விஜய்­யி­டம் அட்லீ பத­றி­னார்!

06-08-2019 06:13 PM

விஜய்­யின் ‘பிகில்’ படம் தீபா­வ­ளிக்கு வெளி­யா­க­வுள்­ளது. அட்லீ இயக்­கி­யுள்ள இப்­ப­டத்­தில் பிர­பல வில்­லன் நடி­க­ராக இருந்து பிறகு காமெடி டிராக்­கிற்கு சென்ற ஆனந்த்­ரா­ஜும் முக்­கிய வேடத்­தில் நடித்­துள்­ளார்.

சமீ­பத்­தில் பேட்டி ஒன்றை அளித்­துள்ள ஆனந்த்­ராஜ் அதில் கூறு­கை­யில், ‘‘‘பிகில்’ படத்­தின் ஷுட்­டிங்­கிற்­காக நானும், விஜய்­யும் அங்கு இருக்­கி­றோம். அவ­ருக்­கும் எனக்­கு­மான ஷூட்­தான் அப்­போது போய் கொண்­டி­ருக்­கி­றது. அன்­றைய நாள்­தான் ‘ஜாக்­பாட்’ படத்­தின் ஆடியோ லான்ச். இத­னால் இது குறித்து நான் விஜய்­யி­டம் கூறி­னேன். அவர் அட்­லீ­யி­டம் கூற, அதன்­பின் அவர்­கள் புறப்­பட்டு செல்­லும்­படி கூறி­னர். ஆனால், அன்­றைய நாள் சென்­னைக்கு வெளியே ஷூட்­டிங் இருந்­த­தால், நான் உரிய நேரத்­தில் ‘ஜாக்­பாட்’ ஆடியோ லான்ச்­சிற்கு செல்ல முடி­ய­வில்லை. மறு­நாள் விஜய் ‘‘என்ன சார், ஆடியோ லான்ச் சிறப்­பாக முடிந்­ததா?’’ என்று கேட்­டார். நான் சரி­யான நேரத்­திற்கு போக முடி­ய­வில்லை சார் என்­றேன், அவர் உண்­மை­யாக மன­தி­லி­ருந்து வருத்­தப்­பட்­டார். அப்­போது அரு­கி­லி­ருந்த அட்­லீயை பார்த்­தார். உடனே அட்லீ சார் நான் சொன்­ன­வு­டனே அவரை அனுப்பி வைத்து விட்­டேன் என்று பத­றி­ய­தாக கூறி­னார்.Trending Now: