காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக பளு தூக்கும் வீராங்கனை - ஸ்டாலின் வாழ்த்து

19-07-2019 05:59 PM

சென்னை,

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக பளு தூக்கும் வீராங்கனை அனுராதாவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டம் வாரப்பூர் ஊராட்சி நெம்மேலிப்பட்டி கிராமம் பவுன்ராஜ் - ராணி தம்பதியரின் மகள் ப. அனுராதா.

ஆஸ்திரேலியா சமோவ் தீவில் உள்ள அபியா நகரில் நடைபெற்று வரும்,  2019-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு தமிழகத்தில் முதல் பெண்மணியாக தங்கம் வென்றுள்ளார்.

87 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு ஸ்னாச் முறையில் 100 கிலோவும்,

‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 121 கிலோ என்ற நிலையில் மொத்தம் 221 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார். அவருக்கு, என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு, மு.க. ஸ்டாலின் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.


அனுராதா தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் தொகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.Trending Now: