ஆயுத விற்பனை: ரஷியாவை முந்தும் அமெரிக்கா

19-07-2019 03:38 PM

அமெ­ரிக்க வெளி­நாட்டு அமைச்­சர் மைக்­கேல் பாம்­பியோ, சென்ற ஜூன் 26ம் தேதி வெளி­யு­றவு அமைச்­சர் எஸ்.ஜெய்­சங்­கரை சந்­தித்து பேசி­னார். அதற்கு முன் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கர் அஜித் தோவலை, அவ­ரது அலு­வ­ல­கத்­தில் சந்­தித்து பேசி­னார். பாம்­பியோ மன­தில் இந்­தியா 25 பில்­லி­யன் டாலர் மதிப்­பி­றகு பாது­காப்பு துறைக்கு தேவை­யா­ன­வற்றை வாங்­கு­வது குறித்து இருந்­தது.

இந்­தி­யா­வுக்கு வழக்­க­மாக ஆயு­தங்­கள் போன்­ற­வற்றை அதிக அளவு வழங்­கும் நாடு ரஷியா. இப்­போது ரஷி­யா­வின் ஏக­போ­கத்­திற்கு அமெ­ரிக்கா சவால் விடு­கி­றது. ஸ்டாக்­ஹோ­மில் உள்ள ‘இன்­டர்­நே­ஷ­னல் பீஸ் ரிசர்ச் இன்ஷ்­டி­யூ­டிட்’ தக­வல்­படி அமெ­ரிக்­கா­வில் இருந்து இந்­தியா பாது­காப்பு துறைக்கு ஆயு­தங்­கள் போன்­ற­வற்றை வாங்­கு­வது 2013ல் இருந்து 2018ம் இடைப்­பட்ட காலத்­தில் 569 சத­வி­கி­தம் அதி­க­ரித்­துள்­ளது. (ஐந்­தரை மடங்­குக்­கும் சிறிது அதி­க­மாக அதி­க­ரித்­துள்­ளது.) தற்­போது இந்­தியா அதன் பாது­காப்பு துறைக்­கான தேவை­க­ளில் 15 சத­வி­கி­தம் அமெ­ரிக்­கா­வி­டம் இருந்து வாங்­கு­கின்­றது. அதே நேரத்­தில் ரஷி­யா­வில் இருந்து பாது­காப்பு துறைக்கு தேவை­யா­ன­வற்றை இறக்­கு­மதி செய்­வது 58 சத­வி­கி­த­மாக குறைந்­து­விட்­டது. பத்து வரு­டங்­க­ளுக்கு முன்பு ரஷி­யா­வி­டம் இருந்து 76 சத­வி­கி­தம் இறக்­கு­மதி செய்­தது என்று கூறப்­பட்­டுள்­ளது.

பாது­காப்பு துறைக்கு தேவை­யா­ன­வற்றை வாங்­கு­வதை முடிவு செய்­யும் பாது­காப்பு திட்ட கமிட்­டி­யின் தலை­வ­ரான அஜித் தோவல், ரைசினா ஹில்ஸ்­சில் உள்ள அவ­ரது அலு­வ­கத்­திற்கு நேரில் வந்து பாம்­பி­யோவை வர­வேற்­றார். இது அஜித் தோவ­லின் வழக்­கத்­திற்கு மாறான நட­வ­டிக்கை. நரேந்­திர மோடி­யின் இரண்­டா­வது ஆட்சி காலத்­தில் அமெ­ரிக்­கா­வுக்­கும், இந்­தி­யா­வுக்­கும் இடையே உள்ள உறவு மிக சிறப்­பாக இருப்­பதை எடுத்­துக் காட்­டு­வ­தாக உள்­ளது என்று பார்­வை­யா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

2018ல் மட்­டும் அமெ­ரிக்­கா­வின் ராணு­வ­மான பென்­ட­க­னும், இந்­திய ராணு­வ­மும் ஐந்து பெரிய அளவு போர் பயிற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ளன. அத்­து­டன் 50க்கும் மேற்­பட்ட போர் பயிற்­சி­யி­லும் பங்­கேற்­றுள்­ளன. இந்த வருட கடை­சி­யில் இரு­நாட்டு முப்­ப­டை­க­ளும் போர் பயிற்­சி­யில் ஈடு­பட உள்­ளன. சென்ற வரு­டம் அமெ­ரிக்­கா­வும், இந்­தி­யா­வும்  காம்­காசா என்று சுருக்­கு­மாக கூறப்­ப­டும் [COMCASA–Communications Compatibility and Security Agreement] தக­வல் தொடர்பு மற்­றும் பாது­காப்பு ஒப்­பந்­தம் செய்து கொண்­டுள்­ளன. 2016ல் லாஜிஸ்­டிக் பரி­வர்த்­தனை ஒப்­பந்­தம் செய்து கொண்­டன. [Logistics Exchange Memorandum of Agreement--–LEMOA] கூடிய விரை­வில் அடிப்­படை பரி­மாற்­றம் மற்­றும் கூட்டு ஒப்­பந்­த­மும் (Basic Exchange and Cooperation Agreement) செய்து கொள்ள உள்­ளன. 2016ல் அமெ­ரிக்கா, இந்­தி­யா­வுக்கு பெரிய அள­வி­லான பாது­காப்பு கூட்­டாளி என்ற அந்­தஸ்தை வழங்­கி­யது. அப்­போ­தி­ருந்து இந்­தி­யா­வின் பாது­காப்பு துறைக்கு அமெ­ரிக்­கா­வின் பங்­க­ளிப்பு கணி­ச­மாக அதி­க­ரித்­துள்­ள­தாக பார்­வை­யா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர்.

இது வரை ரஷிய ஆயு­தங்­களை கையாண்டு வந்த ராணு­வத்­தி­னர், இனி எப்­படி அமெ­ரிக்க ஆயு­தங்­களை கையாள்­வார்­கள் என்ற பிரச்­னை­யும் எழு­கி­றது. ஆனால் ராணு­வத்­தைச் சேர்ந்த பலர் ரஷி­யா­வின் ஆயு­தங்­கள் கர­டு­மு­ர­டா­னவை என்­றும், அமெ­ரிக்க ஆயு­தங்­க­ளில் உள்ள நுட்­ப­மான தன்மை இல்லை என்­றும் கூறு­கின்­ற­னர்.

இது பற்றி ஓய்வு பெற்ற ராணுவ துணைத் தள­பதி லெப்­டி­னன்ட்.ஜென­ரல் மோகிந்­தர் பூரி கூறு­கை­யில், “சோவி­யத் யூனி­யன் உடைந்த பிறகு, ரஷி­யா­வின் ஆயு­தங்­களை கையாள்­வ­தில் பிரச்னை இருந்­தது. ஒரு நாட்டை மட்­டும் நம்­பா­மல் பல்­வேறு நாடு­க­ளி­டம் இருந்து ஆயு­தங்­களை வாங்­கு­வது நல்ல முயற்­சியே. ஆயு­தங்­களை கையாள்­வது, அதில் பயிற்சி அளிப்­ப­தில் பிரச்னை இருக்­காது என்று கரு­து­கின்­றேன்” என்று கூறி­னார்.

பாம்­பி­யோ­வின் விஜ­யத்­தின் போது, இந்­தியா ரஷி­யா­வி­டம் இருந்து வாங்­கப்­போ­கும் 5 பில்­லி­யன் டாலர் (500 கோடி டாலர்) மதிப்­பி­லான எஸ்–400 வான்­வெளி தாக்­கு­தல் பாது­காப்பு கவ­சம் தொடர்­பில், அமெ­ரிக்­கா­வின் தடையை பற்றி எப்­படி விவா­திப்­பது என்று இந்­திய அதி­கா­ரி­கள் மத்­தி­யில் கவலை இருந்­தது. அமெ­ரிக்­கா­வுக்கு இது போன்ற வர்த்­த­கத்­தில் இந்­தி­யா­வு­டன் கருத்து வேறு­பாடு இருப்­பதை பாம்­பியோ ஒத்­துக் கொண்­டார். ஆனால் எஸ்–400 வான்­வெளி தாக்­கு­தல் பாது­காப்பு கவ­சம் பற்றி கூறு­வதை தவிர்த்­தார். நண்­பர்­கள் மத்­தி­யில் கருத்து வேறு­பாடு இருக்­கும். இதை களை­யும் முயற்­சி­யில் ஈடு­பட வேண்­டும் என்று கூறி­னார்.    

அமெ­ரிக்­கா­வு­டன் பாது­காப்பு துறைக்கு தேவை­யான பல்­வேறு ஒப்­பந்­தங்­கள் செய்­யப்­ப­டு­கி­றது.  இந்­தியா சமீ­பத்­தில் கடற்­ப­டைக்­காக போயிங் பொசி­டான்–81 (பி–81) ரக பத்து கண்­கா­ணிப்பு விமா­னம் வாங்க ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. இதன் மதிப்பு 3 பில்­லி­யன் டாலர். இந்த ஒப்­பந்­தம் அமெ­ரிக்­கா­வு­டன் மற்ற நாடு­கள் ராணு­வத்­திற்கு தேவை­யா­ன­வற்றை வாங்­கும் திட்­டத்­தின் கீழ் இறுதி செய்­யப்­பட உள்­ளது. இந்­தி­யா­வின் நீண்ட கடற்­கரை பகுதி, கடல் பகு­தி­யில் இந்த பி–81 ரக விமா­னம் நீர்­மூழ்கி கப்­பல், கடல்­ப­கு­தி­யில் தாக்­கு­தல், உளவு பார்ப்­பது, கடல்­ப­கு­தில் ரோந்து போன்­ற­வை­க­ளுக்கு பயன்­ப­டும்.

இந்­திய கடற்­படை ஏற்­க­னவே 12 பி–81 ரக விமா­னங்­களை பயன்­ப­டுத்தி வரு­கி­றது. இந்த விமா­னங்­கள் தமிழ்­நாட்­டில் அரக்­கோ­ணத்­தில் உள்ள 312ஏ கடற்­படை விமான பிரி­வில் இயங்கி வரு­கின்­றன என்று அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர். இவற்­று­டன் தற்­போது கூடு­த­லாக நவீ­னப்­ப­டுத்­தப்­பட்ட பி–81 ரக விமா­னங்­கள் இணை­யும் என்று அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர்.

அமெ­ரிக்­கா­வி­டம் இருந்து இந்­தியா முப்­ப­டை­க­ளுக்­கும் 2.5 பில்­லி­யன் டால­ருக்­கும் அதி­க­மாக முப்­பது ‘ஸீ கார்­டி­யன்’ (பிரி­டி­டர்–பி) டிரோன் (ஆளில்லா விமா­னம்) வாங்க உள்­ளது. சமீ­பத்­தில் அமெ­ரிக்க நிர்­வா­கம், பிரி­டி­டர்–பி ரக டிரோன், இந்­தி­யா­விற்கு விற்­பனை செய்ய ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. இந்த டிரோன்­களை இந்­தியா வாங்­கி­னால்,  இதை வாங்­கும் நேட்டோ ராணுவ கூட்­ட­மைப்­பில் இல்­லாத முதல் நாடு என்ற பெரு­மையை இந்­தியா அடை­யும்.

சமீ­பத்­தில் அமெ­ரிக்­கா­வின் செனட் சபை, பாது­காப்பு துறைக்கு தேவை­யான ஆயு­தங்­கள் போன்­ற­வற்றை ஏற்­று­மதி செய்ய நேட்டோ ராணுவ கூட்­ட­மைப்­பில் உள்ள நாடு­க­ளுக்கு இணை­யான அந்­தஸ்தை இந்­தி­யா­வுக்கு வழங்­கும் சட்­டத்தை இயற்­றி­யுள்­ளது. ஏற்­க­னவே இது­போன்ற அந்­தஸ்தை இஸ்­ரேல், தென் கொரியா ஆகிய நாடு­க­ளுக்கு வழங்­கி­யுள்­ளது.

புது டெல்­லியை விமா­னங்­கள், ஏவு­க­ணை­கள் மூலம் தாக்­கு­வதை தடுக்­கும் வகை­யில் நவீன வான்­வெளி பாது­காப்பு அமைப்பை வாங்­கு­வ­தற்­காக இந்­தி­யா­வும், அமெ­ரிக்­கா­வும் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்­றன. இதற்கு 1 பில்­லி­யன் டால­ருக்­கும் அதி­க­மாக செல­வா­கும். “நேஷ­னல் அட்­வாண்ஸ்ட் சர்­பேஸ் டூ ஏர் மிஷில் சிஸ்­டம்–2 என அழைக்­க­ப­டும் அமைப்பு, புது­டெல்லி மீது விமா­னம், ஏவு­கணை தாக்­கு­த­லுக்கு தக்க பதி­லடி கொடுக்­கும்.

ஜனா­தி­பதி, பிர­த­மர் பய­ணம் செய்­யும் ஏர் இந்­தியா ஒன் விமா­னத்­திற்கு பாது­காப்பு அளிக்க இரண்டு ஏவு­கணை பாது­காப்பு அமைப்­பு­களை விற்­பனை செய்ய அமெ­ரிக்க ராணு­வ­மான பென்­ட­கன் சம்­ம­தித்­துள்­ளது. இதன் விலை 190 மில்­லி­யன் டால­ராக இருக்­கும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 2.6 பில்­லி­டன் டாலர் மதிப்­பிற்கு இரு­பத்து நான்கு எம்­ஹெச் 60 ரோமியோ சீஹாக் ஹெலி­காப்­டர்­களை விற்­பனை செய்­யும் ஒப்­பந்­தம் இறு­தி­யாக்­கப்­பட உள்­ளது. இந்த ஹெலி­காப்­டர்­கள் லாக்­ஹீட் மார்­டின் சிக்­ரோஸ்கி விமான தொழிற்­சா­லை­யில் உற்­பத்தி செய்­யப்­ப­டும். இந்த ஹெலி­காப்­டர்­கள் அமெ­ரிக்க அர­சுக்­கும், இந்­திய அர­சுக்­கும் இடை­யி­லான நேரடி வர்த்­த­கத்­தின் கீழ் வாங்­கப்­ப­டு­கி­றது. இதற்­கான ஒப்­பந்­தம் சில மாதங்­க­ளில் முடிந்­து­வி­டும். அடுத்த வரு­டம் முதல் ரோமியோ சீஹாக் ஹெலி­காப்­டர்­கள் வர தொடங்­கும் என்று அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர்.

1 பில்­லி­யன் டாலர் மதிப்­பில் ஆறு அப்­பாச்சி ரக ஹெலி­காப்­டர்­கள் வாங்­கும் திட்­ட­மும் உள்­ளது. இரண்டு இன்­ஜின்­கள் உள்ள அப்­பாச்சி ரக ஹெலி­காப்­டரை இரண்டு விமா­னி­கள் இயக்­க­லாம். இதில் பல நவீன எலக்­ட­ரா­னிக் அமைப்­பு­கள் உள்­ளது. இது தாக்­கு­தல் நடத்­தும் சிறந்த ஹெலி­காப்­டர் என கரு­தப்­ப­டு­கி­றது.

இத்­து­டன் கடற்­ப­டைக்கு 57 தாக்­கு­தல் நடத்­தும் ஜெட் விமா­னங்­கள் தேவைப்­ப­டு­கி­றது. இதற்கு போயிங் எப்–ஏ18 ரக போர் விமா­னங்­கள் சரி­யாக இருக்­கும் என கரு­தப்­ப­டு­கி­றது. லாக்­ஹீட் மார்­டின் நிறு­வ­னம் இந்­திய விமா­னப்­ப­டைக்கு பிரத்­யே­க­மாக எப்–21 ரக போர் விமா­னம் தயா­ரித்து வழங்க முன்­வந்­துள்­ளது. இந்­திய விமா­னப்­ப­டைக்கு 114 மீடி­யம் மல்டி ரோல் ஜெட் விமா­னங்­கள் வாங்­கும் டெண்­ட­ரில் எப்–21 ரக விமா­னம் தயா­ரிக்­கும் லாக்­ஹுட் மார்­டின் நிறு­வ­ன­மும் பங்­கேற்­றுள்­ளது.  

அமெ­ரிக்­கா­வின் கடற்­படை போர் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த (US Naval War College) பிராங்க் ஒ டோனெல் கூறு­கை­யில், “லாக்­ஹுட் மார்­டின் நிறு­வ­னம் எப்–21 ரக போர் விமா­னம் விற்­பனை செய்ய முன்­வந்­துள்­ளது.  இதை பா.ஜ., அரசு அர­சி­யல் ரீதி­யாக விட்­டுக் கொடுக்­கும் அணு­கு­மு­றையை கடைப்­பி­டித்து அணுக வேண்­டும். இந்த விமா­னத்தை இந்­தியா வாங்­கு­வ­தற்கு அமெ­ரிக்க அர­சும் துணை புரி­கி­றது. இந்­தி­யா­வில் போர் விமா­னங்­கள் தயா­ரிக்க வேண்­டும் (எப்–16 ரகம்) என்­ப­தும், இத­னால் அமெ­ரிக்­கா­வில் ஏற்­ப­டும் வேலை இழப்­பும், இந்த ஒப்­பந்­தம் ஏற்­பட தடை­யாக உள்­ளன. இந்­தியா எஸ்–400 பற்றி (ரஷி­யா­வி­டம் இருந்து வாங்க உள்ள எஸ்–400 வான்­வெளி தாக்­கு­தல் பாது­காப்பு கவ­சம்) அமெ­ரிக்­கா­வி­டம் எடுத்­துக் கூறு­வ­தில் தயக்­கம் காண்­பிக்க கூடாது.

இந்­தியா ரஷி­யா­வி­டம் இருந்து நவீன தொழில்­நுட்­பத்­து­டன் கூடிய ஆயு­தங்­கள் வாங்­கு­வதை நிறுத்த வேண்டு எனில், இந்­தி­யா­விற்கு அமெ­ரிக்கா நவீன தொழில்­நுட்­பங்­களை வழங்க முன் வர வேண்­டும். இவ்­வாறு நவீன தொழில்­நுட்­பத்தை வழங்க முன்­வ­ரா­மல், ரஷி­யா­வி­டம் இருந்து வாங்­கு­வது பற்றி புலம்­பு­வ­தில் அர்த்­தம் இல்லை என்­பதை தெளி­வு­ப­டுத்த வேண்­டும்” என்று கூறி­னார்.  

அப்­சர்­வர் ரிசர்ச் பவுண்­டே­ச­னில் பாது­காப்பு தொடர்­பான ஆய்வு தலை­வ­ரும், லண்­ட­னில் உள்ள கிங் காலேஜ்­சில் சர்­வ­தேச உறவு பிரிவு பேரா­சி­ரி­ய­ரு­மான ஹார்ஸ் வி.பண்ட் கூறு­கை­யில்,

“தற்­ச­ம­யம் இந்­தி­யா­வுக்­கும்–­அ­மெ­ரிக்­கா­வுக்­கும் இடை­யி­லான உற­வில் பாது­காப்பு துறை முக்­கிய இடத்­தில் உள்­ளது. வர்த்­தம், ஈரான் போன்ற சர்­வ­தேச அர­சி­யல் விவ­கா­ரங்­க­ளில் இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான உறவு சரி­யாக இல்­லா­விட்­டா­லும் கூட, இரு நாடு­க­ளும் பாது­காப்பு அம்­சத்­தில் அக்­க­றை­யாக உள்­ளன. அமெ­ரிக்­கா­வின் அக்­க­றையை இந்­தி­யா­வால் புரிந்து கொள்ள முடி­யும் என்று கரு­து­கின்­றேன். இந்­தி­யா­வுக்கு பாது­காப்பு துறைக்கு தேவை­யா­ன­வற்றை எந்த நாட்­டி­டம் இருந்து வாங்க வேண்­டும் என்­ப­தில் தெளி­வாக மாற்­றம் இருப்­பது தெரி­கி­றது” என்று கூறி­னார்.

இத்­தா­லி­யைச் சேர்ந்த ஆங்­கி­லோ–­இத்­தா­லி­யன் நிறு­வன தயா­ரிப்­பான அகஸ்­டா­வெஸ்ட்­லேண்ட் வி.வி.ஐ.பி ஹெலி­காப்­டர் அல்­லது பிரான்ஸ் நாட்­டில் இருந்து ரபேல் போர் விமா­னம் வாங்­கு­வ­தில் ஊழல் உட்­பட பல குற்­றச்­சாட்­டு­கள் எழுந்­தன. அதே நேரத்­தில் அமெ­ரிக்­கா­வி­டம் இருந்து ஆயு­தங்­களை வாங்­கு­வ­தில் எவ்­வித புகாரோ குற்­றச்­சாட்டோ எழுந்­த­தில்லை.

இந்­தியா பாது­காப்பு துறைக்கு தேவை­யான ஆயு­தங்­கள் போன்­ற­வை­களை வாங்­கு­வ­தில், மிக­வும் நெருக்­க­டி­யான நிலையை எதிர்­கொள்ள வேண்­டி­ய­துள்­ளது என்று பாது­காப்பு துறை ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர். “அமெ­ரிக்கா இடை­வி­டா­மல் அழுத்­தம் கொடுக்­கும். ரஷிய ஆயு­தங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில், அமெ­ரிக்க ஆயு­தங்­கள் விலை அதி­கம்” என்று பாது­காப்பு துறை­யைச் சேர்ந்த அதி­காரி தெரி­வித்­தார்.

நன்றி: தி வீக் இத­ழில் பிர­திப் ஆர்.சாகர்.