சேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 5–8–19

05-08-2019 03:24 PM

இந்திய பங்குச் சந்தை நிலவரம்

என்.பி.எப்.சி. பிரச்­ச­னை­கள், காலாண்டு முடி­வு­கள் சந்­தைக்கு சாத­க­மாக இல்­லா­தது, பல இடங்­க­ளில் மழை சிறிது குறைந்­தது, அமெ­ரிக்­கா­வின் பெட் மீட்­டிங்­கிற்கு பிறகு வெளி­யிட்ட அறிக்கை, வெளி­நாட்டு எப்.பி.ஐ., க்கள் பங்­கு­களை விற்று பணங்­களை எடுத்­துச் செல்­வது என்று தொடர்ந்து நடப்­ப­தால் சந்­தை­க­ளும் தங்­கள் பொவிவை இழந்து நிற்­கின்­றன.

வெள்­ளி­யன்று இறு­தி­யாக

வெள்­ளி­யன்று இறு­தி­யாக மும்பை பங்­குச் சந்தை 100 புள்­ளி­கள் கூடி 37118 புள்­ளி­க­ளில் முடி­வ­டைந்­தது. தேசி­ய­பங்­குச்­சந்தை 17 புள்­ளி­கள் கூடி 10997 புள்­ளி­க­ளில் முடி­வ­டைந்­தது. சென்ற வாரத்தை விட இந்த வாரம்          சுமார் 764புள்­ளி­கள் குறைந்து  மும்பை பங்­குச் சந்தை முடி­வ­டைந்­தி­ருக்­கி­றது. கடந்­த­சில வாரங்­க­ளாக சந்தை சரி­வில் தான் இருக்­கி­றது.

அமெ­ரிக்­கா­வின் பெட் மீட்­டிங்

அமெ­ரிக்­கா­வில் சென்ற வாரம் நடந்த பெட் கூட்­டத்­தில் வட்டி விகி­தங்­களை குறைக்க முடிவு செய்­துள்­ள­தாக அறி­வித்­தார்­கள். அங்கு வட்டி விகி­தங்­களை குறைத்­தால் அது பல நாடு­க­ளுக்­கும் நன்மை. கார­ணம் என்­ன­வென்­றால் அங்­கி­ருக்­கும் பணம் வெளி­நா­டு­க­ளில் கூடு­தல் வட்­டி­கள் கொடுக்­கும் இடங்­க­ளுக்கு செல்­லும். அற்ற குளத்து அரு­நீர் பற­வை­கள் போலத்­தான்.  ஆனால் வட்டி குறைத்­தது மட்­டு­மில்­லா­மல் என்ன செய்­தார்­கள் தெரி­யுமா? இனி­மேல் வட்டி குறைப்பு இருக்­காது என்று அறி­விக்­க­வும் செய்து விட்­டார்­கள். இனி­மேல் வட்டி குறைப்பு இருக்­காது என்­றால் அங்­கி­ருந்து பணத்தை யாரும் எடுத்து வெளி­நா­டு­க­ளுக்கு கொண்டு செல்ல மாட்­டார்­கள். இது மற்ற நாடு­க­ளுக்கு ஒரு மகிழ்ச்­சி­யான செய்தி இல்லை. ஆத­லால் மற்ற நாடு­க­ளின் சந்­தை­கள் மிக­வும் கீழே இறங்­கின.

காலாண்டு முடி­வு­கள்

ஸ்டேட் பாங்க், ஹெ.டி.எப்.சி., ஆகிய கம்­பெ­னி­கள் சென்ற வரு­டம் இதே காலாண்டை விட அதி­கம் லாபம் சம்­பா­தித்­துள்­ளன.

பாரதி ஏர்­டெல் இந்த காலாண்­டில் நஷ்­டம் அடைந்­தி­ருந்­தா­லும், மார்­ஜின் கூடி­யி­ருப்­ப­தால் சந்­தை­யில் இந்த கம்­பெ­னி­யின் 5 சத­வீ­தம் கூடி முடி­வ­டைந்­தன.

என்ன பங்­கு­கள் வாங்­க­லாம்?

ஹெடில்­பர்க் சிமெண்ட், சோழ­மண்­ட­லம் பைனான்ஸ் அண்ட் இன்­வஸ்­மெண்ட், வினாதி ஆர்­கா­னிக்ஸ் ஆகிய பங்­கு­கள் உங்­கள் போர்ட்­போ­லி­யோ­வில் இருக்­க­லாம்.

அடுத்த வாரம் எப்­படி இருக்­கும்?

அடுத்த வாரம் சந்­தை­கள் மேலும், கீழு­மா­கத்­தான் இருக்­கும். கார­ணம் இன்­னும் விற்­ப­வர்­கள் அதி­க­மாக இருக்­கி­றார்­கள்.  விலை அதி­க­மாக கொடுத்து வாங்­கிய பங்­கு­களை ஆவ­ரேஜ் செய்­ய­லாம் அவை மிட் கேப் இல்­லாத பட்­சத்­தில்.

பொறு­மை­யாக இருக்க வேண்­டிய நேரம் உங்கள் சந்தேகங்களுக்கு

உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.  

ப்ளாக்: sethuramansathappan.blogspot.com.   மொபைல்: 098 204 51259. இந்த தொடரின் பழைய பகுதிகளை படிக்க www.startupfundingsources.com


Trending Now: