ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 31–7–19

30-07-2019 04:49 PM

ராஜ இசை ரக­சி­யம்!

(சென்ற வாரத் தொடர்ச்சி...)

‘என்னை மான­முள்ள பொண்ணு இன்னு மது­ரை­யில கேட்­டாக’’ என்று ‘சின்­னப்­ப­சங்க நாங்க’ படத்­துக்­காக ஜானகி குழு­வி­ன­ரோடு பாடும் இந்­தப் பாடலை அதன் பல்­ல­வித் தொடக்க இசை­யாக மேற்­சொன்ன ‘‘கோட்­டையை விட்டு’’ பாட­லின் அதே இசையை இன்­னொரு படர்­த­லாக்கி பயன்­ப­டுத்தி இருப்­பார் ராஜா. இரண்டு பாடல்­க­ளும் இரு­வேறு உணர்­வி­ழை­க­ளாய் கேட்­ப­வர் மனங்­க­ளில் பெரு­கு­வது ராஜ -இசை -ரக­சி­யம்.

 ‘‘ஊரு விட்டு ஊரு வந்து’’ பாட­லின் ஆரம்­பத்தை கவ­னிக்­க­லாம். மெல்ல ஒரு பாடலை வெஸ்­டர்ன் முறைப்­படி எடுத்த எடுப்­பி­லேயே அத்­தனை பர­வ­ச­வே­கத்­தோடு வானே­கச் செய்­தி­ருப்­பார். மொத்­தப் பாட­லின் டப்­பாங்­குத்து தன்­மைக்கு எதி­ரான ஒரு ஆரம்­பம் என்­றா­லும் ஒரு உறுத்­த­லு­மில்­லா­மல் நேர்ந்­தி­ருப்­பது தான் ராஜா இசை­யின் சிறப்பு.

‘‘சோலைப்­பூ­வில் மாலைத்­தென்­றல்’’ பாடல் துவங்­கு­கை­யில் ஏற்­ப­டு­கிற உற்­சா­க­மா­கட்­டும், ‘‘மடை திறந்து தாவும் நதி­ய­லை­தான்’’ பாட­லின் உற்­சா­க­மா­கட்­டும், ‘‘அண்­ணாத்தே ஆடு­றார் ஒத்­திக்கோ ஒத்­திக்கோ’’ என்று ஆரம்­பிக்­கை­யில் ஏற்­ப­டு­கிற சந்­தோ­ஷ­மா­கட்­டும், ‘‘பொடி நடையா போற­வரே பொறுத்­தி­ருங்க நானும் வரேன்’’ பாட­லின் துவக்­க­மா­கட்­டும், ‘‘மாமா உன் பொண்­ணைக்­குடு’’ எனும் ரஜினி ஸ்டைல் சாங் துவங்­கு­மி­ட­மா­கட்­டும், இன்­னும் எத்­த­னையோ பாடல்­களை ஜஸ்ட் லைக் தட் ஆயி­ரம் முறை கேட்­டும் கடந்­தும் இருக்­கி­றோம். உற்­றுக் கவ­னித்­தால் அங்­கெல்­லாம் மாய­மீன் ஒன்று துள்­ளும்.

 இர­வின் பாடல்­க­ளா­கட்­டும், காமம் சொட்­டும் கானங்­க­ளா­கட்­டும், தன்­னு­டைய கையெ­ழுத்தை வித்­யா­சப்­ப­டுத்­து­வது ராஜ­வேலை. அவர் அள­வுக்கு இன்­னொ­ரு­வர் இல்­லவே இல்லை. மயக்­கும் ராத்­திரி நேரம் ‘‘ரயி­லடி ஓரம் ஏம்மா ஏம்மா தூரம்’’ என்ற பாட­லுக்­கும், ‘‘புண்­ணி­யம் தேடி காசிக்கு போவார்’’ இங்கு நம் நாட்­டி­னிலே பாட­லுக்­கும் இடையே தோன்­று­கிற ஒற்­று­மை­யைச் சென்­ற­டை­வது ஒளி­யு­மி­ழும் ஞான­வ­னத்தீ.

‘‘ஆத்­தாடி பாவாடை காத்­தாட’’ பாட­லின் மைய இழை­யா­கப் பெரு­கும் இசை சோக­மாய்ப் பெரு­க­வல்­லது. விர­சத்­துக்கு அரு­கா­மை­யில் உதிக்­கிற வார்த்­தை­கள் பாட­லெங்­கும் ததும்­பு­வது. அவற்­றைப் பாடிய ராஜா­வின் குரல் அந்­தப் பாட­லுக்கு ஒரு மலர்ச்சி குன்­றாத நல்­மா­லை­யாய்த் தன்னை அணி­விக்­கும். வேறா­ரால் வரும்..? ராஜ­வ­ரம்.

இத்­த­னைக்­கும் அப்­பால், ராஜா­வின் இந்த ஒரு பாடலை முன்­வைக்­கி­றேன்.

‘‘சக்­க­ரக்­கட்டி சக்­க­ரக்­கட்டி சந்­த­னப்­பெட்டி’’ என்ற பாடல் பார்த்­தி­பன்  –ஐஸ்­வர்யா நடித்த ‘உள்ளே வெளியே’ படத்­தில் இடம்­பெற்ற பாடல். இதைக் கண் மூடிக் கேட்­கும் போது ஒரு அனு­ப­வ­மாக மன­தில் தேங்­கும். பார்க்­கும் போது இன்­னொன்­றாய் விரி­யும். காட்சி பாடல்­க­ளுக்கு எந்த விதத்­தி­லும் ஊறு விளை­விக்­கா­மல் அதே நேரத்­தில் ஒரு மெல்­லிய சோக இசைப்­ப­ர­வ­லோடு இத்­தனை காதல் குறும்­புப் பாடலை வளர்த்­தெ­டுத்­தி­ருப்­பது வினோ­த­மான நல்­லிசை.

‘எங்க தம்பி’ படத்­தில் ‘‘இது மானோடு மயி­லா­டும் காடு’’ இன்­னொரு வைர­நி­கர்ப்­பாட்டு. இந்த பாட­லும் எதிர்­பார்ப்­பிற்­குள் ஒரு போதும் அடங்­கி­வி­டாத புத்­தம் இசை­யோடு மல­ர­வல்­லது.

இளை­ய­ராஜா இசை­யில் சின்­னச்­சின்­னத் தெளி­வு­க­ளைக் கண்­ட­றிந்து ரசிப்­ப­தற்­குப் பெரு­நெ­டுங்­கா­லம் அவ­சி­யம். ஆங்­காங்கே புலன், மயக்­கம் அவற்றை ஊடு­பா­வு­க­ளாக்கி அத்தியா­யங்­க­ளாய்ப் படர்த்­தும்.
Trending Now: