சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 402– எஸ்.கணேஷ்

23-07-2019 07:07 PM

நடி­கர்­கள்  :  விக்­ரம் பி­ரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா, ஜோ மல்­லூரி, அஸ்­வின் ராஜா, யார் கண்­ணன் மற்­றும் பலர்.

இசை : டி. இமான், ஒளிப்­ப­திவு : எம். சுகு­மார், எடிட்­டிங் : எல்.வி.கே. தாஸ், தயா­ரிப்பு : திருப்­பதி பிர­தர்ஸ் (என். லிங்­கு­சாமி, என். சுபாஷ் சந்­தி­ர­போஸ்), திரைக்­கதை,  இயக்­கம் :   பிரபு சால­மன்.

பொம்­மன் (விக்­ரம் பிரபு) தான் சகோ­த­ர­னாக எண்­ணும் யானை மாணிக்­கத்­து­டன், தனது மாமா கொத்­தலி(தம்பி ராமையா) மற்­றும் நண்பன் உண்­டி­ய­லோடு (அஸ்­வின் ராஜா) மகிழ்ச்­சி­யாக வாழ்ந்து வரு­கி­றான். கோயில் திரு­வி­ழாக்­கள் மற்­றும் திரு­மண நிகழ்ச்­சி­க­ளுக்கு மாணிக்­கத்தை அழைத்­துச் சென்று பிழைப்பு நடத்­து­கி­றார்­கள். தங்­களை நிகழ்ச்­சி­க­ளுக்கு அனுப்பி உத­வும் ஏஜன்ட்டிற்­காக (யார் கண்­ணன்) முதன்­மு­றை­யாக காட்­டிற்கு அரு­கில் உள்ள கிரா­மம் ஒன்­றுக்கு செல்­கி­றார்­கள். அர­சாங்­கத்­தின் உத­வி­கள் கிடைக்­காத நிலை­யில் தங்­க­ளது கிரா­மத்­தின் உயிர்­க­ளுக்­கும், பயிர்­க­ளுக்­கும் சேதம் விளை­விக்­கும் கொம்­பன் என்ற யானையை அடக்­கு­வ­தற்­காக அக்­கி­ரா­மத்­தின் தலை­வர் (ஜோ மல்­லூரி) கும்கி யானையை வர­வ­ழைக்­கி­றார். ஏஜன்ட் உண்­மை­யான கும்கி யானை­யோடு வரும் வரை சமா­ளிப்­ப­தாக கூறி மாணிக்­கத்­தோடு பொம்­மன் அக்­கி­ரா­மத்­தில் தங்­கு­கி­றான். தங்­களை காக்க வந்த தெய்­வ­மாக கருதி அம்­மக்­கள் இவர்­களை அன்­பாக நடத்­து­கி­றார்­கள்.

கொம்­ப­னின் நினைப்­பில் மாணிக்­கத்தை கண்டு பயப்­ப­டும் தலை­வ­ரின் மகள் அல்லி (லட்சுமி மேனன்) மெது­வாக மாணிக்­கத்­தோடு நட்­பா­கி­றாள். அல்­லியை கண்­ட­வு­டன் காத­லில் விழும் பொம்­மன், அவ­ளைப் பிரிய மன­மில்­லா­மல் மாணிக்­கத்­திற்கு கும்கி ஆவ­தற்­கான பயிற்­சியை அளிக்­கி­றான். தங்­க­ளது ஊர் கட்­டுப்­பா­டு­களை நினைத்து தயங்­கி­னா­லும் பிறகு அல்­லி­யும், பொம்­மனை விரும்­பு­கி­றாள். வேறு சில இடங்­க­ளில் கொம்­ப­னால் உயிர்­பலி நிகழ்ந்­தி­ருப்­ப­தாக கூறி வன அதி­காரி கிராம மக்­களை வெளி­யேற வற்­பு­றுத்­து­கி­றார். தங்­க­ளது இருப்­பி­டத்தை விட்­டுக்­கொ­டுக்க மறுக்­கும் மக்­கள் மாணிக்­கத்­தை­யும், பொம்­ம­னை­யும் நம்­பு­கி­றார்­கள்.

பயிர்­கள் அறு­வ­டைக்கு தயா­ரா­கும் நேரத்­தில் மாணிக்­கத்­திற்கு மத­நீர் சுரக்க பொம்­ம­னும் மற்­ற­வர்­க­ளும் வைத்­தி­யம் பார்க்­கி­றார்­கள். அறு­வடை சிறப்­பாக நடந்து ஆட்­டம்­பாட்­ட­மென மக்­கள் கொண்­டா­டும் வேளை­யில் கொம்­பன் திரும்ப வரு­கி­றான். பொம்­மனை காப்­பாற்ற மதம் பிடித்த மாணிக்­கம் கொம்­ப­னோடு போராடி வீழ்த்­து­கி­றது. படு­கா­யத்­து­டன் வீழும் மாணிக்­கத்தை காப்­பாற்ற மாமா­வை­யும், உண்­டி­ய­லை­யும் அழைக்­கி­றான் பொம்­மன். ஆனால் கொம்­ப­னால் நிகந்த விபத்­தில் ஏற்­க­னவே இரு­வ­ரும் இறந்­தி­ருக்க, அல்­லி­யின் அரு­கா­மை­யில் மாணிக்­க­மும் இறக்­கி­றான்.

தனது சுய­ந­லத்­தா ­லேயே இத்­தனை உயிர்­கள் பலி­யா­ன­தாக வருந்தி கத­றும் பொம்­மன் கிரா­மத்தை விட்டே போகி­றான். சிறு­வ­ய­தில் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் துணை­யாய் இருந்த மாணிக்­கத்­தைப் பற்­றிய பொம்­ம­னின் நினை­வு­க­ளோடு படம் நிறை­வேறு­கி­றது.Trending Now: