இயக்­கு­நர் குமு­றல்!

06-08-2019 06:13 PM

‘‘என்­னோட கதையை மட்­டு­மல்ல எனது மூன்று வருட உழைப்­பை­யும் அநி­யா­ய­மாக திருட பார்க்­கி­றார்­கள்’’ என குமு­றி­யுள்­ளார் ‘டைம் இல்ல’ படத்­தின் இயக்­கு­நர் சதிஷ் கர்ணா. என்ன தான் நடந்­தது என கேட்­ட­போது, ‘‘கலை என்டர்­டெ­யின்­மெண்ட் புரொ­டக்க்ஷன்ஸ் என்ற பேன­ரில் மனோ பார்த்­தி­பன் தயா­ரிப்­பில், நான் எழுதி இயக்­கிய படம்­தான் ‘டைம் இல்ல.’

இதில் மனோ­ பார்த்­தி­பன்­தான் ஹீரோ. நானும் சில காட்­சி­க­ளில் நடித்­துள்­ளேன். இப்­ப­டம் கடந்த ஜன­வரி மாதம் மத்­திய திரைப்­பட தணிக்கை குழு­வி­ன­ரால் - தணிக்கை செய்­யப்­பட்டு ‘யு/ஏ’ சான்­றி­த­ழும் பெற்­றது.

இப்­ப­டத்­தின் வெளி­யீட்­டுக்­காக காத்­தி­ருந்த எனக்கு, நான் நடித்­தி­ருந்த சில காட்­சி­களை நீக்கி விட்டு, மொட்டை ராஜேந்­தி­ரன் நடித்த சில காட்சிகள் இணைக்­கப்­பட்ட நிலை­யில், கலை சினி­மாப் பட­நி­று­வ­னம் என்ற பெய­ரில் இதன் டீசர் வெளி­யா­னது கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­தேன். மேலும், இதில் தயா­ரிப்பு இயக்­கம் மனோ பார்த்­தி­பன் என வெளி­யா­கி­யது, அப்­ப­டியே என்னை நிலை­கு­லைய செய்­து­விட்­டது. இது ­கு­றித்து கமி­ஷ­னர் அலு­வ­ல­கத்­தி­லும் புகார் கொடுத்­துள்­ளேன்.

ஏற்­க­னவே தணிக்கை செய்­யப்­பட்ட இப்­ப­டத்­திற்கு, மீண்­டும் மொட்டை ராஜேந்­தி­ரன் நடிப்­பில் சில காட்சிகள் ரீ ஷூட் செய்­யப்­பட்டு, தானே இயக்­கி­ய­தா­க­வும் குறிப்­பிட்­டுள்­ளது எந்த வகை­யில் நியா­யம்? இது­கு­றித்து தயா­ரிப்­பா­ளர் மனோ பார்த்­தி­ப­னி­டம் கேட்ட போது, ‘‘அட போய்யா, பாலா ரீமேக் பண்ண படத்­தி­லி­ருந்து அவ­ரையே தூக்கி போட்­டுட்டு வேற ஒரு­வர் படத்தை டைரக்ட் பண்­ணிட்டு வர்­றது உனக்கு தெரி­யுமா? தெரி­யாதா? என கிண்­ட­ல­டிக்­கி­றார். அப்­ப­டியே நொறுங்கி போய் விட்­டேன்.

இது­கு­றித்து கில்டு மற்­றும் இயக்­கு­நர் சங்­கத்­தி­லும் புகார் செய்­துள்­ளேன். எனக்கு நியா­யம் கிடைக்­கும் வரை போரா­டு­வேன்’’ என்­கி­றார் ஆவே­சத்­து­டன்.Trending Now: