கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 1–08–19

30-07-2019 05:25 PM

திரைப்படத்தில் வரும் உரைப்படம்...!

'சிகப்பு  ரோஜாக்­கள்' என்ற படம் ஒரு வெற்­றிப் படம். அந்­தப் படத்­தில் வரும் ஒரு காட்­சியை இந்­தப் பாடம் அடிப்­ப­டை­யா­கக் கொண்­டி­ருக்­கி­றது. அந்­தக் காட்­சி­யில் சில ஆங்­கில வாக்­கி­யங்­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தால் தான் இப்­படி.

'சிகப்பு ரோஜாக்­கள்' படத்­தில் கம­ல­ஹா­சன் பெயர், திலீப்.

படத்­தில் திலீப் ஏற்­று­மதி இறக்­கு­மதி (import export) நிறு­வ­னத்தை வெற்­றி­க­ர­மாக நடத்­தும் ஒரு தொழில் அதி­பர். அவர் தன்­னு­டைய பிறந்த நாளில் சென்­டி­ரல் ஜெயி­லுக்­குச் சென்று கைதி­க­ளுக்கு சில அன்­ப­ளிப்­பு­கள் கொடுக்­கி­றார் (He gives presents to convicts)

ஜெயி­லர் ராஜ­கோ­பால் இதை மேற்­பார்வை செய்­கி­றார்.

சில கைதி­க­ளின் விவ­ரங்­க­ளைக் கூறு­கி­றார்.

''பங்­கா­ளித் தக­ரா­றிலே ஒரு ஃபேமி­லிக்கே விஷம் வச்­சுட்­டான்'' (He poisoned an entire family…ஹீ பாய்­ஸன்ட்d ஆன் என்­டைர் ஃபேமிலி).

பங்­காளி என்ற சொல், ஒரு­வ­ரின் சொத்­தில் பங்­குள்ள அப்­பா­வின் சகோ­த­ரர்­க­ளின் பிள்­ளை­க­ளைக் குறிக்­கும். அதற்கு அக்­னேட் (agnate) என்ற ஆங்­கி­லச் சொல் இருந்­தா­லும் அது சிறப்­புச் சொல்லே அன்றி பொது­வான பேச்­சில் உள்ள சொல் அல்ல. ஆகவே 'பங்­கா­ளித் தக­ரா­றில்' என்­பதை, ''ஓவர் அ பிரா­பர்டி dடிஸ்­பி­யூட் வித் ரிலே­டிவ்ஸ்'' (over a property dispute with relatives) என்று மொழி பெயர்க்­க­லாம்.  

இப்­ப­டிக் கூறி­விட்­டுப், ''டேய் போடா…'' என்று அந்­தக் கைதியை விரட்­டு­கி­றார் ஜெயி­லர் (அவன் கொஞ்­சம் முறைத்­துப் பார்த்­தி­ருந்­தான் போலும்).

''இட்ஸ் ஆல் ரைட், '' (It’s all right) என்­கி­றார் திலீப். உண­வுப்­பொ­ருட்­களை அந்­தக் கைதிக்­கும் கொடுத்து அனுப்­பு­கி­றார். ''பர­வா­யில்­லை…­­வி­டுங்க'' என்ற பொரு­ளில் ''இட்ஸ் ஆல் ரைட்'' ,  வரு­கி­றது. அந்த நபரை அவ்­வ­ளவு கடிந்­து­கொள்­ள­வேண்­டாம் என்று பொருள். ''தண்­ட­னை­யைத்­தான் அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருக்­கி­றானே, விடுங்­கள்'' என்று அர்த்­தம். இட் இஸ் (It is) என்­ப­தன் குறுக்­கம் இட்ஸ் (it’s). 't' என்­ப­தற்­கும் 's' என்­ப­தற்­கும் இடை­யி­லான 'i'  விடு­பட்­டு­விட்­டது என்­ப­தைக்­கு­றிக்க it’s என்­ப­தில் அவற்­றுக்கு இடையே ஒரெ­ழுத்­தெச்­சக்­குறி இடம் பெற்­றி­ருக்­கி­றது.

ஒரு வீட்­டில், விருந்­தா­ளிக்­குக் காபி கொண்டு வந்து கொடுக்­கும் போது, விருந்­தா­ளி­யின் வெள்ளை சட்டை மீது கொஞ்­சம் காபி கொட்டி விட்­டது என்று வைத்­துக்­கொள்­ளுங்­கள். அய்யோ என்று வீட்­டுக்­கா­ரர் அல­றி­னா­லும், வந்த விருந்­தி­னர் ஜென்­டில்­மே­னாக இருந்­தால், ''இட்ஸ் ஆல்­ரைட்'' என்­பார். பர­வா­யில்லை என்று அர்த்­தம். என் வெள்­ளைச் சட்­டை­யில் காபி கொட்­டி­விட்­டதே என்று பதற வேண்­டாம் என்று பொருள்.

''இட்ஸ் ஆல் ரைட்'', என்­பதை வேறு வித­மா­க­வும் பயன்­ப­டுத்­த­லாம்…''தேட் gகய் இஸ் ஆல்­ரைட்'' (That guy is all right) என்­றால் ''அந்த ஆள் பொறுத்­த­மா­ன­வன்'' என்று பொருள்.

அடுத்­த­தாக, இன்­னொரு கைதியை ஜெயி­லர் ராஜ­கோ­பால் அறி­மு­கப்­ப­டுத்­து­கி­றார் (இன்­டி­ரோ­டி­யூஸ் introduce செய்­கி­றார்).

''ஹி இஸ் டெரிக் (He is Derrick..இவன் தான் dடெர்­ரிக்) …தங்க நகைக்­காக ஒரு அஞ்சு வயசு குழந்­தை­யைக் கழுத்தை நெறிச்­சுக்­கொன்­னுட்­டான்'' (ஹீ கில்ட்d அ ஃபைவ் இயர் ஓல்ட்d சைல்ட்d பை ஸ்டிராங்­ளிங் ஹர் He killed a five year old child by strangling her…இங்கே ஸ்டிராங்­கில் strangle என்­றால் கழுத்தை நெறித்­துக் கொல்­லு­தல் என்று பொருள்).

''நெக்ஸ்ட்'' (next அடுத்­தது)…. ஹி இஸ் ஆண்­டனி.. (He is Anthony). வைஃப் பேர்ல சந்­தே­கப்­பட்டு அவ­ளைக் கொலைப்­பண்­ணிட்­டான்….பட் நவ் ஹி ரிபென்ட்ஸ் ஃபார் இட்… (He murdered his wife as he suspected her fidelity. But now he repents for it)… தன் மனை­வி­யி­னு­டைய நடத்தை மீது சந்­தே­கப்­பட்டு அவ­ளைக் கொன்­று­விட்­டான்…­­பட் நவ் ஹீ ரிபென்ட்ஸ் ஃபார் இட்…­­ஆ­னால் அதைக் குறித்து இப்­போது வருந்­து­கி­றான்).

ரிபென்ட் (repent) என்­றால் செய்த குற்­றத்தை எண்ணி வருந்­து­வது, பச்­சா­தா­பப்­ப­டு­வது.

மேர்ரி இன் ஹேஸ்ட் அண்ட் ரிபென்ட் ஆட் லெஷர் (Marry in haste and repent at leisure) என்­பது ஒரு கூற்று. அவ­ச­ரப்­பட்­டுக் கல்­யா­ணம் செய்­து­கொண்டு ஆர அமர அதற்­காக  வருந்­து­வது என்று பொருள்.

இன்­னு­மொரு எடுத்­துக்­காட்டு வாக்­கி­யம். ''ஹீ இக்g­­னோர்ட்d ஹிஸ் பேரின்ட்ஸ் வென் தே வர் அலைவ் பட் ரிபென்ட்ஸ் வென் தே ஆர் டெட்d''. He ignored his parents when they were alive but repents when they are dead. பெற்­றோர் உயி­ரோடு இருக்­கும் போது அவர்­களை அசட்டை செய்­து­விட்டு, அவர்­கள் இறந்­த­பி­றகு தன் செய­லுக்­காக வருந்­து­கி­றான்.

இக்g­­னோர்… பொருட்­ப­டுத்­தா­மல் இருப்­பது….

ஹி இக்­னோர்ட்d ஹிஸ் பிர­தர்ஸ் இன்­வி­டே­ஷன் (He ignored his brother’s invitation). அவ­னு­டைய சகோ­த­ர­னின் அழைப்பை அவன் பொருட்­ப­டுத்­தா­மல் இருந்­தான், அசட்டை செய்­தான்.

‘‘சிகப்பு ரோஜாக்­கள் காட்­சிக்கு வரு­வோம். ஜெயி­லர் ராஜ­கோ­பால் திலீப்­பைப் பார்த்­துக் கேட்­கி­றார்…

''மிஸ்­டர் திலீப் ….இஃப் யூ டோன்ட் மைன்ட்…­­உங்க கிட்ட ஒரு சின்ன விளக்­கம் தெரிஞ்­சிக்­க­லாமா…''

(இப் யூ டோன்ட்t மைன்ட்d If you don’t mind -- உங்­க­ளுக்கு ஆட்­சே­பணை இல்லை என்­றால்…

உதா­ரண வாக்­கி­யம் -- இஃப் யூ டோன்ட் மைன்ட், ஐ வில் கோ டு பெட்d நவ் If you don’t mind I will go to bed now; உங்­க­ளுக்கு ஆட்­சே­பணை இல்லை என்­றால், அதா­வது நீங்­கள் தவ­றாக எடுத்­துக்­கொள்­ளா­மல் இருந்­தால், இப்­போது நான் படுக்­கப்­போ­கி­றேன்…)

ஜெயி­லர் ராஜ­கோ­பால் தொடர்­கி­றார்  -- ''நான் இங்கே டிரான்ஸ்ஃ­பர் ஆகி வந்து திரி யர்ஸ் ஆகுது. ஒவ்­வொரு வரு­ஷ­மும் உங்க பர்த்­டேக்கு தவ­றாம வர்­றீங்­க…­­எ­தா­வது பிரெ­செட் பண்­றீங்க குற்­ற­வா­ளிக்­கெல்­லாம்…­­இ­துக்­கெல்­லாம் ஏதா­வது ஆழ­மான கார­ணம் இருக்­க­ணம்னு நான் நினைக்­க­றேன்…­­ஆம் ஐ கரெக்ட்? ''

ஆம் ஐ கரெக்ட்? நான் சொல்­றது சரி­தானே?

அதற்கு திலீப், ''யெஸ் யூ ஆர் கரெக்ட்….'' என்­கி­றார். ஆமாம், நீங்க சொல்­வது சரி­தான்.

''என்­னு­டைய இந்த ஆக்­டி­வி­டீஸ்க்கு எல்­லாம் கார­ணம் மனி­தா­பி­மா­னம் தான்….''    

''யூ ஸி மிஸ்­டர் ராஜ­கோ­பால்'' (பாருங்க மிஸ்­டர் ராஜ­கோ­பால்), கூண்­டுக்கு உள்ள இருக்­கி­ற­வங்­க­ளைத்­தான் சமு­தா­யம் குற்­ற­வா­ளிங்­களா நினைக்­கு­து…­­கூண்­டுக்கு வெளியே எத்­த­னையோ குற்­ற­வா­ளி­கள் இருக்­காங்க''.

இதற்கு ஜெயி­லர் ராஜ­கோ­பால் கூறு­கி­றார் --- ''டெஃபெ­னெட்­லி…­­ஆனா வொன் திங்…Definitely, but one thing (நிச்­ச­யமா, ஆனா ஒரு விஷ­யம்…..) …விட்­னெஸ் கிடைக்­காத எத்­த­னையோ கேஸ்­கள்­ல…­­சின்ன சின்ன தடை­யங்­க­ளை­யும் சந்­தர்ப்ப சாட்­சி­யங்­க­ளை­யும்… நாங்க கண்­டு­பி­டிக்­கி­றோம்…ஸோ (So, அத­னாலே) நூற்­றுக்கு நூறு வெற்றி கிடைக்­கும்னு சொல்ல முடி­யாது இல்­லையா''.

திலீப் --- ''ஓ…யா….தேட் ஐ அக்­ரி…­­பட் யூ ஸீ மிஸ்­டர் ராஜ­கோ­பால்…100 குற்­ற­வா­ளி­கள் வெளியே இருக்­க­லாம்….ஒரு நிர­ப­ராதி கூட உள்ளே இருக்­கக் கூடா­து…­­ஆம் ஐ கரெக்ட்….’’

ஓ…யா….தேட் ஐ அக்ரி – ஆமாம்…­­ச­ரி…­­அதை நான் ஏற்­கி­றேன்…­­ஆனா பாருங்க மிஸ்­டர் ராஜ­கோ­பால், அ ஹன்ட்d­­ரெட்d கிரி­மி­னெல்ஸ் மே பி அவுட்­சைட்d…b­­பட் வொன் இன்­னொ­ஸென்ட் பர்­ஸன் மஸ்ட் நாட் பீ இன்­சைட்d…­­நீங்க ஒத்­துக்­கி­றீங்­களா''  (A hundred criminals may be outside but one innocent person must not be inside, do you agree?)

ஒப்­புக்­கொள்­கி­றேன் (ஐ அgக்ரி I agree) என்­கி­றார் ஜெயி­லர்!

காட்­சி­யின் முடி­வில், தன்­னு­டைய சொந்த வாழ­வின் அனு­ப­வம் கார­ண­மா­கத்­தான் இந்த ஜெயி­லுக்கு வந்து கைதி­க­ளு­டன் மனி­தா­பி­மா­னத்­தோடு நடந்­து­கொள்­வ­தாக திலீப் தெரி­விக்­கி­றார்.  மேற்­ப­டிக் காட்­சி­யோடு இந்­தப் பாடத்தை ஒப்­பிட்­டுப் பார்த்து, அதன் ஆங்­கில வச­னக் கூறு­க­ளைக் கவ­னித்­துப்­பா­ருங்­கள்.

சென்ற வாரப் பாடத்­தில், ஐ ஆம் ஹேப்பி தேட் யூ ஆர் ஹியர் என்­ப­தில், I am happy that you are here என்று இருந்­தி­ருக்­க­வேண்­டும்.

– தொடரும்

...vamanan81@gmail.com

vamananinsight.blogspot.in

Trending Now: