தான்! – கவிதா

06-08-2019 06:19 PM

“நான் எவ்­வ­ள­வு­தான் சினி­மா­விலே நடிச்­சி­ருந்­தா­லும், டிவி சீரி­யல்­தான் எனக்கு கைகொ­டுத்­துச்சு!” என பூரிப்­பு­டன் சொல்­கி­றார் கவிதா.  இவர் கடந்த 20 ஆண்­டு­க­ளாக  நான் – ஸ்டாப்­பாக நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார் என்­பது கவ­னிக்­கத்­தக்­கது.

‘நிலா,’ ‘வள்ளி’ ஆகிய சீரி­யல்­க­ளில் முக்­கிய கேரக்­டர்­க­ளில் நடித்­துக் கொண்­டி­ருக்­கும் அவரை சந்­தித்த போது...

“குழந்தை நட்­சத்­தி­ரமா சினி­மா­விலே 7 வய­சிலே இருந்து நடிச்­சுக்­கிட்டு இருக்­கேன். ‘அஞ்­சலி, ‘தம்­பிக்கு ஒரு பாட்டு,’ ‘மாண்­பு­மிகு மாண­வன்’ (விஜய் தங்­கை­யாக), ‘மனைவி வந்த நேரம்’ இப்­படி பல படங்­கள்ல நடிச்­சுக்­கிட்டு இருக்­கேன். ஒரு சின்ன கேப்­புக்கு பிறகு, ஏவி.எம். புரொ­ட­க்க்ஷன்ஸ் தயா­ரிச்சு எஸ். பி. முத்­து­ரா­மன் டைரக்ட் செஞ்ச ‘நிம்­மதி உங்­கள் சாய்ஸ்’ல ரீ – எண்ட்ரி ஆனேன். அதி­லி­ருந்து ஏவி. எம். புரொ­டக்­க்ஷன்ஸ் தயா­ரிப்­பிலே உரு­வான ‘ஒரு பெண்­ணின் கதை,’ ‘அம்­பிகை,’ ‘சக்தி,’ ‘பய­ணம்’ உட்­பட பல சீரி­யல்­கள்ல நடிச்­சேன். தெலுங்கு சீரி­யல்­கள்­ல­யும் கொஞ்­சம் நடிச்­சி­ருக்­கேன்.

எப்­ப­வும் குடும்­பப்­பாங்­கான கேரக்­டர்­கள்­தான் என்னை தேடி வந்­துக்­கிட்­டி­ருக்கு. நானே நெகட்­டிவ் கேரக்­டர்ல நடிக்­க­ணும்னு நினைச்­சா­லும், உங்க மூஞ்­சிக்கு அது பொருத்­தமா இருக்­கா­துன்னு சொல்­லி­டு­வாங்க. ஆனா, அதை­யும் மீறி ‘அவ­ளும் நானும்,’ ‘வேலு­நாச்சி’ இந்த சீரி­யல்­கள்ல நெகட்­டிவ் ரோல்­கள்ல நடிச்­சேன். என்னை நெகட்­டிவ் ரோல்ல பார்த்­துட்டு நிறைய பேரு அதிர்ச்சி ஆகி­யி­ருக்­காங்க. ஏன் நெகட்­டிவ் ரோலை அக்­செப்ட் பண்­ணீங்­கன்னு உரி­மையா கோபிச்­சுக்­கிட்­டாங்க. அந்த மாதி­ரி­யான ரோல்ல நடிக்­கும் போது மட்­டும் ரொம்ப உற்­சா­கமா ஷூட்­டிங்­குக்கு போவேன். ஏன் சொல்­லுங்க? அப்­போ­தான் சூப்­பரா டிரஸ் பண்­ணிக்­க­லாம், வகை­வ­கையா நகை­கள் போட்­டுக்­க­லாம்.  கிடைச்­சிச்­சுடா சான்­சுன்னு நான் பெர்­ச­னலா ஆசைப்­பட்டு வாங்­கிய நகை, புட­வை­யை­யெல்­லாம் போட்­டுக்­கு­வேன். ஆனா, குடும்­பப்­பாங்­கான கேரக்­டர்­கள்ல நடிக்­கும் போது மேக் – அப், டிரஸ் எல்­லாத்­தை­யும் சிம்ப்­பி­ளா­தான் போட முடி­யும்.

இது­வரை நான் நடிச்ச சீரி­யல் கேரக்­டர்­கள்ல... ‘சக்­தி’­­­­யிலே  ‘மேகா’ கேரக்­டர், ‘அம்­பி­கை’­­­­யிலே ‘வண்­ண­மதி’ கேரக்­டர் (தைரி­ய­மான பெண்), ‘வேலு­நாச்சி,’ ‘அவ­ளும் நானும்’ இதெல்­லாம் பிடிக்­கும். ‘வேலு­நாச்­சி’­­­­யிலே எனக்கு ரொம்ப சேலஞ்­சிங்­கான கேரக்­டர். அதுக்­காக சிலம்­ப­மெல்­லாம் கஷ்­டப்­பட்டு கத்­துக்­கிட்­டேன். இப்போ நடிச்­சுக்­கிட்டு இருக்­கிற ‘நிலா,’ ‘வள்­ளி’­­­­யை­யும் ரொம்ப பிடிக்­கும்.

இப்­ப­வும் எனக்கு சினிமா வாய்ப்­பு­கள் வந்­துக்­கிட்­டுத்­தான் இருக்கு. ஆனா, எனக்கு ‘சீரி­யல்’ வாழ்க்கை சூப்­பரா ‘செட்’ ஆயி­டுச்சு. எனக்கு இந்த பீல்­டுல நல்ல பேர் இருக்கு. சினி­மா­விலே, நாம வர்ற காட்­சி­கள் ரொம்ப குறைவா இருக்­கும். ‘துணை நடிகை’ மாதி­ரி­யான பேரு­தான் இடைக்­கும். அத­னால, அதிலே நடிக்­கி­ற­துக்கு எனக்கு இஷ்­ட­மில்லே. நல்ல முக்­கி­ய­மான கேரக்­டர்ன்னா நடிக்­க­லாம்.”