ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 7–8–19

06-08-2019 05:59 PM

ரசி­கர்­களை மை போட்டு மயக்­கி­யது!

(சென்ற வாரத் தொடர்ச்சி...)

‘‘அனே­க­மாக ஆகா­யம் மேலே பாதா­ளம் கீழே’’ என்று ஆரம்­பிக்­கிற பாட்டோ அல்­லது ‘‘என்­னடா பொல்­லாத வாழ்க்கை’’ என்ற ‘தப்­புத்­தா­ளங்­கள்’ படத்­தின் பாட்­டோ­தான் பத­விக்கு வந்­தி­ருக்க வேண்­டும்.

நுட்­ப­மா­கத் தொடங்­கு­வ­தா­னால் ரஜி­னி­யின் பாடல்­கள் என்ற பெரும் அத்­தி­யா­யத்­தின் முதல் சில பாடல்­க­ளில் ‘மூன்று முடிச்சு’ படத்­தில் வில்­லன் பாடு­கிற ‘‘மன­வி­னை­கள்’’ என்ற பாடல் அது­வும் எம்.எஸ். விஸ்­வ­நா­தன் சொந்த குர­லில் பாடி­யது அதைத் தொட்­டுத்­தான் தொடங்க வேண்­டி­யி­ருக்­கும். ஆனால், ரஜி­னி­யின் பாடல்­கள் என்­கிற பெரும் ஞாப­கத்­தைத் திறந்து தரு­கிற பாடல் என ‘பில்லா’ படத்­தின் ‘‘மை நேம் இஸ் பில்லா’’ பாட­லைத்­தான் சொல்­வேன்.

  எம்.ஜி.ஆர் வில்­ல­னாக சில படங்­க­ளில் வேஷம் கட்­டி­யி­ருக்­கி­றார். அவற்­றி­லும் கூட தன்­னைத் தொடர்ந்து வழி­ப­டு­கி­ற­வர்­க­ளின் புனித நம்­ப­கங்­க­ளைச் சற்­றும் குலைத்து விடா­மல் பார்த்­துக் கொண்­டார். எடுத்த எடுப்­பி­லேயே எதிர் நாய­க­னாக மானுட வெறுப்பு என்­கிற உள­வி­ய­லுக்­குள் தன் வேடத் தொடர்ச்சி மூல­மா­கத் தென்­ப­டத் தொடங்கி பிற்­பாடு நாய­கன் ஆனது ரஜி­னிக்கு வாய்த்த வித்­தி­யா­சம். அவரை வெறுப்­ப­தாக எண்­ணிக் கொண்டே பெரும் எண்­ணிக்­கை­யி­லான ரசிக மன­சு­கள் விரும்­பத் தொடங்கி இருந்­தன. பிறகு தான் மெல்ல அவர் நாய­க­னா­னார். அவ­ருக்கு வில்­ல­னாக நடிப்­பது நடி­கர்­க­ளுக்கு மகா­பெ­ரிய சவா­லாக ஆனது. ரகு­வ­ரன், சத்­ய­ராஜ் தொடங்கி வெகு சொற்ப சிலரே அப்­படி சோபித்­த­னர்.

 ‘ப்ரியா’ படத்­தில் சுஜா­தா­வின் கன­வுக்­கண்­ணன் வேடத்­தில் கணே­ஷா­கத் தோன்­றி­னார் ரஜினி. வre;j; என்று அதில் வரு­ப­வ­ரைப் பார்த்­தால் இன்­றைக்­கும் சுஜாதா தொடங்கி எஸ்.பி. முத்­து­ரா­மன் வரைக்­கும் யாவ­ரை­யும் வெறுப்­போம். அது வேறு கதை. ‘ப்ரியா’ படத்­தில் நடிகை ப்ரியா­வாக, ஸ்ரீதேவி அவ­ரு­டைய காத­ல­னாக அம்­ப­ரீஷ் தனியே ரஜி­னிக்கு ஒரு மலே­சிய காதலி என்­றெல்­லாம் அளவு சட்­டை­யைத் தொலைத்து விட்டு ஆல்­ட­ரே­ஷன் டெய்­ல­ரி­டம் அவஸ்­தைப்­ப­டு­கிற புது­மாப்­பிள்ளை போல அவ­ருக்கு மூன்று நான்கு பாடல்­கள் வழங்­கப்­பட்­டா­லும் ஸ்டீரி­யோ­போ­னிக் இசை­யின் துவக்­கப்­ப­ட­மாக ‘ப்ரியா’ அமைந்­தது. அதன் பாடல்­கள் காலம் கடந்­தன. ஜேசு­தாஸ் பாடிய ரஜி­னிக்­கான பாடல்­கள் மென் சோக­மும் குழை­த­லு­மாக நாளும் வசீ­க­ரித்­தன.

சிங்­கப்­பூ­ரின் எழிலை போற்­று­கிற ‘‘அக்­க­ரைச் சீமை அழ­கி­னிலே’’ பாடல் மறக்க முடி­யாத ஒன்று. திரை­யில் ரஜினி காட்­டிய அதீத உற்­சா­கத்­தோடு ஜேசு­தா­சின் பிரார்த்­திக்­கிற குரல் பொருந்­த­வில்லை என்­றா­லும் இரண்டு வெவ்­வேறு அழ­கு­க­ளா­கத் தனித்­த­னவே ஒழிய அவற்­றால் அந்த பாட­லின் மாண்பு கெட­வில்லை. ‘‘ஹே பாடல் ஒன்று’’, ‘‘ஸ்ரீரா­ம­னின் ஸ்ரீதே­வியே’’ பாடல்­க­ளும் ரஜி­னிக்­கான ஜேசு­தா­சின் நற்­பா­டல்­கள் வரி­சை­யில் இடம்­பெ­று­கின்­றன.

  பிற்­பா­டு­க­ளில் ‘‘ஒரு பண்­பாடு இல்லை என்­றால் பார­தம் இல்லை’’ (‘ராஜா சின்ன ரோஜா’) ‘‘சிட்­டுக்கு செல்ல சிட்­டுக்கு ஒரு சிறகு முளைத்­தது’’ (‘நல்­ல­வ­னுக்கு நல்­ல­வன்’) ‘‘அண்­ணன் என்ன தம்பி என்ன சொந்­தம் என்ன பந்­தம் என்ன’’ (‘தர்­ம­துரை’) ‘‘அம்மா என்­ற­ழைக்­காத உயி­ரில்­லையே’’ (‘மன்­னன்’) ‘‘ஒரு பெண் புறா கண்­ணீ­ரில்’’ (‘அண்­ணா­மலை’).

‘‘என்ன தேசமோ’’ (‘உன் கண்­ணில் நீர் வழிந்­தால்’) என பல பாடல்­களை ஜேசு­தாஸ் பாடி­னார். ரஜி­னிக்­கும் அவ­ருக்­கு­மான பிணைப்பு மென் சோக மெலடி பாடல்­கள். தனி­யா­வர்த்­த­னப் பாடல்­கள் சோகப்­பா­டல்­கள். இவற்­றைத் தாண்டி சில டூயட்­க­ளை­யும் ரஜி­னிக்­கா­கப் பாடி­னார் ஜேசு. அவற்­றில் எதிர்­பார்க்­கவே முடி­யாத ஒன்று ‘‘மாசி மாசம் ஆளான பொண்ணு’’ என்று ஆரம்­பிக்­கிற ‘தர்­ம­துரை’ படப்­பா­டல்­தான்.

 மனோ­வின் ஜாலி­யான குரல் ரஜி­னிக்­குப் பொருந்­திற்று. மேலும் மனோ­வின் பெரு­வெற்­றிப் பாடல்­க­ளில் பல ரஜி­னிக்­கா­னவை. ‘உழைப்­பாளி’ முக்­கிய படம். ‘பாண்­டி­யன்’, ‘வேலைக்­கா­ரன்’ உள்­ளிட்ட படங்­க­ளில் மனோ மாத்­தி­ரமே ரஜி­னிக்­காக படம் முழு­வ­துக்­கும் பாடி­யது வர­லாறு. ‘‘உல­கத்­துக்­காக பிறந்­த­வன் நானே’’ என்ற ‘உழைப்­பாளி’ பாட­லும், ‘‘பாண்­டி­யனா கொக்கா கொக்கா’’ என்­கிற பாட­லும், ‘‘ஒண்ணு ரெண்டு மூணு நாலு’’ என்ற ‘தர்­ம­துரை’ பாட­லும் மனோ­க­ர­மா­னவை.

 துாரத்­தி­லேயே கேட்­டா­லும் நம் ஆழத்­தில் ஒலிப்­பவை சிறப்­பான பாடல்­கள். அவற்­றில் ரஜினி பாடல்­க­ளுக்­குப் பெரும் பந்­த­முண்டு. மலே­சியா பாடிய ‘‘ஆசை நூறு வகை’’ பாடல் தொடங்கி, ‘‘தானந்­த­னக் கும்மி கொட்டி’’ பாடல் வரைக்­கும் எத்­த­னையோ ரஜினி ஹிட்ஸ் உண்டு. அவ­ரு­டைய தனித்த குரல் ரஜி­னிக்கு ஒரு பிரி­ய­மான நாய்க்­குட்­டி­யைப் போலவே குழைந்து சேவ­கம் செய்­தது எனச் சொன்­னால் தகும்.

 இளை­ய­ராஜா தன் சொந்­தக் குர­லில் பாடிய ‘‘உள்­ளுக்­குள்ள சக்­க­ர­வர்த்தி ஆனா உண்­மை­யில மெழு­கு­வர்த்தி’’ பாடல் ரஜி­னி­யின் வெள்­ளந்தி ரசி­கர்­களை மை போட்டு மயக்­கிற்று. ரஜி­னிக்­குப் பொருந்­தின அள­வுக்கு ராஜா­வின் குரல் நாசர் உட்­பட வெகு சில­ருக்கே அத்­தனை கச்­சி­த­மாய்ப் பொருந்­திற்று. பல­ருக்­கும் அட்­ஜஸ்ட் செய்து கொள்­ளா­மல் ராஜா பாடல்­க­ளா­கவே இருந்­தன என்­ப­தும் உண்மை.Trending Now: