ஒரு பேனாவின் பயணம் – 219 – சுதாங்கன்

05-08-2019 03:05 PM

மற்­ற­வர் சொல்­வ­தும் சரி­யாக இருக்­க­லாம். ஒரு மரத்­தில் ஒரு பூவைப் பார்க்­கி­றோம். அத­னால் மரத்­தைப் பூ என்று சொல்­ல­லாமா? அதே மரத்­தில் ஒரு­வன் இலை­யை­யும் இன்­னொ­ரு­வன் அடி­ம­ரத்­தை­யும் பார்க்­கி­றான். ஒவ்­வொ­ரு­வ­ரும் மரத்­தின் ஒரு பாகத்தை பார்த்­தி­ருக்­கி­றார்­கள். ஒவ்­வொ­ரு­வ­ரும் மரத்­தைப் பூ, இலை, அடி­ம­ரம் என்று கூறி ஒரு­வ­ரோ­டொ­ரு­வர் சண்­டை­யிட்­டுக் கொண்­டால் அது அறி­வு­டை­மை­யா­குமா?

 அடுத்த உல­கத்­தைப் பற்­றிய கவலை எனக்கு இல்லை. இவ்­வு­ல­கத்­தில் என்ன செய்ய வேண்­டு­மென்­ப­தைப் பற்­றிய சிந்­த­னையே என் மன­தில் நிறைந்­தி­ருக்­கி­றது. இங்கு நான் செல்ல வேண்­டிய வழி எனக்கு தெளி­வா­கத் தெரிந்­தால் போதும். இம்­மை­யில் எனது கட­மையை  சரி­வர ஆற்­றி­னால் மறு­மை­யைப் பற்றி எனக்­கேன் கவலை?

 உனக்கு வயது வந்­தால் நீ பல­வ­கைப்­பட்ட மனி­தர்­க­ளைச் சந்­திக்க நேரி­டும். மதப்­பற்­று­டை­ய­வர்­கள், மதத்தை எதிர்ப்­ப­வர்­கள், இரண்­டும் செய்­யா­மல் அலட்­சி­ய­மா­யி­ருப்­ப­வர்­கள் எல்­லோ­ரை­யும் பார்க்­க­லாம். மிகுந்த செல்­வ­மும் அதி­கா­ர­மும் படைத்த பெரிய தேவா­ல­யங்­க­ளும், மதஸ்­தா­ப­னங்­க­ளும் இருக்­கின்­றன. சில வேளை­க­ளில் தீய காரி­யங்­க­ளுக்­கும் சில வேளை­க­ளில் நல்ல காரி­யங்­க­ளுக்­கும் அவை உப­யோ­கப்­ப­டு­கின்­றன. மதப்­பற்று கொண்ட உத்­தம பெரி­யோரை கண்­பாய், மதத்­தின் பெய­ரால் மக்­களை வஞ்­சித்­துப் பொருள் பறிக்­கும் வேட­தா­ரி­க­ளை­யும் அயோக்­கி­யர்­க­ளை­யும் காண்­பாய். இவ்­வி­ஷ­யங்­க­ளைப் பற்றி நீயே ஆலோ­சித்து ஒரு முடி­வுக்கு வர­வேண்­டும். ஒரு­வன் பிற­ரி­ட­மி­ருந்து எவ்­வ­ளவோ கற்­க­லாம். ஆனால் முக்­கி­ய­மான உண்மை எதை­யும் அவன் தன் சொந்த அனு­ப­வத்­தி­லேயே கண்டு அறி­ய­வேண்­டும். சில பிரச்­னை­கள் இருக்­கின்­றன. அவற்­றிற்­கு­ரிய விடை­களை ஒரு­வன் தனக்­குத்­தானே கண்­டு­பி­டித்­துத் தீர­வேண்­டும்.

 அவ­ச­ரப்­பட்டு ஒரு முடி­வுக்கு வராதே. பெரிய அல்­லது முக்­கி­ய­மான ஒரு முடி­விற்கு வரு­முன்பு அதற்­குத் தகுந்த அறி­வை­யும் பயிற்­சி­யை­யும் நீ பெற்­றி­ருக்க வேண்­டும். தாங்­களே சிந்­தித்­துத் தாங்­களே ஒரு முடி­வுக்கு வரு­வது நல்­ல­து­தான். ஆனால் அவ்­வாறு முடி­வுக்கு வரக்­கூ­டிய சக்­தியை முன்பே தேடிக் கொள்ள வேண்­டும். புதி­தாக பிறந்த ஒரு குழந்­தையை எதை­யா­வது முடிவு கட்­ட­வி­ட­லாமா?  இம்­மா­திரி மனி­தர்­க­ளில்  பலர் வய­தில் பெரி­ய­வர்­க­ளா­னா­லும், அறிவு வளர்ச்­சி­யில் அனே­க­மா­கக் குழந்­தைக்­குச் சமா­ன­மா­ன­வர்­க­ளா­யி­ருந்­தால்?

 நான் இன்று வழக்­க­மாக எழு­து­வதை விட நீண்ட கடி­தம் எழு­தி­விட்­டேன். அது சுவா­ரஸ்­ய­ மற்­ற­தா­க­வும் இருக்­க­லாம். ஆனால் இவ்­வி­ஷ­யத்­தைப் பற்றி நான் நினைப்­பதை சிறிது சொல்ல விரும்­பி­னேன். இப்­போது உனக்கு ஒன்­றும் புரி­யா­விட்­டா­லும் பாத­க­மில்லை. சீக்­கி­ரத்­தில் தெரிந்து கொள்­ள­லாம்.

ஜன­வரி 21, 1931

 உன்­னு­டைய கடி­தம் இன்று கிடைத்­தது. உன் அம்­மா­வும் நீயும் சுக­ம­டைந்து வரு­கி­றீர்­கள் என்­பதை அறிய ஆறு­த­லா­யி­ருக்­கி­றது. அதே போல் உன் தாத்­தா­வுக்­கும் ஜுரம் குண­ம­டைந்து ஆர் உடல் நல­மு­ற­வேண்­டு­மென்று விரும்­பு­கி­றேன். அவர் தம் வாழ்­நாள் முழு­வ­தும் கஷ்­டப்­பட்டு உழைத்­தி­ருக்­கி­றார். இந்த வயது முதிர்ந்த நிலை­யி­லும் அவ­ருக்கு ஓய்வோ அமை­தியோ இல்லை.

நீ நூல் நிலை­யத்­தி­லி­ருந்து ஏரா­ள­மான புத்­த­கங்­களை வாசித்­தி­ருப்­ப­தா­க­வும், இன்­னும் படிப்­ப­தற்கு வேறு புத்­த­கங்­க­ளின் பெயர்­க­ளைச் சொல்­லும்­ப­டி­யும் நீ எழு­தி­யி­ருக்­கி­றாய். ஆனால், நீ என்­னென்ன புத்­த­கங்­கள் படித்­தாய் என்­ப­தைச் சொல்­ல­வில்லை. புத்­த­கங்­கள் படிப்­ப­தென்­பது நல்ல வழக்­கம்­தான். ஆனால், அதி­க­மாக புத்­த­கங்­க­ளைக் கொஞ்ச காலத்­தில்  படித்து முடிப்­ப­வர்­க­ளைக் கண்­டால் எனக்கு சந்­தே­கம் உண்­டா­கி­றது. அவர்­கள் ஒன்­றை­யும் சரி­யா­கப் படிக்­கா­மல் மேம்­போக்­கா­கப் பார்த்­து­விட்டு மறு­நாளே மறந்து விடு­கி­றார்­கள் என்று ஐயு­று­கின்­றேன். ஒரு புத்­த­கம் படிப்­ப­தற்­குத் தகு­தி­யு­டை­ய­தென்­றா­அல் அதைச் சிறிது கவ­னத்­தோடு முழு­மை­யாக கற்­ப­து­தான் முறை­யா­கும். ஆனால் படித்த வேண்­டாத புத்­த­கங்­கள் பல இருக்­கின்­றன. நல்ல புத்­த­கங்­க ­ளைப் பொறுக்கி எடுப்­ப­தும் எளி­தான காரி­ய­மல்ல. நமது நூல் நிலை­யத்­தி­லி­ருந்து புத்­த­கங்­களை எடுத்து வாசித்­தால் அவை நல்­ல­வை­யா­கத்­தான் இருக்க வேண்­டும். இல்­லா­விட்­டால் அவை நூல் நிலை­யத்­தில் இடம்­பெற்­றி­ராது என்று நீ சொல்­ல­லாம். நல்­லது. நீ படித்­துக் கொண்டே இரு. நான் நைனி சிறை­யி­லி­ருந்து என்­னா­லான உத­வி­யைச் செய்­கி­றேன். அதி­வே­கத்­து­டன் கூடிய உனது உடல் வளர்ச்­சி­யை­யும் அறிவு வளர்ச்­சி­யை­யும் பற்றி நான் அடிக்­கடி நினைப்­ப­ துண்டு. உன்­னு­டன் இருக்­க­வேண்­டு­மென்று நான் எவ்­வ­ளவு விரும்­பு­கி­றேன் தெரி­யுமா? நான் இப்­போது உனக்கு எழு­திக் கொண்­டி­ருக்­கும் இக்­க­டி­தங்­கள் உன்­னி­டம்  சேரு­கின்ற காலத்­தில் நீ இவற்­றின் தரத்­துக்கு மீறிய வளர்ச்சி அடைந்­தா­லும் அடைந்­து­வி­ட­லாம். அப்­போது சந்­தி­ர­லேகா ( இந்­திரா காந்­தி­யின் அத்தை மகள்) இவற்­றைப் படிக்­கத்­தக்க பரு­வத்தை அடைந்­து­வி­டு­வாள் என்று நினைக்­கி­றேன். ஆகவே இவற்­றைப் படித்து அனு­ப­விப்­ப­தற்கு யாரா­வது ஒரு­வர் இருப்­பார்.

 பழைய கிரீ­சுக்­கும், பார­சீ­கத்­துக்­கும் திரும்­பிச் சென்று அவற்­றுக்­குள் நடந்த சண்­டை­க­ளைச் சிறிது கவ­னிப்­போம். நமது கடி­தங்­கள் ஒன்­றில் கிரேக்க நகர – ராஜ்­ஜி­யங்­க­ளைப் பற்­றி­யும் டிரை­யஸ் என்று கிரேக்­கர்­க­ளால் அழைக்­கப்­பட்ட ஓர் அர­ச­னின் கீழி­ருந்த பார­சீக சாம்­ராஜ்­ஜி­யத்­தைப் பற்­றி­யும் பேசி­யி­ருக்­கி­றோம். இந்த சாம்­ராஜ்­ஜி­யம் விஸ்­தீ­ர­ணத்­தில் மட்­டு­மன்றி அமைப்பு முறை­யி­லும் பெரி­தாக விளங்­கி­யது. சின்ன ஆசி­யா­வி­லி­ருந்து சிந்து நதி­வ­ரை­யில் அது பர­வி­யி­ருந்­தது. எகிப்து சின்ன ஆசி­யா­வி­லி­ருந்த சில கிரேக்க நக­ரங்­க­ளும் அதன் பாகங்­க­ளாக விளங்­கின. இந்­தப் பெரிய சாம்­ராஜ்­ஜி­யத்­தில் குறுக்­கும் நெடுக்­கு­மாக பல நல்ல சாலை­கள் அமைக்­கப்­பட்டு அவற்­றின் வழி­யாக அர­சாங்க தபால் போக்­கு­வ­ரத்து ஒழுங்­காக நடை­பெற்று வந்­தது.  என்ன கார­ணத்­தி­னாலோ கிேரக்க நகர ராஜ்­ஜி­யங்­களை ஜெயிக்க வேண்­டு­மென்று டிரை­யஸ் எண்­ணி­னான். இந்த யுத்­தத்­தில் சில சரித்­தி­ரப் பிர­சித்தி பெற்ற சண்­டை­கள் நிகழ்ந்­தன.

 இந்­நி­கழ்ச்­சி­க­ளுக்கு சிறிது பின்பு வாழ்ந்த ஹெர­டோ­டஸ் (Herodotus)  என்­னும் கிரேக்க

சரித்­தி­ரா­சி­ரி­யர் இந்த போர்­க­ளைப் பற்றி எழுதி வைத்­தி­ருக்­கி­றார்.  கிரேக்­கர்­கள் மீதுள்ள அபி­மா­னத்­தி­னால் ஒரு­த­லைப்­பட்­ச­மாக எழு­தி­யி­ருந்­தா­லும், அவர் எழு­தி­யி­ருக்­கும் வர­லாறு மிக­வும் சுவை­யு­டை­ய­தாக இருக்­கி­றது. இக்­க­டி­தங்­க­ளில் அவர் எழு­திய சரித்­தி­ரத்­தி­லி­ருந்து சில பகு­தி­களை எடுத்­துக் காட்­டு­கி­றேன்.

கிரீ­சின் மீது பார­சீ­கர்­கள் முதல் தடவை படை­யெ­டுத்த போது அவர்­க­ளு­டைய சேனை உண­வின்­மை­யா­லும் நோய்­வாய்ப்­பட்­ட­த­னா­லும் தோற்­றுப் போய்­விட்­டது. கிரீ­சுக்கு போகு­முன்பே அது திரும்ப நேரிட்­டது. கிமு. 490ம் ஆண்­டில் இரண்­டா­வது தாக்­கு­தல் நிகழ்ந்­தது. இந்த தடவை பார­சி­கப் படை தரை மார்க்­கத்தை விடுத்­துக் கடல் மார்க்­க­மா­கச் சென்று ஏதென்­சுக்­க­ரு­கி­லுள்ள மார­தான் ( Marathon)  என்­னு­மி­டத்­தில் இறங்­கி­யது. பார­சீக சாம்­ராஜ்­ஜி­யத்­தின் கீர்த்தி பெரி­தா­யி­ருந்­த­ப­டி­யால் இதைக் கண்டு ஏதென்சு நகர மாந்­தர்­கள் அதி­க­மான பீதியை அடைந்­தார்­கள். அதன் கார­ண­மாக அவர்­கள் தங்­க­ளு­டைய பழைய விரோ­தி­க­ளா­கிய ஸ்பார்ட்ட நக­ரத்­தா­ரோடு (Spartans)  சமா­தா­னம் செய்து கொண்டு இரு­வ­ருக்­கும் பொது­வான எதி­ரி­யைத் தாக்­கு­வ­தற்கு அவர்­கள் உதவி செய்ய வேண்­டு­மென்று கேட்­டார்­கள். ஆனால், ஸ்பார்ட்­டா­வி­லி­ருந்து உதவி வரு­முன்பே ஏதென்சு நக­ரத்­தார் பாரrP­­கப்­ப­டை­யைத் தோற்­க­டித்­து­விட்­டார்­கள். கி.மு. 490ல் மார­தான் என்­னு­மி­டத்­தில் நடந்த கீர்த்தி வாய்ந்த போரா­கும் இது.

 ஒரு சிறிய கிரேக்க நகர – ராஜ்­ஜி­யம்  பெரிய சாம்­ராஜ்­ஜி­யத்­தின் சேனையை வெல்­வ­தென்­பது ஆச்­ச­ரி­ய­மா­கத் தோன்­று­கி­றது. ஆனால் இதில் அவ்­வ­ளவு ஆச்­ச­ரி­யம் ஒன்­று­மில்லை. கிரேக்­கர்­கள் தக்­கள் நாட்­டைக் காப்­பாற்­று­வ­தற்­குத் தங்­கள் நாட்­டுக்­க­ரு­கி­லேயே போரிட்­டார்­கள். பார­சீக சேனையோ தன் நாட்டை விட்டு வெகு தூரத்­துக்கு அப்­பால் வந்து போரிட வேண்­டி­யி­ருந்­தது. பார­சீக சாம்­ராஜ்­ஜி­யத்­தின் பல பாகங்­க­ளி­லும் உள்ள சேனா­வீ­ரர்­க­ளைக் கொண்­டி­ருந்­தது அப்­படை. அவர்­கள் கூலிக்­குப் போரிட்­டார்­கள். கிரீசை ஜெயிக்க வேண்­டு­மென்­று­கிற அக்­கறை அவர்­க­ளுக்கு இல்லை. இதற்கு மாறாக, ஏதென்சு நக­ரத்­தார் தங்­கள் சுதந்­தி­ரத்­துக்­காக போரிட்­டார்­கள். சுதந்­தி­ரத்தை இழப்­பதை விட உயிைர இழப்­பது மேல் என்று அவர்­கள் கரு­தி­னார்­கள். ஒரு காரி­யத்­துக்­காக உயிரை விடத் துணிந்­த­வர்­கள் தோல்வி அடை­வ­தென்­பது மிக­வும் அபூர்­வம்.

 ஆகவே, மார­தா­னில் டிரை­யஸ் தோல்­வி­ய­டைந்­தான். பிறகு அவன் பார­சீ­கத்­தில் இறந்து போனான். அவ­னுக்­குப் பின் செர்க்­சிஸ் (xerxes)  என்­ப­வன் பட்­டத்­துக்கு வந்­தான்.  இவ­னுக்கு கிரீசை ஜெயிக்க வேண்­டு­மென்ற ஆசை இருந்­தது. இதற்­காக இவன் ஒரு சேனை­யைத் தயார் செய்­தான். இங்கு ஹெர­டோ­டஸ் தன் ஆச்­ச­ரி­ய­மான கதை­யைச் சொல்­லும் விதத்தை உனக்­குத் தெரி­விக்­கி­றேன். செர்க்­சிஸ் என்­ப­வ­னுக்கு ஆர்ட்­டா­பே­னஸ் என்­னும் பெயர் கொண்ட மாமன் ஒரு­வன் இருந்­தான். பார­சீக சேனை கிரீ­சுக்­குப் போவ­தில் ஆபத்து இருக்­கி­ற­தென்று நினைத்து கிரீ­சு­டன் செர்க்­சிஸ் போரிட வேண்­டா­மென்று அவன் சொல்­லிப் பார்த்­தான். அவ்­வாறு சொல்­லிய தன் மாம­னுக்­குக் கீழ்க்­கண்­ட­வாறு செர்க்­சிஸ் மறு­மொழி புகன்­ற­தாக ஹெர­டோ­டஸ் சொல்­லு­கி­றார்.

 ` நீ சொல்­வ­தில் நியா­யம் இருக்­கி­றது. ஆனால் எங்­கும் ஆபத்­தைக் கண்டு என்ன நஷ்­டம் நேரும் என்று கணக்கு போட்­டுக்­கொண்­டி­ருக்­கக்­கூ­டாது. வரு­வது எதை­யும் தரா­சில் நிறுப்­பது போல் நிறுத்­தப் பார்த்­துக் கொண்­டி­ருந்­த­தால் கடை­சி­யில் ஒன்­றுமே செய்ய முடி­யாது. ஒரு கஷ்­ட­மும் அனு­ப­விக்­கா­மல் சதா என்ன நேருமோ என்று பயந்து சாவ­தைக் காட்­டி­லும் நன்மை உண்­டா­கும் என்­கிற எண்­ணத்­து­டன் செயல்­பு­ரிந்து அதில் பாதி கஷ்­டத்தை அனு­ப­விப்­பது எப்­போ­தும் மேலா­கும். இன்ன வழி­யில் போக வேண்­டு­மென்று சொல்­லா­மல் எங்­க­ளு­டைய யோசனை ஒவ்­வொன்­றை­யும் நீ சரி­யல்ல என்று சொல்­லிக் கழித்து வந்­தால் நமது எதி­ரி­க­ளைப் போலவே நாமும் துன்­ப­ம­டைய வேண்­டி­ய­து­தான். வெற்றி – தோல்­விக்­கான கார­ணங்­கள் தரா­சின் தட்­டு­க­ளைப் போல் சம­மா­யி­ருக்­கின்­றன. அவை எந்த பக்­கம் சாயும் என்­பதை மனி­தன் அறிய முடி­யுமா? முடி­யாது. ஆனால், பொது­வாக வெற்றி செய­லுக்­குண்டு விதி­யின் நிய­மம் என்று கற்­றுத் தெரிந்­தி­ருக்­கி­றோம். பயந்து பயந்து எதை­யும் நிறுத்தி பார்ப்­ப­வர்­க­ளுக்கு வெற்றி என்­பது இல்லை. பார­சீ­கம் அள­வற்ற ஆற்­றல் வாய்ந்­தி­ருப்­பதை நீ பார்க்­கி­றாய். எனக்கு முன்பு பார­சீக சிம்­மா­ச­னத்­தில் வீற்­றி­ருந்­த­வர்­கள் உங்­க­ளைப் போன்ற கொள்­கை­களை உடை­ய­வர்­க­ளாக இருந்­தா­லும் சரி அல்­லது அக்­கொள்­கை­கள் அவர்­க­ளுக்கு இல்­லா­மல் உன்­னைப் போல் ஆலோ­ச­னை­யா­ளர்­கள்  அவர்­க­ளுக்கு இருந்­தி­ருந்­தா­லும் சரி, நமது ராஜ்­ஜி­யம் இவ்­வ­ளவு பெரி­தாக இன்று விளங்க முடி­யாது. அவர்­கள் அபா­யங்­க­ளுக்கு அஞ்­சா­மல் செயல்­பு­ரிந்த கார­ணத்­தால் நாம் இன்­றுள்ள நிலை­யில் இருக்­கி­றோம் பெரிய அபா­யங்­க­ளில் மூல­மா­கத்­தான் பெரிய வெற்­றி­க­ளை­யும் அடைய முடி­யும்.

 இவ்­வ­ளவு நீண்ட பகு­தியை அப்­ப­டியே சொன்­ன­தற்­குக் கார­ணம் வேறு எந்த வர­லாற்­றை­யும் விட இது அப்­பா­ர­சீக மன்­ன­னின் உள்­ளத்தை நாம் நன்கு அறிந்து கொள்ள உத­வி­யா­யி­ருப்­ப­தே­யா­கும். ஆனால் நடந்­தது என்­ன­வென்­றால் ஆர்ட்­டா­பேன்ஸ் பயந்து சரி­யா­கப் போயிற்று. கிரீ­சில் பார­சீக சேனை தோல்வி அடைந்­தது. செர்க்­சிஸ் தோற்­றான். ஆனால் அவன் அன்று சொன்ன சொற்­கள் இன்­றும் உண்­மை­யாக இருக்­கின்­றன. அவை நமக்கு  ஒரு பாடத்­தை­யும் கற்­பிக்­கின்­றன. இன்று நாம் பெருங்­கா­ரி­யங்­களை சாதிக்க முயன்று கொண்­டி­ருக்­கி­றோம். நமது லட்­சி­யத்தை அடை­யு­முன்பு நாம் பெரிய அபா­யங்­க­ளைக் கடந்து செல்ல வேண்­டும் என்­பதை நினை­வில் வைப்­போ­மாக.

 மன்­னர் மன்­ன­னா­கிய செர்க்­சிஸ் தனது பெரிய சேனை­யைச் சின்ன ஆசியா வழி­யாக நடத்­திச் சென்று டார்­ட­னஸ் ஜல­சந்தி (அக்­கா­லத்­தில் அது ஹெல்­லஸ் பாண்ட் அதா­வது கிரேக்க சமுத்­தி­ரம் என்று அழைக்­கப்­பட்­டது)  யை கடந்து ஐரோப்­பா­வுக்­குள் பிர­வே­சித்­தான். போகும் வழி­யில் கிரேக்க வீரர்­கள் ஜெலன் என்­னும் தங்­கள் தேசத்து அழ­கியை மீட்­ப­தற்­குப் போரிட்ட இட­மா­கிய திராய் நக­ரின் அழி­வு­க­ளைக் காண்­ப­தற்கு செர்க்­சிஸ் அங்கே சென்­றான் என்று கூறப்­ப­டு­கி­றது. ஹெல்­லஸ் பாண்­டைக் கடந்து சேனை செல்­வ­தற்­காக வேண்டி, அதற்­குக் குறுக்கே ஒரு பெரிய பாலம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. பார­சீக சேனை அதன் மீது சென்­ற­போது அரு­கி­லி­ருந்த ஒரு குன்­றின் உச்­சி­யில் சல­வைக் கல்­லால் செய்­யப்­பட்ட சிம்­மா­ச­னத்­தின் மீது வீற்­றி­ருந்து பார்ை­வ­யிட்­டான் செர்க்­சிஸ். மேல் நிகழ்ந்­ததை ஹெர­டோ­டஸ் வார்த்­தை­க­ளில் கேட்­போம்.

 ` ஹெல்­லஸ் பாண்ட் முழு­மை­யும் தன் கப்­பல்­கள் மொய்த்து நிற்­ப­தை­யும், கடற்­க­ரை­யி­லும் அபி­டாஸ் சம­வெ­ளி­யி­லும் தன் போர் வீரர்­கள் நிறைந்­தி­ருப்­ப­தை­யும் கண்டு செர்க்­சிஸ் தான் பாக்­கி­ய­வான் என்று சொன்­னான். பிறகு அவன் அழ ஆரம்­பித்­து­விட்­டான். அவன் அழு­வ­தைப் பார்த்து அவ­னு­டைய மாம­னா­கிய ஆர்ட்­டா­பே­னஸ் – கிரேக்­கர்­கள் மீது படை­யெ­டுத்­துச் செல்­ல­வேண்­டா­மென்று முன்பு தைரி­ய­மாக ஆலோ­சனை கூறிய ஆர்ட்­டா­பே­னஸ் ` ஓ அர­சனே! நீ இப்­போது செய்­யும் காரி­ய­மும் சற்று முன்பு செய்த காரி­ய­மும் ஒன்­றுக்­கொன்று எவ்­வ­ளவு வேற்­றுமை உடை­ய­ன­வா­யி­ருக்­கின்­றன. பாக்­கி­ய­வான் என்று உன்னை சொல்­லிக்­கொண்ட நீ இப்­போது கண்­ணீர் சிந்­து­கி­றாயே?’ என்று கேட்­டான். செர்க்­சிஸ் அதற்கு விடை­யாக, `ஆமாம் நான் எல்­லா­வற்­றை­யும் எண்­ணிப் பார்த்த பிறகு மனி­த­னு­டைய வாழ்­நாள் எவ்­வ­ளவு குறு­கி­யது என்­பதை நோக்க என் மனத்­தில் இரக்­கம் உண்­டா­யிற்று. இங்கு காணப்­ப­டும் இச்­சேனை வெள்­ளத்­திலே ஒரு­வன் கூட நூறு வரு­டங்­க­ளுக்­குப் பின் உயி­ரு­டன் இருக்­கப் போவ­தில்­லையே’ என்று கூறி­னான்.

 ஆகவே, அப்­பெ­ரிய சேனை நிலத்­திலே முன்­னே­றிச் சென்­றது.

(தொட­ரும்)Trending Now: