வங்கி தலைவர்களுடன் நிதியமைச்சர் இன்று சந்திப்பு * தனியார் துறை வங்கிகளுக்கும் அழைப்பு

05-08-2019 03:21 PM

மத்­திய நிதி­ய­மைச்­சர், நிர்­மலா சீதா­ரா­மன், பொதுத் துறை மற்­றும் தனி­யார் துறை வங்­கி­க­ளின் தலைமை பொறுப்­பில் இருப்­ப­வர்­களை, இன்று சந்­தித்­துப் பேச உள்­ளார்.

இந்த சந்­திப்­பில், வாக­னத் துறை, வீட்­டு­வ­ச­தித் துறை, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் துறை ஆகி­ய­வற்­றுக்கு கடன் வழங்­கு­வது குறித்து, மறு ஆய்வு செய்­யப்­ப­டும் என தெரி­கி­றது. பொது­வாக, நிதி­ய­மைச்­சர், பொதுத் துறை வங்­கி­கள் மற்­றும் நிதி நிறு­வ­னங்­க­ளின் தலை­வர்­க­ளு­டன் மறு ஆய்வு கூட்­டத்தை நடத்­து­வார். ஆனால், இந்த முறை, நிதி­ய­மைச்­சர், நிர்­மலா சீதா­ரா­மன், தனி­யார் துறை­யைச் சேர்ந்­த­வர்­க­ளுக்­கும் அழைப்பு விடுத்­துள்­ளார். இந்­தக் கூட்­டத்­தில், முக்­கிய துறை­க­ளில், கடன் வளர்ச்சி தொடர்­பான விஷ­யங்­கள் மதிப்­பாய்வு செய்­யப்­ப­டும் என தெரி­கி­றது.

அதா­வது, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள், வாக­னத் துறை, வீட்­டு­வ­ச­தித் துறை, சில்­லரை விற்­பனை துறை, வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­றின் கடன் வளர்ச்சி குறித்து அல­சப்­ப­டும். மேலும், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி விகி­தத்தை அதி­க­ரிப்­ப­தற்­காக, வங்கி துறை­யில் முன்­னு­ரிமை கொடுக்க வேண்­டிய விஷ­யங்­கள் குறித்­தும் ஆலோ­சிக்­கப்­ப­டும் என தெரி­கி­றது.

இது குறித்து, நிதி­ய­மைச்­ச­கத்­தைச் சேர்ந்த அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:வழக்­க­மாக, பொதுத் துறை வங்­கி­க­ளின் தலை­வர்­கள் மட்­டும் அழைக்­கப்­ப­டு­வார்­கள். ஆனால், இம்­முறை தனி­யார் வங்கி தலை­வர்­க­ளும் அழைக்­கப்­பட்­டுள்­ள­னர்.அது­மட்­டு­மின்றி, இம்­முறை, வரு­வாய் துறை மற்­றும் கார்ப்­ப­ரேட் விவ­கா­ரத் துறை ஆகி­ய­வற்­றின் செய­லர்­க­ளும் கூட்­டத்­தில் கலந்­து­கொள்ள இருக்­கி­றார்­கள்.

மேலும், நிதி­ய­மைச்­சர், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் தொடர்­பான, யு.கே.சின்ஹா குழு­வின் அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்ள பரிந்­து­ரை­கள் குறித்து, பிற அமைச்­ச­கங்­க­ளின் பிர­தி­நி­தி­க­ளு­டன், ஒரு கூட்­டத்­தை­யும் நடத்த திட்­ட­மிட்­டுள்­ளார்.யு.கே.சின்ஹா குழு, கடந்த ஜூன் மாதத்­தில், தனது அறிக்­கையை அர­சி­டம் சமர்ப்­பித்­தது.  

அந்த அறிக்­கை­யில், நாட்­டில் மிகப்­பெ­ரிய அள­வில் வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்­கும், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் துறைக்கு, நுாற்­றுக்­கும் மேற்­பட்ட பரிந்­து­ரை­கள் வழங்­கப்­பட்டு உள்­ளன.கடன், பங்கு நிதி, தொழில்­நுட்­பம், சந்­தைப்­ப­டுத்­து­தல், பணம் செலுத்­து­வ­தில் உள்ள தாம­தங்­கள், நிறு­வன ஏற்­பா­டு­கள், சட்ட மாற்­றங்­கள், கிரா­மப்­புற நிறு­வ­னங்­கள், இடர் குறைப்பு என பல்­வேறு விஷ­யங்­கள் குறித்­தான பரிந்­து­ரை­களை, சின்ஹா குழு வழங்கி உள்­ளது.

குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள், அவற்­றின் போட்­டித்­தன்­மையை அதி­க­ரிக்­கும் வகை­யில், அவற்­றுக்­காக, அரசு, தனியே நிதியை ஏற்­ப­டுத்­த­வேண்­டும் என­வும் பரிந்­து­ரை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.எனவே, இந்த பரிந்­து­ரை­களை செயல்­ப­டுத்­து­வ­தற்கு, ஒருங்­கி­ணைப்பு அவ­சி­யம் என்­ப­தால், பல்­வேறு துறை­க­ளைச் சேர்ந்த அமைச்­ச­கங்­க­ளின் பிர­தி­நி­தி­களை, நிதி­ய­மைச்­சர் சந்­திக்க இருக்­கி­றார். இந்த சந்­திப்­பு­கள் ஒரு­பு­ற­மி­ருக்க, அவ­சர பொரு­ளா­தார பிரச்­சி­னை­கள் குறித்­தும், பட்­ஜெட் அறி­விப்­பு­களை அமல்­ப­டுத்­து­வது குறித்­தும், தனது அமைச்­ச­கத்­தின் கீழ் உள்ள துறை­க­ளின் செய­லர்­க­ளு­டன், தின­மும் சந்­திப்­பு­களை மேற்­கொண்டு வரு­கி­றார், நிதி­ய­மைச்­சர்.

இன்று நடக்க இருக்­கும் சந்­திப்­பில், பல பிரச்­னை­களை சமா­ளிப்­பது குறித்து, முக்­கி­ய­மான சில முடி­வு­கள் எடுக்­கப்­ப­டும் என அனை­வ­ரும் எதிர்­பார்க்­கி­றார்­கள்.இவ்­வாறு, அந்த அதி­காரி தெரி­வித்­தார்.Trending Now: