பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 4 –8–19

31-07-2019 05:27 PM

இந்­திய விஞ்­ஞா­னி­கள் சாதித்­தி­ருக்­கும் உல­கம் வியக்­கும் சாத­னையை ஊட­கங்­கள் அதி­க­மாக பேசு­வ­தில்லை. நில­விற்கு இந்­திய விஞ்­ஞா­னி­கள் சந்­தி­ர­யான் செயற்­கைக்­கோளை அனுப்­பி­யி­ருக்­கி­றது. அது நில­வில் உல­வத் தொடங்­கி­ய­தி­லி­ருந்து பல தக­வல்­களை அனுப்­பிக்­கொண்­டே­யி­ருக்­கி­றது.

 பல பிர­மிக்­கத்­தக்க தக­வல்­கள் வந்து கொண்­டே­யி­ருக்­கின்­றன.  நில­வின் தென் துரு­வத்­தில் முன்பு கணித்­த­தை­விட அதிக அளவு உறைந்த நிலை­யி­லான நீர் இருக்க வாய்ப்­பி­ருப்­ப­தாக இப்­போது நம் விஞ்­ஞா­னி­கள் கணித்­தி­ருக்­கி­றார்­கள். அப்­ப­கு­தியை நோக்கி விரைந்து கொண்­டி­ருக்­கும்  சந்­தி­ர­யான் -2 விண்­க­லம் இதை உறுதி செய்­தால் அறி­வி­யல் துறை­யில் இது மிகப்­பெ­ரிய திருப்­பு­மு­னை­யாக இருக்­கும்.

 சந்­தி­ர­யான் -2  விண்­க­லம் சென்ற மாதம்  2ம்தேதி விண்­ணில் ஏவப்­பட்­டது.  புவி­சுற்று வட்­டப் பாதை­யில்  விண்­க­லத்­தின் நிலையை சீராக உயர்த்­தும் பணியை  இந்­திய விண்­வெளி ஆராய்ச்சி மையத்தை ( இஸ்ரோ) சேர்ந்த விஞ்­ஞா­னி­கள் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.  இந்­தி­யா­வில், மகா­ராஷ்­டிரா மாநி­லம் மும்­பை­யி­லுள்ள டாடா  ஆராய்ச்சி நிறு­வ­னத்­தின் பேரா­சி­ரி­யர்  சுதீப் பட்­டா­சா­ரியா இது பற்றி ஒரு அறிக்கை வெளி­யிட்­டுள்­ளார்.  நில­வின் தென் துரு­வத்­தில்  பல ஆண்­டு­க­ளாக சூரி­ய­னின் ஒளி படாத  பகு­தி­கள் காணப்­ப­டு­கின்­றன. எனவே, அப்­ப­கு­தி­க­ளில் மிகக் குறைந்த  அள­வி­லான வெப்ப நிலையே காணப்­ப­டும். பல்­வேறு சிறப்­புக் கரு­வி­க­ளின் துணை­கொண்டு நில­வின் தென்­து­ரு­வப்  பகு­தி­யில் மைனஸ்  233 டிகிரி செல்­ஷி­யஸ் வெப்­ப­நிலை நில­வு­வ­தாக  விஞ்­ஞா­னி­கள் கணித்­துள்­ள­னர்.

முக்­கி­ய­மாக அப்­ப­கு­தி­யில்  பல கி.மீ. சுற்­ற­ள­வி­லான பெரும்­பள்­ளங்­கள் காணப்­ப­டு­கின்­றன. மிகக் குறைந்த வெப்ப நிலை கார­ண­மாக அப்­பெ­ரும்­பள்­ளங்­க­ளின் நீரா­னது  உறைந்த நிலை­யில் காணப்­பட்ட வாய்ப்­பி­ருக்­கி­றது.  நீரு­டன் மற்ற கனி­மங்­கள் சில காணப்­ப­ட­வும் வாய்ப்­பி­ருப்­ப­தாக பட்­டாச்­சா­ரியா தெரி­விக்­கி­றார்.

 நில­வின் தென்­து­ரு­வப் பகு­தி­யில்  சுமார் 12 ஆயி­ரம் பெரும்­பள்­ளங்­கள் காணப்­ப­டு­வ­தாக நாசா விஞ்­ஞா­னி­கள் கண்­ட­றிந்­துள்­ள­னர்.  அமெ­ரிக்­கா­வின் லாஸ் ஏஞ்­சல்­சி­லுள்ள  கலி­போர்­னியா பல்­க­லைக்­க­ழ­கத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாண­வர்­கள்  மேற்­கொண்ட ஆய்­வில், நில­வின் மையப் பகு­தி­யி­லி­ருந்து தென் துரு­வத்தை நோக்கி செல்­லு­கை­யில், பெரும்­பள்­ளங்­க­ளின் ஆழம் குறைந்து வரு­வ­தாக கண்­ட­றிந்­துள்­ள­னர்.  தென் துரு­வப் பகு­தி­யில் அதிக அள­வி­லான நீரா­னது உறைந்த நிலை­யின் காணப்­ப­டு­வ­தன் கார­ண­மாக  பெரும் பள்­ளங்­க­ளின் ஆழம் குறை­வ­தா­க­வும் அவர்­கள் கணித்­துள்­ள­னர்.

 நில­வின் தென் துரு­வத்­தைப் பற்­றிய பல்­வேறு ஆய்வு முடி­வு­கள்  வெறும் கணிப்­புக்­க­ளா­கவே உள்­ளன.  அப்­ப­கு­தியை நோக்­கிய தனது 48 நாள் பய­ணத்தை சந்­தி­ர­யான் 2 தொடங்கி­ யுள்­ளது  விண்­க­லத்­தி­லுள்ள `லேண்­டரை’ நில­வின் தென் துரு­வத்­தில்  மெது­வாக தரை­யி­றக்­கும் முயற்­சியை  வரும் செப்­டம்­பர் 6ம்தேதி­யி­லி­ருந்து 8ம் தேதிக்­குள் இஸ்ரோ விஞ்­ஞா­னி­கள் மேற்­கொள்­ள­வுள்­ள­னர்.  இம்­மு­யற்­சி­யில் விஞ்­ஞா­னி­கள்  வெற்றி பெற்று, `லேண்­டர்’ மற்­றும் ` ரோவர்’ ஆகி­யவை தங்­க­ளது  ஆராய்ச்சி பணி­யைத் தொடங்­கி­னால் நில­வின் தென் துரு­வத்தை பற்­றிய பல கணிப்­பு­ க­ளுக்கு விடை கிடைக்­கும்.

ரசித்­தது!

 ஒரு முக்­கி­ய­மான தக­வலை ரசித்­தேன். அது பய­னுள்­ளது.  கண்­ணாடி அணி­ப­வர்­கள் தெரிந்து கொள்ள வேண்­டி­யது.  கண்­ணில் வரும் கிட்­டப்­பார்வை, தூரப்­பார்வை, என்­பது கண் சம்­பந்­தப்­பட்ட நோயே கிடை­யாது. நாம் கண்­ணாடி அணி­கி­றோம். இந்த கண்­ணா­டி­யின் பவர் நாள் செல்ல செல்ல அதி­க­ரிக்­கி­றதா அல்­லது குறை­கி­றதா?

கண்­டிப்­பாக அதி­க­ரிக்­கி­றது. இதி­லி­ருந்து என்ன புரி­கி­றது? கண்­ணா­டி­யின் பவர் அதி­க­மா­கி­றது என்­றால் கண்­ணின் பவர் குறை­கி­றது என்று அர்த்­தம். பாதி கெட்­டுப் போன கண்ணை முழு­வ­து­மாக கெடுப்­ப­தற்­குக் கண்­ணாடி அணிய வேண்­டுமா?

 இது என்ன மருத்­து­வம்?

கண்­ணில் நோய் வந்­தால் குணப்­ப­டுத்­து­வ­தற்கு வைத்­தி­யர் தேவையா?

 நோயை அதி­கப்­ப­டுத்­து­வ­தற்கு வைத்­தி­யர் தேவையா?

 கிட்­டப் பார்வை, தூரப்­பார்­வையை சரி­செய்ய நமது உட­லுக்கே தெரி­யும். அதற்­குத் தேவை­யான சில பொருட்­கள் ரத்­தத்­தில் கெட்­டுப் போய் உள்­ளன.  இது முதல் கார­ணம். இரண்­டா­வது, கண் சம்­பந்­தப்­பட்ட நோய்­களை குணப்­ப­டுத்த தேவை­யான சில பொருட்­கள் ரத்­தத்­தில் இல்லை.

 மூன்று, ரத்­தத்­தின் அளவு குறை­வாக உள்­ளது.நான்கு, கண் கெட்­டுப் போய் விட்­டது என்று, நம் மனது கெட்­டுப் போய்­விட்­டது. ஐந்து, நம் உட­லி­லுள்ள கண்ணை குணப்­ப­டுத்­தும் அறிவு கெட்­டுப் போய்­விட்­டது. கண்­ணில் வரும் கிட்­டப்­பார்வை, தூரப்­பார்வை, குளூ­கோமோ, புரை மற்­றும் பல நோய்­க­ளுக்­கான மருந்து கண்­ணில் கிடை­யாது.

 ரத்­தத்­தால்­தான் நோய் எதிர்ப்பு மருந்­தும், மாத்­தி­ரை­யும், ஆப­ரே­ஷ­னும், செய்­யா­மல், கண்­ணாடி அணி­யா­மல் கண்­ணில் வரும் நோய்­களை குணப்­ப­டுத்த முடி­யும். அத­னால் நாம் புரிந்து கொள்­ள­வேண்­டி­யது என்­ன­வென்­றால், கண்­ணில் வரும் அனைத்து நோய்­க­ளுக்­கும் கண் கார­ணம் கிடை­யாது. ரத்­தத்­தில்­தான் நோய். அது­தான் மேலே சொல்­லப்­பட்ட கார­ணங்­கள்.

 கண் பார்வை குறை­பாடு நீங்க........

1.முருங்­கைப்­பூ­வு­டன் பசும்­பாலை நன்­றாக  காய்ச்சி காலை, மாலை இரண்டு வேளை­யும் சாப்­பிட்டு வந்­தால் கண்­ணில் ஈரப்­பசை அதி­க­மா­கும். கண் பார்வை குறை­பாடு நீங்­கும்.

2. கண்­ணில் வெள்­ளெ­ழுத்து நோய் உள்­ள­வர்­கள் முருங்­கைப்பூ பொடி­யு­டன் தேன் கலந்து அருந்தி வந்­தால் வெள்­ளெ­ழுத்து மாறும், கண்­ணில் உரு­வா­கும் வெண்­ப­ட­லும் மாறும்.

3.  முருங்­கைப்­பூவை பாலில் வேக­வைத்து – பிறகு அந்த பாலை நன்­றாக வடி­கட்டி சாப்­பிட்டு வந்­தால் கண்­கள் குளிர்ச்சி அடை­யும்.

4. இரவு உண­வுக்­குப் பின் கை, வாய் இவற்றை கழு­விய பின் கண்­ணில் மூன்று துளி­கள் சுத்­த­மான நீரை விட்டு இமை­களை மென்­மை­யாக தேய்த்து சந்­திர தரி­ச­னம் ( நில­வைப் பார்த்­தல்) செய்­தால் மிக­வும் நல்­லது.

5. வாரம் இரு­முறை தலைக்கு எண்­ணெய் தேய்த்து குளிப்­பது நல்­லது.

6. முது­மைக் காலத்­தில் கண்­டிப்­பாக தலைப்­பாகை, செருப்பு அணிந்து நடத்­தல் வேண்­டும்.

7.  இரவு படுக்­கைக்கு செல்­லும் முன் உள்­ளங்­கால்­க­ளில் பசு­நெய்யை நன்­றாக தேய்த்து, அரிசி தவிட்டை நன்­றாக அதன்­மேல் தடவி பின்பு பாதங்­களை பருத்­தி­யி­லான துணி வைத்து கட்டி விட­வும்.

விடி­யற்­காலை எழுந்­த­வு­டன் கட்டை அவிழ்த்து இரு பாதங்­க­ளை­யும் குளிர்ந்த நீரால் கழுவ வேண்­டும்.

8. மதிய உண­வில் பண்­ணைக் கீரை, சிறு­கீரை, பொன்­னாங்­கன்னி கீரை, காரட் சேர்த்­துக் கொள்ள வேண்­டும்.

9. இர­வில் பால் சாதம் சாப்­பி­டு­வது நல்­லது.

 10. இரவு உண­வுக்­குப் பின் பால், பழம் சாப்­பி­டு­வது நல்­லது.

11. ஒரு வேளை உண­வில் நெய் சேர்த்­துக் கொள்­ள­லாம்.

12. நான்கு மாதங்­க­ளுக்கு ஒரு முறை பேதி மருந்து மாதம் ஒரு முறை நசிய மருந்து பயன்­ப­டுத்­தி­னால் கண் சம்­பந்­தப்­பட்ட நோய்­கள் அக­லும்.

13. பித்­தத்தை அதி­க­ரிக்­கும் உண­வு­களை தவிர்க்­க­வும்.

14. மலச்­சிக்­கல் இல்­லா­மல் பார்த்­துக் கொள்ள வேண்­டும்.

15. உச்சி வெயி­லில் அலை­யக்­கூ­டாது.

முது­மை­யில் ஏற்­ப­டும் பார்வை குறை­பாட்டை ‘வெள்­ளெ­ழுத்து’ என்று அழைக்­கின்­ற­னர்.

 இது குண­மாக.....

  முருங்கை விதை – 100 கிராம், மிளகு  –  - 100 கிராம்.  இரண்

டை­யும் நன்­றாக கழுவி விட்டு மெழுகு போல் அரைத்து ஒரு வெண்­க­லத் தாம்­பா­ளத்­தி­னுள் தடவி வெயி­லில் வைத்­தால் தாம்­பா­ளம் சூடேறி எண்­ணெய் கசி­யும்.  அதனை வடி­கட்டி பத்­தி­ரப்­ப­டுத்­த­

வும்.  இந்த எண்­ணெய்யை ஒரு சொட்டு கண்­ணில் விட, வெள்­ளெ­ழுத்து பாதிப்பு குண­மா­கும்.

 பொது­வாக, கண்­க­ளில் வரும் நோய்­க­ளில் வய­தா­ன­வர்­க­ளூக்கு காணப்­ப­டு­வது கண்­புரை.இதை ஆங்­கி­லத்­தில் ` காட்­ட­ராக்ட்’ என்­பர். கண்­க­ளில் உள்ள லென்ஸ் ஒளி அனுப்­பும் தன்­மையை இழக்­கி­றது.  இத­னால் கண்­பார்வை குறை­கி­றது.

பிறந்­தது முதல், கண் லென்ஸ் ஒளிக்­க­திர்­களை விழித்­தி­ரைக்கு அனுப்பி,  கண் பார்வை தரு­கி­றது. கண்­புரை ஏற்­பட்­ட­பின் இது மாறு­ப­டு­வ­தால், பார்வை குறைவு ஏற்­ப­டு­கி­றது. கண்­புரை நோய்  40 வயது முதல் துவங்­க­லாம். முத­லில் தூரப்­பார்வை குன்­று­தல், வாக­னங்­கள் ஓட்­டு­வ­தில் சிர­மம் மற்­றும் பார்வை தன்மை குறை­பாடு ஆகி­யவை உண்­டா­கும். கண்­ணாடி எண்­கள் அடிக்­கடி மாறக்­கூ­டும். இவ்­வாறு ஏதே­னும் பிரச்னை இருந்­தால், கண் மருத்­து­வ­ரி­டம், கண் புரை நோய் இருக்­கி­றதா என்று பரி­சோ­தனை செய்து கொள்ள வேண்­டும்.

கண்­பு­ரையை அறுவை சிகிச்சை மூலம் சரி­செய்ய முடி­யும். கண் பார்வை குறை­பாட்டை சரி­செய்­ய­லாம்.   இதற்கு எளிய வழி இருக்­கி­றது. நாம் நம் வீட்டு அறை­யில் தின­மும் அகல் விளக்கு  ஏற்ற வேண்­டும். அந்த ஒளியை தின­மும் 15 நிமி­டங்­கள் பார்த்து வந்­தால் கண்­ணுக்கு நல்­லது.அந்த ஒளி­யி­லி­ருந்து வரும் ஒளியை கண் அசைக்­கா­மல் பார்க்க வேண்­டும். அப்­படி பார்க்­கும் போது நமது  மன­மும் அடங்­கும், கண்­க­ளுக்­கும் மிக­வும்

நல்­லது.                                            ***Trending Now: