திறமையை தீர்மானிக்கிறது நிறமா? – பாரதா

30-07-2019 05:05 PM

பாரதா, சீரியல்களில் நடிப்பதற்கு முன், பல படங்களில் நடித்தவர். ‘தேன் மிட்டாய்’ படத்தில் அறிமுகமாகி பின்பு ‘நிரஞ்சனா,’ ‘அட்ரா மச்சான் விசிலு,’ ‘ரெண்டு கேடி மூணு கோடி,’ ‘மஞ்சள் ஆறு’ போன்ற படங்களில் நடித்தவர். நிறைய அவமானங்களை தாண்டித்தான் சில படங்களில் நடித்ததாக சொல்லும் அவர், இப்போது ‘தேவதையை கண்டேன்,’ ‘செம்பருத்தி’ ஆகிய சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

‘தேவதையை கண்டே’னில் ஈஷ்வர் ரகுநாதன் சகோதரியாகவும், ‘செம்பருத்தி’யில் வில்லியாகவும் பொளந்து கட்டிக் கொண்டிருக்கும் அவரை சந்தித்தபோது.....

       “‘செம்பருத்தி’யிலே நெகட்டிவ் கேரக்டர்ன்னு சொன்னபோது ரொம்ப யோசிச்சேன். ஏன்னா, இதுவரைக்கும் நெகட்டிவ் ரோல்ல நடிச்சதில்லே. அப்புறம், சரி... இது நமக்கு ஒரு சேலஞ்ச், நம்மள நிரூபிக்கிறதுக்கு ஒரு வாய்ப்புன்னு நினைச்சு ஒத்துக்கிட்டேன். முதல் ரெண்டு வாரங்கள்ல ஆடியன்ஸ்கிட்ட இருந்து நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ்தான் வந்துச்சு. ‘மித்ரா’ கேரக்டரை (கேரக்டர் பெயர்) ஏன் கதைக்குள்ளே கொண்டு வந்தீங்கன்னு திட்டு திட்டுன்னு திட்டிட்டாங்க. அந்த கமெண்ட்சை எல்லாம் பார்க்கும்போது கஷ்டமா இருக்கும். இதை அம்மாகிட்டயும் பிரண்ட்ஸ்கிட்டயும் சொல்லி அழுதேன். ஆனா, இப்போ எல்லா சூழ்நிலைகளும் மாறிடுச்சு.  வெளியே என்னை யாராவது பார்த்துட்டாங்கன்னா.... “ஆதியை உன் கூட சேர்த்து வைக்கிறேன், நீ  கவலைப்படாதே கண்ணு, ஆனா, பார்வதியை மட்டும் கொஞ்சம் பார்த்து செய், ரொம்ப கொடுமைப்படுத்திடாதேம்மா”ன்னு கோரிக்கை வைக்கிறாங்க. கார்த்தியை (’ஆதி’ கேரக்டரில் நடிப்பவர்) ரொம்ப பிடிக்கும். அவர் ‘ஆபீஸ்’ல நடிக்கும்போதே ரொம்ப பிடிக்கும். ஆனா, அவரோடு நடிப்பேன்னு நான் நினைச்சு கூட பார்க்கலே.

       ஐதராபாத், எனக்கு பூர்வீகம். நான் மாடலிங் பண்ணிக்கிட்டு இருக்கும்போது சினிமாவிலே நடிக்கிற வாய்ப்பு வந்துச்சு. ஆனா, அந்த சான்ஸ் ஈசியா வரலே. நிறைய அவமானங்களை சந்திச்சு சில படங்கள்ல நடிச்சேன். அவமானங்கள்ன்னா – நிறைய ஆடிஷன்ஸ்ல கலந்துக்கிட்டேன். நம்மள செலக்ட் பண்ணிடுவாங்கன்னு உறுதியா நம்புவேன். ஆனா, எந்த போன் காலும் வராது. இன்னும் சில இடங்கள்ல நீங்க செலக்ட் ஆயிட்டீங்கன்னு சொல்லிட்டு, கடைசி நேரத்திலே, தயாரிப்பாளர் வேணாம்னு சொல்லிட்டாரு அப்படீன்னு சொல்லிடுவாங்க. நீங்க கொஞ்சம் கறுப்பா இருக்கீங்க, உயரமா இருக்கீங்க அப்படீன்னு குறை சொல்லுவாங்க. ஆக, நிறம்தான் ஒருத்தரோட திறமையை தீர்மானிக்குதா உட்பட பல கேள்விகள் எனக்குள்ளே உருவாகும். அதை நினைச்சு அழவும் செஞ்சிருக்கேன். அப்புறம், ஒரு காலகட்டத்திலே, இதுதான் இயற்கை, நம்மால எதுவும் செய்யமுடியாதுங்கிற மனப்பக்குவம் வந்து பல கட்டங்களை தாண்டி வந்திட்டேன். ஆக, சினிமா வாய்ப்புகள் வந்தும்  எதிர்பார்த்த அளவுக்கு பேரு வாங்கி கொடுக்கலே. சான்சும் இல்லே. அப்புறம், விஜய் டிவியின் ‘ஜோடி நம்பர் 1’ 9வது சீசன்ல டான்ஸ் ஆடினேன். அதுக்கப்புறம், ‘செம்பருத்தி’யிலே நடிக்கிறதுக்கு சான்ஸ் வந்துச்சு. என்னோட திறமைக்கு கிடைச்ச பரிசாதான் இதை கருதுறேன்.  ‘செம்பருத்தி’க்கு பிறகு இப்போ நிறைய சினிமா வாய்ப்புகள் என்னை தேடி வருது. என்னை ஒரு நேரத்திலே வேணாம்னு நிராகரிச்சவங்களே போன் பண்ணி, எங்க படத்திலே நடிக்கமுடியுமான்னு கேக்கிறாங்க.  

என்னை நம்பி ரெண்டு சீரியல்கள்லயும்  முக்கியமான கேரக்டர்களை கொடுத்திருக்காங்க. அவங்க என் மேலே வச்சிருக்கிற நம்பிக்கையை காப்பாத்தணும்ங்கிறதுதான் இப்போதைய என் எய்ம். என்னோட ‘கனவு’ கேரக்டர்ன்னா ……… அது வில்லேஜ் கேர்ள்.

எங்க வீட்ல இப்போ எனக்கு ‘மாப்பிள்ளை’ பார்த்துக்கிட்டு இருக்காங்க.  லவ்வெல்லாம் பண்ணலே. புல் அண்ட் புல் அரேஞ்சுடு மேரேஜாதான் என் கல்யாணம் இருக்கும்.”
Trending Now: