விஜய் சேது­பதி நடிக்­கும் ‘துக்­ளக் தர்­பார்!’

06-08-2019 06:12 PM

தயா­ரிப்­பா­ளர்  லலித்­கு­மா­ரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடி­யோஸ்  மற்­றும் வய­காம் 18 ஸ்டூடி­யோஸ் இணைந்து தயா­ரிக்­கும் படம் ‘துக்­ளக் தர்­பார்.’ விஜய் சேது­பதி,  அதி­தி­ராவ் ஹெய்­தாரி நாய­கன், நாய­கி­யாக நடிக்­கி­றார்­கள். பார்த்­தி­பன் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார். இப்­ப­டத்தை  புது­முக இயக்­கு­நர் டில்லி பிர­சாத் தீன­த­யா­ளன் இயக்­கு­கி­றார்.

‘நடு­வுல கொஞ்­சம் பக்­கத்­தைக் காணோம்’ இயக்­கு­னர் பாலாஜி தர­ணி­த­ரன் இப்­ப­டத்­தின் வச­னத்தை எழுதி இருக்­கி­றார்.   ‘96’ படம் மூல­மாக இயக்­கு­ந­ராக பெரி­ய­ள­வில் கவ­னம் ஈர்த்த கேம­ரா­மேன்,  பிரேம்­கு­மார். இவர் இப்­ப­டத்­தின் ஒளிப்­ப­தி­வா­ள­ராக பணி­யாற்­று­கி­றார். ‘கோவிந்த் வசந்தா’ இசை­ய­மைப்­பா­ள­ராக இணைந்­தி­ருக்­கி­றார். ஆர்ட் டைரக்­டர் குமார் கங்­கப்­பன். எடிட்­ட­ராக கோவிந்த் ராஜ் பணி­யாற்ற சண்­டைப்­ப­யிற்­சியை திலீப் சுப்­பு­ரா­யன் கவ­னிக்­கி­றார். இப்­ப­டத்­தின் பூஜை சமீ­பத்­தில் சென்­னை­யில் நடை­பெற்­றது.Trending Now: